தீராத விளையாட்டுத் தாத்தாவை எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அற்புதமான சிறுகதை படித்தது போலிருக்கிறது என்றார். தமிழ் படைப்புலகில், ஆண் பெண் உறவு குறித்து அக்கறையாகவும் , ஆரோக்கியமாகவும் எழுதுகிற மிகச்சிலரில் அவரும் ஒருவர் என்பதால் எனக்கு சந்தோஷமாயிருந்தது.
இது போதாது என்று, இன்று காலை எழுத்தாளர் வண்ணதாசன் அவர்கள் “தீராத விளையாட்டுத் தாத்தாவை படித்தேன். மாது! நீங்கள் நாவல் எழுதும் நேரம் வந்திருக்கிறது என நினைக்கிறேன்” என்றார். என்ன பேச என்று தெரியாமல் நெகிழ்ந்து போனேன். சாய்ங்காலம் வீட்டுக்கு வந்தால் எழுத்தாளர் வண்ணதாசனின் மெயில் ஒன்றும் வந்திருந்தது. அவருக்குத்தாம் எழுத்துக்களும், அர்த்தங்களும், எப்படி வசப்படுகின்றன!
இதுதான் அந்தக் கடிதம்:
அன்புமிக்க மாதவராஜ்,
வணக்கம்.
வயதாகி வந்த காமம் சித்திரத்தைத் தாண்டிச் செல்கிறது இந்த தீராத விளையாட்டு.. கணபதி தாத்தாவாக நான் இருக்கிறேன். அவர் வாங்கிவைத்திருக்கிற ராஜேஸ்வரியின் மகளுக்கான் பொம்மையாகவும் நானே இருக்கிறேன்.
இறந்து போன உறவினரின் ட்ரங்குப் பெட்டியைத் திறந்து பார்க்கிற நேரத்தில், அந்த இறந்துபோன மனிதனின் மொத்த வாழ்வையும் அல்லவா நாம், சம்பந்தத்துடனும் சம்பந்தமின்றியும் திறந்து பார்க்க நேர்கிறது. எங்கள் தாத்தா இறந்துபோன பின் திறந்து பார்த்த அவருடைய மரப் பெட்டியில் இருந்த எத்தனையோ பழுப்புக் காகிதங்களில் எனக்கு ரொம்பப் பிடித்தவை அவர் வேலைபார்த்த UPASI என்று மயில் படம். பதிக்கப்பட்ட தேயிலைத் தோட்ட அலுவலகம் சார்ந்த வெற்று உறைகளும், ஒரு மாட்டு வாகடப் புத்தகமும் தான்.
தாத்தாவுக்கு பசு மாடுகள் பிடிக்கும். தாத்தாவின் வாடை தொழுவிலும், தொழுவின் வாடை தாத்தாவிடமும் அடிக்கும். தாத்தா இறந்த பிறகு ஒரு பசுவுக்கு நானே பேறுகாலம் பார்த்தேன். ஒரு கன்றுக்குட்டி முன்கால்கள் மேல் முகம்பதிய இந்த மண்ணுக்கு வருகிற நேரத்தின் அற்புதம் இன்னும் என்னை,பார்க்கிற ஒவ்வொரு கன்றுக்குட்டியையும் தடவிக்கொடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தோல் கண்ணுக் குட்டிகள் பற்றிச் சொல்ல வேண்டும் எனில் அது இன்னொரு துயரக் கதை.
ஏசுவைத் தச்சனின் மகன் என்கிறார்கள். அந்த வகையில் தாத்தா ஏசுவின் தகப்பனாக இருக்கத் தகுந்தவர். மாட்டுக்கும் கன்றுக்குட்டிக்கும் புண்ணாக்குத் தண்ணீர் வைக்கிற தொட்டிகளை அவரே செய்வார். அழகழகான மரப்பட்டைகளால் ஆன அந்தத் தொட்டிகளின் நேர்த்தியும், கன்றுக்குட்டிகள் குனிந்து அருந்தும் உயரத்தில் அவர் அதைச் செய்திருக்கிற கச்சிதமும் நான் ஏதாவது ஒரு கதையெழுதும்போது பிடிபட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எங்கள் தாத்தாவுக்கும் கிளி போல ஒரு பொண்டாட்டியும் குரங்கு போல வைப்பாட்டியும்’ உண்டென்று சொல்வார்கள். கிளி தன் எணபது வயது வரை எங்களுக்குப் பழம் கொடுத்து விட்டே பறந்து போனது. நான் கடைசிவரை அந்தக் குரங்கைப் பார்க்கவே இல்லை. நிச்சயம் அதுவும் பழம் தரும்படியாகவே இருந்திருக்கும்.
