‘‘குழந்தைகளோடு வீட்டில் இருந்தாலென்ன’ மனைவியின் மெல்லிய முணுமுணுப்பைத் தவிர்த்து ஐந்து மணி நேரம் பஸ் பிரயாணம் செய்து, பாலய சினேகிதனை பார்க்கச் சென்றான் இவன். பஸ் மெல்லப் போவதாக எரிச்சல் பட்டுக்கொண்டான்.
வெயிலில் போய் நின்றவனை ”எவ்ளோ நாளாச்சு” என்று ஆசையாய் வரவேற்று உட்கார வைத்தான் அவன். தொடர்ந்து “எப்படிரா இருக்கே” என்ற அவனின் செல்போன் அழைத்தது.
பேசிமுடித்து “அப்புறம்” என்றான், திரும்பவும் போன் அழைத்தது. இவன் சங்கடத்தோடு சிரித்துக்கொண்டான்.
பிறகு, ”சாப்பிட்டாயா” என்றான்.அவன்.
“வரும் வழியிலேயே சாப்பிட்டேன் “ என்றான் இவன். திரும்பவும் போன். அவன் முன்னே இவன் அமைதியாய் உட்கார்ந்திருந்தான். இடையில் டீ குடித்தார்கள் சில வார்த்தைகள் பேசினார்கள்.
“சரிடா, கெளம்புறேன், இப்ப பஸ் ஏறினாத்தான் திருநெல்வேலியில் இருந்து ஊருக்கு கடைசி பஸ்ஸை பிடிக்க முடியும்” என்றான் இவன்.
“இரேண்டா, நாளைக்குப் போகலாம்”
“இல்லடா, இன்னொரு நா வர்றேன்”
பஸ் ஸ்டாண்ட் கொண்டு வந்துவிட்டான் அவன். பெரும் கூட்டமாய் இருந்தாலும் வெறுமையாய் இருந்தது இவனுக்கு.
அங்குமிங்கும் சென்று பார்த்து, ”டேய், திருநெல்வேலிக்கு பஸ் அங்க நிக்குது” என்று அழைத்துச் சென்றான் அவன்.
பஸ் ஏறி ஜன்னலோரம் உட்கார்ந்து, “சரி, நீ வேண்ணா கிளம்பு, பார்ப்போம்” என்றான் இவன்.
இவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அருகில் வந்து “ஒங்கிட்ட ஒண்ணுமே பேசலடா” என்றான். கையைப் பிடித்தான். அவனது குரல் கம்மியது போலிருந்தது.
“பார்த்தாச்சுடா அது போதும்” என்று இவன் சொல்லியபோது பஸ் புறப்பட்டது. ஊரைத் தாண்டியதும், தனது பையில் இருந்து செல்போனை எடுத்து ஆன் செய்தான் இவ்ன். அழுகையாய் வந்தது.
unmaiyana natpu kadaisi variyil manathai varutiyathu.
பதிலளிநீக்குvazhththukkal.
நண்பரிடம் என்று மட்டும் அல்ல, சில நேரங்களில் சகோதரர்களை பார்க்க போகும் பொது கூட இந்த உணர்வு ஏற்படும். அவர்களிடம் அதிகம் பேச மாட்டோம், இருந்தாலும் அவர்களின் அருகாமையில் ஆறு நிமிடங்கள் இருப்பதே ஆறு மணி நேரம் பேசிய திருப்தியை, சந்தோச உணர்வை தனது விடும்.
பதிலளிநீக்குநமக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், நம்மை கவனிக்கவும் இந்த உலகத்தில் ஆள்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை தருவதால் தான், இத்தகைய சந்திப்புகள் மகிழ்ச்சியை அளிக்கின்றன.
மனதை தொட்டது ,நினைவுகளுடன்
பதிலளிநீக்குஎனக்கும் இதே போன்றொரு நிகழ்வு நினைவில் இருந்தது, நினைவூட்டியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதலைப்பை நட்புன்னு வச்சிருக்கலாம்.
பதிலளிநீக்குநல்லாருக்கு.
அருமையான பதிவு.
