நானும் என் சொற்சித்திரங்களும்!

பாவம், அந்த நாய்’ சொற்சித்திரத்தை தீராதபக்கங்களில் வெளியிட்டுவிட்டு, தொழிற்சங்கப் பணி நிமித்தம் விருதுநகர் சென்றுவிட்டேன். அங்கிருந்து திருச்செந்தூருக்குப் போய் இரவு பதினோரு மணிக்குத்தான் வீடு திரும்பினேன். இடையில் என் மீது பிரியமும், மரியாதையும் கொண்டிருக்கிற சில பதிவுலக நண்பர்கள் போன்செய்து “என்ன நீங்களே இப்படி எழுதலாமா?” என வருத்தப்பட்டார்கள். ”அவரது புனைவுக்கும், உங்கள் சொற்சித்திரத்துக்கும் என்ன வித்தியாசம்?” என்றெல்லாம் கூட கேட்டார்கள். நான் அந்தப் பதிவு குறித்து, எனது கருத்துக்களைத் தெரிவித்தேன். சிலருக்கு அது திருப்தியாக இருந்தது. சிலருக்கு இல்லை. வந்த பாராட்டுக்களைப் பற்றி இங்கு சொல்லத் தேவையில்லை. வீட்டில் வந்து கணிணித் திறந்தால், சில நண்பர்கள் எனது இ-மெயிலில் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்கள். தமிழ்மணத்தில் ஆசைதீர பாஸிட்டிவ் ஓட்டுக்களும் நெகட்டிவ் ஓட்டுக்களும்! பின்னூட்டங்களிலும் சில கண்டனங்கள். எதிர்ப்பதிவுகளும் அரங்கேறி இருந்தன. எல்லாவற்றையும் ரசிக்கிற ,மனநிலையே எனக்கு இருந்தது.

என்னைப் பற்றிய அவதூறுகளும், தனிப்பட்ட விமர்சனஙகளுமாய் மட்டுமே இருந்தால் நான் இங்கு பேசியிருக்கவே மாட்டேன். ஒரு படைப்பு குறித்த விசித்திரமான பார்வையாகயும், புரிதலாகவும் இருப்பதால் சில விளக்கங்களை சொல்லித்தான் தீரவேண்டும். ஒரு படைப்பாளனுக்கு இது ஒருவகையான துரதிர்ஷ்டமே எனினும், வேறு வழி இப்போது தெரியவில்லை. ஒரு படைப்பையும், அதன் படைப்பாளியையும் எப்படி பார்ப்பது என்னும் விஷயமறிந்த, விவாதங்கள் புரிந்த ஒரு மாபெரும் சபையில், அதன் அரிச்சுவடிப் பாடத்தை அடியேன் பேச நேர்வது துரதிர்ஷ்டம்தானே!

தேர்ந்த இலக்கியப் பார்வை கொண்ட நவபாரதி அவர்கள், எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்புகளுக்கு எழுதிய முன்னுரையில் , “படைப்புகளுக்கு வெளியில் படைப்பாளன் பேசும் சொந்தக் கருத்துக்கள், பார்வைகள், இலட்சியங்கள், மதிப்புகளை விடவும் மிக உயர்வானவற்றை, அல்லது நேர் எதிரானவற்றை அவர்களது படைப்புகளிலிருந்து வாசகர்கள் உணர்கிறார்கள். இது படைப்பு உலகின் முரண்பாடுகளில் ஒன்று.” எனக் குறிப்பிடுவார். ஆனால் இங்கு அப்படி உணராமல் போனது ஒரு முரண்பாடுதான்!

படைப்பு என்பது, ஒரு படைப்பாளியின் மூக்குக் கண்ணாடியோ அல்லது முகம் காட்டும் கண்ணாடியோ அல்ல. அது காலத்தின் கண்ணாடி. என் படைப்புகள் அப்படிப்பட்ட்வையே. படைப்புக்கு வெளியே நான் பேசுகிற கருத்துக்களில், வெளியிட்ட கருத்துக்களில் தனிப்பட்ட பார்வைகள் இருக்கலாம். என் படைப்புகளில் அவை நிச்சயம் இருக்காது. அப்படி இருந்தால் அது படைப்பின் தர்மம் ஆகாது.

