பாவம், அந்த நாய்!


 ஒரு பழைய துணியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது அந்த நாய்.

வாயில் கவ்விக்கொண்டே கொஞ்ச தூரம் ஓடும். கிழே போடும். ஓரிடத்தில் அமைதியாகி, நாக்கு வெளியே தள்ளி மூச்சிறைக்கும். முகர்ந்து பார்க்கும். தள்ளிப் போய் முறைத்துப் பார்க்கும். .பதுங்கும். பின்னங்காலால் மண்ணள்ளிப் போடும். உர்ரென்று துணி மீது பாயும்.. திரும்பவும் கவ்வி, எதோ குழறியபடியே தன்னையே சுற்றும். அப்படியே உட்கார்ந்து ஒரு வெற்றி வீரனைப் போல கம்பீரமாய் தெருவைப் பார்க்கும். சட்டென எழுந்து அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தலையை ஆட்டி துணியைக் கிழித்து எறிய் முயலும். எதோ ஒரு அசைவில் துணி தலையைச் சுற்றிக் கொள்ளவும், அரண்டு போய் வாள் வாள் என கத்திக்கொண்டே அங்குமிங்கும் ஓடியலையும். தலையை மண்ணில் கவிழ்த்தபடியே கொஞ்ச நேரம் அசையாமல் நிற்கும். உதறும். துணி கீழே விழுந்ததும் எட்டிப் போய் நிற்கும். வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு பாவம் போல விழிக்கும். தலையை சரித்துக்கொண்டு மீண்டும் துணி அருகில் வரும்.

அசையாமல் கிடந்த அந்தத் துணி நாயின் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது.

Comments

16 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. நானும், இதுமாதிரி பலமுறை பார்த்திருக்கிறேன் சார்.

    ReplyDelete
  2. அட்டாகாசம்... அப்படியே ஒரு நாயின் செயல்பாட்டை சொற்சித்திரமாக வடித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. அப்படியாவது அந்த துணியோட மல்லுக்கட்டிக்கிட்டே அலையணுமா????

    ReplyDelete
  4. சண்டை பார்ட் 2 வா?

    ReplyDelete
  5. நாமும் சில நேரங்களில் இப்படித்தான் விரும்பி போய் சில பிரச்னைகளில் , விவகாரங்களில் மாட்டி கொண்டு பின்பு வெளி வர முடியாமல் தவிக்கிறோம்.

    ReplyDelete
  6. அடடா! நானும் இன்னிக்கு ஒரு நாய் கதை தான் எழுதலாம்னு வந்தேன்!
    நீங்க முந்திக்கிட்டீங்க.
    //எதோ ஒரு அசைவில் துணி தலையைச் சுற்றிக் கொள்ளவும், அரண்டு போய் வாள் வாள் என கத்திக்கொண்டே அங்குமிங்கும் ஓடியலையும்.//
    :)))) அருமை!

    ReplyDelete
  7. மனநலம் இழந்த நாய்களின் செயல்
    இப்படித்தான் இருக்கும்.

    அந்த நாய்களுக்காக
    பரிதாபம் கொள்ளலாமா?

    நாய்கள் குறித்து அதிகம்
    எழுதுவதை பார்த்தால்...
    அவற்றின் பாதிப்பு அதிகமோ?

    ReplyDelete
  8. பாவம் இந்த நாய்!

    ReplyDelete
  9. அந்தத் துணிய விட்டுடுங்களேன் மாதவராஜ் !!!

    ReplyDelete
  10. You too?

    புனைவின் மறுபெயர் சொற்சித்திரமா? அதிக வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை...

    ReplyDelete
  11. மின்னுது மின்னல் said...

    அந்தத் துணிய விட்டுடுங்களேன் மாதவராஜ் !!!

    Repeattuuuuu....

    ReplyDelete
  12. நாய்க்கும் பழைய துணிக்கும் எப்படி சம்மந்தமில்லையோ அதுபோல
    மனிதர்கள் தங்க்கு சம்மந்தமில்லாத விஷயங்களில் தலையை நுழைத்துக்
    கொண்டு அவதிப்படத்தான் செய்கிறார்கள். (என்னையும் சேர்த்துதான்)

    ReplyDelete
  13. //அரண்டு போய் வாள் வாள் என கத்திக்கொண்டே //

    ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லையே!

    ReplyDelete
  14. நாய்க்கு துணி மாதிரி மனுசனுக்கு அடுத்தவங்க பிரச்சனை!

    அவனவன் பிரச்சனை அவனுக்கு எலும்புதுண்டு, அடுத்தவன் பிரச்சனை துணி!

    நாம எது கூட விளையாடலாம், எலும்புதுண்டு கூடவா, துணி கூடவா!?

    ReplyDelete

You can comment here