இருண்ட முகங்கள்

வீட்டில் ஒரு டார்சலைட்டை யார் கண்ணிலும் படாமல் அவன் வைத்திருந்தான்.. இருள் சூழ்ந்த சமயங்களில் உடனடியாக அதை எடுத்துக் கொள்வான்.

விளையாட்டாய் வெளிச்சத்தை கையால் பொத்தியபோது, அவனாலேயே நமப முடியாமல் விரல்கள் செந்நிற இளம் தண்டுகளாய் ஒளிர்ந்தன. திரும்பத் திருமப அந்த அழகை பார்த்துக் கொண்டான். அப்படியே தன் முகத்தில் வெளிசசம்  அடித்து கண்ணாடியில் பார்த்தபோது அவனே பயப்படும் அளவுக்கு விகாரமாக இருந்தது. இன்னொருமுறை தன்னை அப்படிப் பார்க்க விருப்பமே இல்லை. அடுத்தவர்கள் முகத்தில் வெளிச்சத்தை பாய்த்து, அவர்கள் கண்கள் கூசிப் போய், தங்கள் முகத்தைப் பொத்திக்கொள்வதைப் பார்ப்பதில் அலாதியான சுகம் வந்தது.

தேவைப்பட்ட இடத்தில் தேவைப்பட்ட நேரத்தில் வெளிச்சம் அடிக்கவும், தன்னை இருட்டில் வைத்துக்கொண்டு அடுத்தவர்கள் மீது பிரயோகிக்கவும் டார்ச் லைட்டில் ஏற்பாடு இருப்பதை அறிந்து கொண்டான். வெளிச்சம் தன்னிடம் மட்டுமே இருப்பதாய் பாவித்துக்கொண்டான்.

நாளாக, நாளாக அவனுக்கும் அந்த உண்மை தெரிந்து போனது. வீட்டில் எல்லோருமே ரகசியமாக அவரவர்க்கென்று ஒரு டார்ச் லைட் வைத்திருந்தார்கள்.

முகம் இருண்டு போனது.

(பி.கு: முன்னர் கவிதை போல எழுதிய ஒன்றை சரிசெய்து பார்த்தபோது இப்படி வந்திருக்கிறது)

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. சின்ன புள்ளையில பண்ணுன செய்கைலாம் அப்படியே கண்ணு முன்னால வருது சார் !!

  பதிலளிநீக்கு
 2. எனக்கு மிகவும் பிடித்த கவிதை அது.
  அற்புதமான உருவகம்.
  இதுவும் நன்றாகவே வந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. nalla irukku...

  irunda mugam...

  ungal ezhuththum kavithai nadaiyilthaan irukkirathu...


  http://www.vayalaan.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. \\விளையாட்டாய் வெளிச்சத்தை கையால் பொத்தியபோது, அவனாலேயே நமப முடியாமல் விரல்கள் செந்நிற இளம் தண்டுகளாய் ஒளிர்ந்தன\\ அழகு!! நகங்கள் இன்னும் அழகாய் இருக்கும். மூடிய கண்ணின் மீது வெளிச்சம் பாய்ச்சுகையில் அந்த இருட்டுக்குள் தெரியும் செந்திரை அற்புதமாயிருக்கும்!

  \\தேவைப்பட்ட இடத்தில் தேவைப்பட்ட நேரத்தில் வெளிச்சம் அடிக்கவும், தன்னை இருட்டில் வைத்துக்கொண்டு அடுத்தவர்கள் மீது பிரயோகிக்கவும் டார்ச் லைட்டில் ஏற்பாடு இருப்பதை அறிந்து கொண்டான்\\ சரியா தவறா என்று தெரியவில்லை, ஆனாலும் எல்லோருக்கும் இந்த விருப்பம் இருக்கத்தானே செய்கிறது! வெளிச்சம் மட்டுமல்ல எல்லோரிடமும் கொஞ்சமாவது இருளும் இருப்பதாலோ என்னவோ!!?

  பதிலளிநீக்கு
 5. நல்ல சப்ஜக்ட் மக்கா. செறிவான கவிதையாய் கொண்டு வந்திருக்கலாம். கவிதையை விரிக்கிற(expand) போது கிடைக்கிற நிற மங்கல், சொற்சித்திரத்தில்.

  பதிலளிநீக்கு
 6. சின்ன வயசுல இருட்டுக்குள்ள நின்று சிமினி விளக்கை சுற்றி கை வைத்துப்பார்ப்பேன். அப்பொழுதும் இந்த சிவப்பு நிறம் தோன்றும். அந்த ஞாபகம் இப்பொழுது வந்தது.

  பதிலளிநீக்கு
 7. //நாளாக, நாளாக அவனுக்கும் அந்த உண்மை தெரிந்து போனது. வீட்டில் எல்லோருமே ரகசியமாக அவரவர்க்கென்று ஒரு டார்ச் லைட் வைத்திருந்தார்கள்.முகம் இருண்டு போனது.
  //

  மற்றவர்களிடம் இல்லாதது நம்மிடம் இருக்கிறது என்ற ஒரு தலைக்கணம் எப்படியும் ஒருநாள் அவமானத்திற்கு உள்ளாக்கிவிடும்.

  நம்மிடம் உள்ள தனித்தன்மை அடுத்தவர்களுக்கு உபயோகப்படுமா என்று பார்ப்பது நம்மை வெளிப்படுத்தவும் அடுத்தவர்களுக்கு பயனாகவும் இருக்கும்

  அற்புதமான கருத்தை வெளிப்படுத்தின பகுதி

  பதிலளிநீக்கு
 8. ஆதர்ச மனைவியைத் தேடி பல பெண்களை மறுத்துச் சென்ற ஒருவனை அவனது நண்பன் பல ஆண்டுகள் கழித்து சந்தித்தான்.

  நண்பன் கேட்டான், ஆதர்ச மனைவியாகத் தகுதியான பென்ணை சந்தித்தாயா என.

  ஆம் என்றான் இவன்.

  எப்போ திருமணம் ஆச்சு என நண்பன் மகிழ்ச்சியுடன் கேட்டான்.

  இவன் சொல்கிறான் சோகமாக, ஆனால் அந்த ஆதர்சப் பெண்ணோ ஓர் ஆதர்சக் கணவனை அல்லவா தேடிக் கொண்டிருக்கிறாள் என.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பதிலளிநீக்கு
 9. ரொம்ப நல்லா இருக்கு மாதவ் அண்ணா.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!