அந்தரத்தில் காய்த்துத் தொங்குவதில்லை எந்த படைப்பும், யாருக்கும்! வாழ்வின் அனுபவங்களிலிருந்தே உருப்பெருகின்றன.. கண்டது, கேட்டது, புரிந்தது இவற்றிலிருந்தே முளைவிடுகின்றன். தனிப்பட்ட அந்த விஷயத்தை பொதுமைப்படுத்துவதில்தான் ஒரு படைப்பின் வெற்றி இருக்கிறது.

சி.சு.செல்லப்பாவின் ‘சரசாவின் பொம்மை’ தமிழ் இலக்கியப்பரப்பில் மிக முக்கியமான சிறுகதை. சரசா என்னும் பெண்குழந்தை எப்போதும் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டு இருக்கும். பொம்மைகள் இல்லை என்றால் அழும். அவனது அத்தான் அவளுக்கு பொம்மைகள் கொடுப்பதும், அழும்போதெல்லாம் அவளை சமதானப்படுத்துவதுமாய், சிரிக்க வைப்பதுமாய் இருப்பான். அவளது பால்ய காலத்தின் மிக நெருக்கமான மனிதனாய் இருபபான். படிப்பு, வேலை என வெளியூர் சென்றுவிடுவான். பல வருடங்கள் கழித்து சரசாவை சந்திப்பான். அவளது அழகும், வனப்பும் அவனை பிரமிக்க வைக்கும். அவளோ, சிறுவயதில் தன நேரங்களையெல்லாம் அழகாக்கிய அவனை மிக சாதாரணமாகவே பார்ப்பாள்.. இந்த இடத்திற்குப் பிறகு, எழுத்தாளர் சி.சு.செல்லப்பா அவனது முதல் மனைவி இறந்துவிடுவதாகவும், சரசாவை இரண்டாவது மனைவியாக மணந்துகொண்டதாகவும் எழுதி முடித்து மணிக்கொடிக்கு கதையை அனுப்புகிறார். அதன் ஆசிரியரும் எழுத்தாளருமான பி.எஸ்.ராமையா கதையின் தலைப்பை ‘சரசாவின் பொம்மை’ என மாற்றி, கதையின் முடிவையும் மாற்றி இருந்தார். சரசாவின் கண்களில், நடவடிக்கைகளில் அவன் மிது ஈர்ப்பும், லயிப்பும் காணாததைக் கண்ட அவன், தானும் சரசாவுக்கு சிறுவயதில் ஒரு பொம்மையாய் இருந்திருப்பதாய் நினைத்து மீள்வதாய் கதை முடியும். இந்த முடிவுதான் அந்தக் கதைக்கு பெரும் அந்தஸ்தையும், அர்த்ததையும் தந்தன என்கிறார் சி.சு.செல்லப்பா. இரண்டாம் திருமணமாக கதையை முடித்திருந்தால் அதில் பொதுத்தன்மை பெரிதாய் இருந்திருக்காது. சரசாவின் பொம்மையாக முடித்திருந்ததில் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. வாசிக்கிற அனைவருக்கும், கதை ஒரு நிழலாய் படியும். சிறுதென்றலாய் நினைவுகளை மீட்டும். இதுதான் ஒரு படைப்பின் முழுமை.

இந்தப் புரிதலோடு ‘பாவம், இந்த நாய்’ என்னும் சொற்சித்திரத்தை வாசிக்க நேர்ந்தால், இந்த முரண்பாடுகள் நேர்ந்திருக்காது. அந்த நாய் என்பது யாரையோ தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டதாய் நினைத்துக்கொள்ள அந்த சொற்சித்திரத்தில் என்ன இருக்கிறது?  தூக்கியெறியப்பட்ட, பழைய விஷயங்களை வைத்துக்கொண்டு நாய் படும் அவஸ்தை இங்கு யாருக்கு நேரவில்லை?. எல்லோருக்கும் எதோ ஒரு வகையில், வாழ்க்கையில் நேர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படித் தவிக்கிற அனைவருமே நாய்தான். இந்தக் கண்ணாடியை நான் ஒரு படைப்பாக பொதுவில் வைத்திருக்கிறேன். யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கு ஏன் இத்தனை மன வருத்தங்கள்?