கடிதம் படித்த உற்சாகத்தில் அவருக்கு போன் செய்து பேசினேன். “அதிகம் பேசாதீர்கள் எழுதுங்கள் மாது!” என்றார்.
ஆகட்டும் அப்படியே.... கண்பதி தாத்தாவோடு நான் பேச ஆரம்பிக்கிறேன்!
சீக்கிரம் எழுதுங்க சார். படிக்கறதுக்கு காத்துகிட்டு இருக்கோம்.
ReplyDeleteநல்ல பகிர்வு
ReplyDeleteமூத்தோர்கள் அறிவும் அனுபவமும் அவர்கள் உரையாடலுமே மிக சுவாரஸ்யமானது தான்
தங்கள் பகிர்வுக்கு நன்றி
அருமை, மிகுந்த நன்றிகள்
ReplyDeleteநீங்கள் சொல்வது போல, வண்ணதாசனின் எழுத்து மிக அற்புதம்
// மாது! நீங்கள் நாவல் எழுதும் நேரம் வந்திருக்கிறது என நினைக்கிறேன்” என்றார். என்ன பேச என்று தெரியாமல் நெகிழ்ந்து போனேன் // “அதிகம் பேசாதீர்கள் எழுதுங்கள் மாது!” என்றார்.
ReplyDeleteஆகட்டும் அப்படியே....
// நாங்களும் எதிர்பார்க்கிறோம்… தொடங்குங்கள் ஒரு புதினத்தை… உங்களுடைய ‘தூரத்தை’ப் படித்து நன்றாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… சிறிது நேரம் கழித்து மின்னஞ்சலைத் திறந்தேன். நண்பர் ஒருவர் ‘தூரம்’ கதையை ‘Nice one to read and forward’ என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்தார். அந்த அளவு உங்களுடைய எழுத்துகளை விரும்புவோர் இருக்கிறார்கள்..
எங்க?... அடங்கத்தான் மாட்டீங்கறீரே... :-))
ReplyDeleteவண்ணதாசனின் கடிதப் பகிர்விற்கு நன்றி மக்கா!
மாதுஅண்ணா,
ReplyDeleteநிறைய எழுதவும், உயரம் தொடவும் வாழ்த்துக்கள்.
வண்ணதாசன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை.
ReplyDeleteநீங்கள் நாவல் எழுத வேண்டிய தருணம் இது மாதவ் அண்ணா.
ஒரு கடிதத்தில்கூட எத்தனை செறிவான வார்த்தைகள், மயக்கமூட்டும் அந்த நடை என எல்லாமே வண்ணதாசனுக்கே உரித்தான வர்ணஜாலங்கள்.
பகிர்வுக்கு நன்றி மாதவ் அண்ணா.
அந்த நாவலின் வழியாக”ம்ண்குடம்”மாதவராஜை மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன்.எழுது..தோழா...எழுது.வண்ணதாசன் வாக்கு பலிக்கட்டும்.
ReplyDeleteஅவ்வப்போது யாராவது சொல்லிக் கொண்டேயிருங்க pl . சீக்கிரம் எழுதுங்க.
ReplyDeleteபா.ரா வில் ஆரம்பித்து வண்ணதாசன் முடித்த இந்த பகிர்வில் மிகவும் நெகிழ்கிறேன். எல்லாரையும் போல் நானும் 'தீராத விளையாட்டு தாத்தாவை' போல இன்னும் பல எதிர்பார்கிறேன்
ReplyDeleteசந்தோஷ கணமாய் உணர்கிறேன். தங்களின் அரசியலற்ற எழுத்துக்களை வாசித்து வருபவன் என்ற முறையில் பா.ரா. நிலையே எனக்கும்...
ReplyDeleteவண்ணதாசனின் மடல் மொத்தமும் சொல்கிறது... நன்றி பகிர்வுக்கு...
நல்ல பகிர்வு.
ReplyDeleteவண்ணதாசன் அவர்களின் கடிதத்தையும், இங்கு பலரின் பின்னூட்டங்களையும் படிக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.சனி ஞாயிறு
ReplyDelete// “அதிகம் பேசாதீர்கள் எழுதுங்கள் மாது!” என்றார். //
:)ஆமாம் அங்கிள். வாசிக்கக் காத்திருக்கிறோம்.