பதிலளிநீக்கு\\“பார்த்தாச்சுடா அது போதும்” என்று இவன் சொல்லியபோது பஸ் புறப்பட்டது. ஊரைத் தாண்டியதும், தனது பையில் இருந்து செல்போனை எடுத்து ஆன் செய்தான் இவ்ன். அழுகையாய் வந்தது.\\
-)))
நம் அனைவரின் வாழ்விலும் நடக்கின்ற யதார்த்தை அழகாக எழுதிருகிரீர்கள்.....
பதிலளிநீக்குஇந்த செல்போன் வந்ததிலிருந்து மனிதர்கள் மிகவும் குணம் மாறிவிட்டது. அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிது நண்பனுக்கும் கொடுத்திருக்கலாம். அருமையான கரு. வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்கு//ஊரைத் தாண்டியதும், தனது பையில் இருந்து செல்போனை எடுத்து ஆன் செய்தான் இவன்// கதையின் கருவை எடுத்துச் சொல்ல்லும் வரி... போதிநிலாவும் தூரமும் சிறப்பாக இருக்கின்றன
பதிலளிநீக்குMr.Mathavaraj,
பதிலளிநீக்குWhenever we meet our good friends we have that feeling. The same when we meet our brothers & sisters. This is because a long disassociation makes peolpe feel so. If we are living with all our loved ones for ever we may like to depart. Since i dont know to type in Tamil i am typing in English. We can often meet. I kow ur brother Mr.Thiyagarajan because i am from DCW now Mr.Mohn's college.
K.Subramanian
Yes. அருமை நண்பரே! எவ்வளவு உயரத்திலும் தூரத்திலும் இருந்தாலும் நட்புக்காக தேடி வருகின்ற நண்பர் எனக்கும் இருப்பது, உங்கள் பதிவின் மூலம் பெருமையுடன் நினைவு கூற முடிகிறது. நன்றி!
பதிலளிநீக்குஅருமையான பதிவு.. மனதை மிகவும் தொட்டது
பதிலளிநீக்குஎல்லோருக்கும் வரும் அழுகையை திரியேத்தி விட்டுட்டியே மாது.
பதிலளிநீக்குநான் ஒரு பெரிய,புதிய,கதையோ எனத்தொடர்ந்தேன்.
சடீரென ஒரு மொட்டு உப்பு உதிர முடிந்து போச்சு.
//“பார்த்தாச்சுடா அது போதும்”//
பதிலளிநீக்குஎவ்வளவு அன்பும், பாசமும் இந்த வரிகளுக்குள் அடங்கிக்கிடக்கிறது, பீரிடமுடியாத நிலையில்.....
மனதைத் தொட்டது தூரம்.
பதிலளிநீக்குநிகழ் கால நெருடலை வெளிச்சம் போட்டு காட்டி இருக்குறீர்கள்...
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க... நானும் மொதல்லயெல்லாம் ஆஃப் பண்ணிடுவேன், நண்பர்களோட இருக்கும்போது... அப்புறம் நான் திருந்திட்டேன்... இப்பல்லாம் ஆஃப் பண்ணறதில்ல.. :)
பதிலளிநீக்குA very nice post.
பதிலளிநீக்குRegards
R Gopi
நெகிழ்ச்சியையும், தங்கள் பார்வைகளையும் இங்கே பகிர்ந்துகொண்ட
பதிலளிநீக்குசெ.குமார்,
ராம்ஜி யாஹூ!,
நண்டு @ரொண்டு,
பீர்,
ஆடுமாடு,
அம்பிகா,
ஜோதி,
வில்சன்,
ஆதி,
கே.சுப்பிரமணியன்.
சேது,
விக்னேஷ்,
காமராஜ்,
க.பாலாசி,
அன்புடன் அருணா,
rasarasachozhan,
D.R.Ashok,
R Gopi
அனைவருக்கும் எனது நன்றி.
மனதைத் தொட்ட பதிவு
பதிலளிநீக்குஇந்த அனுபவம் எனக்கும் உண்டு. நட்பில் பல சமயங்களில் மௌனமே மொழியாகிவிடுகிறது.
பதிலளிநீக்குநரேன்!
பதிலளிநீக்குநன்றி.
ரவிசங்கர்
நன்றி.