இப்போது சொல்கிறேன். அந்த நாய் நானும்தான்! அந்த பழையதுணி நானும்தான்!! யாரும் வருத்தப்பட்டு பாரங்களைச் சுமக்க வேண்டாம்!!!

கருத்துகள்

24 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //தூக்கியெறியப்பட்ட, பழைய விஷயங்களை வைத்துக்கொண்டு நாய் படும் அவஸ்தை இங்கு யாருக்கு நேரவில்லை?. எல்லோருக்கும் எதோ ஒரு வகையில், வாழ்க்கையில் நேர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படித் தவிக்கிற அனைவருமே நாய்தான். //

    ஆழமான வரிகள். எனக்கு முந்தைய கதையும் அதான் உடனான தொடர்பு தெரியாது...கவலையும் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப‌ க‌ரெக்டா சொன்னீங்க‌ திரு.மாத‌வ‌ராஜ் "ப‌டைப்பைத்தான் பாக்க‌ணும், ப‌டைப்பாளிய‌ பாக்க‌க்கூடாது"ன்னு. விருதுந‌க‌ர் (அ) திருச்செந்தூர்ல‌‌ எதும் போதிம‌ர‌ம் இருக்கான்னு விசாரிக்க‌ணும்.

    ஒருத்த‌னை ஒரு வார்த்தையில‌ நாய்னு திட்டிட்டு 100 வார்த்தையில‌ அது அந்த‌ அர்த்த‌த்துல்ல‌ சொல்ல‌லைன்னு சொல்லிட்டா இல்லைன்னு ஆகிடுமா? ந‌ல்லா இருக்குங்க‌ உங்க‌ நியாய‌ம்.

    இதை எழுதுன‌துக்காக‌ க‌ழுதை ஒண்ணு குப்பைதொட்டியில‌ விளையாடுதுன்னு அடுத்த‌ புனைவு, ஸாரி, சொற்சித்திர‌ம் என்னை வெச்சி எழுதிடாதீங்க‌.. ஏற்க‌ன‌வே ந‌சுங்கிப்போன‌ உங்க‌ளோட‌ சொம்பு இன்னும் எவ்வ‌ள‌வு அடிதான் தாங்கும்!!!

    பதிலளிநீக்கு
  3. முனியாண்டி!
    புரிதலுக்கு நன்றி.

    வெண்பூ!
    உங்கள் புரிதலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சார், நான் இலக்கிய வாசிப்பே இல்லாதவன்.. ஆகையால் உங்கள் பார்வையில் ஒரு பாமரன் என்றே வைத்துக்கொள்வோம்..

    படைப்புக்களின் குறியீடுகளையும், படைப்பாளி கடந்து செல்லும் கால அனுபவ வெளியினையும் அறியத்தெரியாதவன்..

    இவை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்க்கையில், உங்கள் கடந்த இரண்டு சொற்சித்திரங்களின் பொருள் மற்றும் காலத் தேவைகளை அறிய வரும்போது வரும் மனநிலை என்னவாக இருக்கமுடியும்?

    பதிலளிநீக்கு
  5. அந்தரத்தில் காய்த்துத் தொங்குவதில்லை எந்த படைப்பும், யாருக்கும்! வாழ்வின் அனுபவங்களிலிருந்தே உருப்பெருகின்றன..
    //


    இது பொற்சித்திரத்துக்கு மட்டும் பொருந்துமா??
    இல்லை புனைவுக்குமா ??

    பதிலளிநீக்கு
  6. செந்தில் குமார் வாசுதேவன்!

    நிச்சயமாய் நான் உங்களை பாமரன் என்று கருதமாட்டேன்.

    அப்படி ஒதுக்கிவிட்டுப் பார்க்க முடியாது படைப்பைப் பொறுத்த வரையில் என எண்ணுகிறேன்.

    ஒரு படைப்பு வெளியானதும், படைப்பாளி அதனிடமிருந்து அந்நியமாகிப் போகிறான். அவனையும் படைப்பு விட்டு வைப்பதில்லை. அவனும் விதி விலக்கல்ல. அவனையும் சேர்த்தே விமர்சனம் செய்கிறது.

    எனக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளரும், நல்ல பேச்சாளருமான ஒருவரிட்ம ஒரு இரவில் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். தூரத்தில் எதோ கூட்டம் நடைப்ற, யாரோ ஒருவர் சத்தம் போட்டு பேசியது மைக்கில் கேட்டது. அவர் “இவன் ஏன் இப்படி கரடி மாதிரி கத்துறான்” என்றார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, “என்னையும் இப்படித்தானே சொல்லியிருப்பார்கள்” என அவரேச் சொன்னார். ஒரு பேச்சாளனுக்குள் இருந்த படைப்பாளி வெளிப்பட்ட இடம் அது என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. மின்னுது மின்னல்!
    சொற்சித்திரமோ, புனைவோ நல்ல படைப்புக்கு பொருந்தும்!

    பதிலளிநீக்கு
  8. சொற்சித்திரமோ, புனைவோ நல்ல படைப்புக்கு பொருந்தும்
    //


    பொற்சித்திரம் நல்ல படைப்பா??

    நேரடியா பதில் சொல்லுங்க பிளிஸ்

    பதிலளிநீக்கு
  9. It doesn't make any sense Mathavaraj...

    You are simply justifying / covering your mistake....

    பதிலளிநீக்கு
  10. // எல்லோருக்கும் எதோ ஒரு வகையில், வாழ்க்கையில் நேர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படித் தவிக்கிற அனைவருமே நாய்தான். //
    உண்மை....

    பதிலளிநீக்கு
  11. "Casting pearls in front of swines" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. நீங்கள் என்ன தான் விளக்கம் சொன்னாலும் சிலருக்குப் புரியவே போவதில்லை என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

    தயவு செய்து இனி வெறும் வாய்களுக்கு அவல் கொடுக்காதீர்கள். உங்கள் தளம் வேறு.

    திசை திருப்பிகள் துரிதமாகச் செயல்படுகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. :(

    பதிலளிநீக்கு
  12. ****
    ஒரு படைப்பு வெளியானதும், படைப்பாளி அதனிடமிருந்து அந்நியமாகிப் போகிறான். அவனையும் படைப்பு விட்டு வைப்பதில்லை. அவனும் விதி விலக்கல்ல. அவனையும் சேர்த்தே விமர்சனம் செய்கிறது.
    ****

    அருமையான வரிகள் மாதவராஜ். நான் சென்ற பதிவை படித்ததும் நினைத்தேன். பதிவை எழுதியவுடன் நீங்கள் உடனடியாக வெளியே வந்திருப்பீர்கள். ஆனால் பலரும் தேவையில்லாமல் உங்களை திட்டுவார்கள் என்று. அதே போன்றே நடந்திருக்கிறது. நீங்கள் இவற்றால் பாதிக்கப்படாமல் இலக்கிய நயத்துடன் (சென்ற பதிவைப் போல்) அடிக்கடி எழுதவும்.

    புது ப்ளாக் படைப்பாளிகளை அறிமுகம் செய்து கொண்டு இருந்தீர்கள். அதையும் continue செய்யவும்.

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் இப்போது தரும் விளக்கத்தை (நாயும், துணியும் இன்ன பிறவும் நானே, மற்ற யாரையும் குறிப்பிடுபவை அல்ல) என்று அந்த பதிவுகளிலேயே எழுதி இருந்தால் இத்தனை வருத்தங்கள், சலிப்பு வந்து இருக்காது.

    பதிலளிநீக்கு
  14. அடிச்சா நெத்தியில அடிக்கனும், முதுகுல அடிக்கக்கூடாது, அது என் பாலிஸி, எல்லாரும் அப்படியே இருக்கனும்னு ஆசையும் கூட!

    சும்மா சொல்லனும்னு தோணுச்சு!

    பதிலளிநீக்கு
  15. //ஒரு படைப்பு வெளியானதும், படைப்பாளி அதனிடமிருந்து அந்நியமாகிப் போகிறான். .//

    அப்படி அந்நியமான நரசிம்மை என் தொண்டை தண்ணி வரல துப்பினீர்கள் மாதவராஜ் ? என் திருந்தச்சொல்லி கத்தி ஆர்ப்பரித்தீர்கள் ?

    ஒ நியாயம் உங்களுக்கு வேறு அவருக்கு வேறா ?

    பதிலளிநீக்கு
  16. போதும் மாதவராஜ்,
    இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.

    இதற்கு மேல் யாருக்கும்
    விளக்கம் அளிக்கவும் வேண்டாம்...
    யாருடைய பின்னூட்டத்தையும்
    அனுமதிக்கவும் வேண்டாம்.

    வழக்கமான எழுத்து பணியை தொடரலாம்.
    இதுவே நடுநிலையாளர்கள் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  17. இப்படி நரசிம் ஒரு பதிவு எழுதி இருந்தால் நீங்கள் பிரச்சனையே செய்திருக்க மாட்டீர்கள் போல?

    பதிலளிநீக்கு
  18. என்னுடைய கேள்வியை வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் பின்னூட்டத்தை மடலில் பெற

    பதிலளிநீக்கு
  19. //நடுநிலையாளர்கள் விருப்பம்.//


    நேயர் விருப்பம்னு பாட்டு பாட சொல்வாங்க போலயே!

    அவுங்களாவே இருக்க விடுங்கப்பா!

    பதிலளிநீக்கு
  20. என்னுடைய பின்னூட்டம் வருமா ?

    பதிலளிநீக்கு
  21. !

    July 7, 2010 4:51 PM
    Blogger VijayaRaj J.P said...

    போதும் மாதவராஜ்,
    இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.

    அடிச்சா நெத்தியில அடிக்கனும், முதுகுல அடிக்கக்கூடாது, அது என் பாலிஸி, எல்லாரும் அப்படியே இருக்கனும்னு ஆசையும் கூட!

    சும்மா சொல்லனும்னு தோணுச்சு!

    July 7, 2010 4:51 PM
    Blogger VijayaRaj J.P said...

    //போதும் மாதவராஜ்,
    இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.

    இதற்கு மேல் யாருக்கும்
    விளக்கம் அளிக்கவும் வேண்டாம்...
    யாருடைய பின்னூட்டத்தையும்
    அனுமதிக்கவும் வேண்டாம்.//

    மிகச்சரி விஜி அண்ணா.

    பதிலளிநீக்கு
  22. //இங்கு அப்படி உணராமல் போனது ஒரு முரண்பாடுதான்//
    :) எப்படிங்க இப்படி ஒரு முடிவை எடுக்க முடியுது.. விட்டுத்தள்ளுங்க. அதான் ’காலம்’ வந்தாச்சே, அந்தக்’காலம்’ தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  23. நண்பர்களே!

    வணக்கம்.

    இங்கு எல்லாவற்றையும் வேண்டுமென்றே திசை திருப்பவும், தவறான அர்த்தம் கற்பிக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

    படைப்பிலக்கியம் குறித்த அடிப்படை புரிதல்கள் இல்லாமல், விவாதம் செய்வது அர்த்தமற்றது.

    குருடர்கள் யானையை எப்படி வேண்டுமானாலும் பார்த்துக்க்கொள்ளட்டும். அவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும்.

    எனக்கான வெளியில் நான், இன்னும் விசையுடன் சஞ்சரிப்பேன். இன்னும் அதிகமாய் படைப்புகள் வரும். அவைகள் பேசும்.அதற்கான தீவீரத்தை தந்த அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு