பத்திரிகையை விரித்து, அந்த ஆக்டோபஸை தன் கிளியிடம் காட்டி, “நீயும் இருக்கிறாயே” என்று எரிச்சல்பட்டான் ஜோஸ்யக்காரன்.
“எளிதாகவும், அதிகமாகவும் கிடைப்பவைகளுக்கு இந்த உலகத்தில் மதிப்பில்லை” என்றது கிளி.
“தத்துவம் போல உளறாதே. எத்தனை காலமாய் நீயும் சீட்டு எடுத்துப் போடுகிறாய். இதோ பார், ஒரேநாளில் எங்கேயோ போய்விட்டது!”
“எங்கே போய்விட்டது ஐயா?. அது கண்ணாடி நீர்த்தொட்டிக்குள் இருக்கிறது. நான் இந்த கம்பிக் கூண்டிற்குள் இருக்கிறேன்!”
“இது ஒரு சமாதானமா? ஆக்டோபஸுக்கு அப்படி ஒரு ராஜ மரியாதையும், உபச்சாரமும் கிடைக்கிறதாம்.”
கிளி வாய்விட்டு சிரித்தது. ”எனக்கு கிடைக்கும் சில நெல்மணிகள் போல அதற்கும் கொஞ்சம் உணவு. வேறென்ன்?”
“இந்த வாய்க்கொன்றும் குறைச்சல் இல்லை. அதற்கு இன்று எப்படிப்பட்ட பேர் தெரியுமா?. எல்லோரும் அதைப் பற்றி பேசுகிறார்கள்”
“காலம் காலமாய் என்னைப் பற்றி எத்தனை பாடல்கள் காற்றில் மிதந்து கொண்டு இருக்கின்றன. உலகத்து இலக்கியங்கள் எல்லாம் என்னைப் பேசிக்கொண்டு இருக்கின்றன. அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா?”
கிளி ஜோஸ்யக்காரன் அமைதியானான்.
“வருத்தப்படாதீர்கள் ஐயா! ஆக்டோபஸ் வெற்றி பெற்றவர்கள் பக்கம் இருக்கிறது. நீங்களும் நானும் தோற்றவர்கள் பக்கம் இருக்கிறோம்.”
”எனக்கு கிடைக்கும் சில நெல்மணிகள் போல அதற்கும் கொஞ்சம் உணவு" சளிர் ... சளிர் (சவுக்கடி )
பதிலளிநீக்குகாலத்திற்கு ஏற்ற பதிவு அருமை
ம், நிஜம்தான் :)
பதிலளிநீக்கு//“வருத்தப்படாதீர்கள் ஐயா! ஆக்டோபஸ் வெற்றி பெற்றவர்கள் பக்கம் இருக்கிறது. நீங்களும் நானும் தோற்றவர்கள் பக்கம் இருக்கிறோம்.”//
பதிலளிநீக்குஇது ஆக்டோபஸ்களின் காலம்.
எல்லா பக்கமும், கைகளும்,பைகளும்,
பொய்களுமாய்,ஏதாவது ஒன்றின் மேலேறி
அமரவேண்டும்.
(இதன் முன்னறிவிப்பு, மனரீதியாக வீரர்களை
கலைப்படையச் செய்திருக்குமா?)
nalla irukku ungal kiliyin karuththu...!
பதிலளிநீக்குநல்ல சித்திரம், மாது. சுருங்கச்சொல்லி விரிந்து, பலவாறு சிந்திக்கத்தூண்டுகிறது.
பதிலளிநீக்குரொம்ப ரசித்தேன்!
பதிலளிநீக்கு:))
மிக அருமை.
பதிலளிநீக்குஇது பின்னூட்டமில்லை. தங்களைப் பற்றிய குறிப்பில் 'உலகைப் புரட்டுகிற நெம்புகோல் மக்களிடமே' என்பதற்கு மாற்றாக 'மக்களிடேமே' எனத் தவறாக வந்துள்ளது...
பதிலளிநீக்குஅடடா..
பதிலளிநீக்குஅருமை..
நன்று மாது
பதிலளிநீக்குபாவம் கிளி... இது தொடர்பாக ஹிந்து வில் ஒரு கார்ட்டூன் வந்தது அதாவது ஜோசியக்காரர் கிளியை கூண்டில் ஏற்றி மரத்தில் தொங்கவிட்டுவிட்டார் அந்த இடத்தை ஆக்டோபஸ் பிடித்துக்கொண்டது.
பதிலளிநீக்குஅரசியலில் ஆர்.ஆர்.எஸ் வகையறாக்களை ஆக்டோபஸுக்கு நிகராக வர்ணிப்பதுண்டு,ஆனால் ஜோசிய ஆக்டோபஸுக்கு நல்ல வரவேற்பு தான்.
கிளிக்கு இருக்கும் அறிவுகூட ஜோஸ்யக்காரனுக்கு இல்லாததால்தான்,செம்மொழி மாநாட்டு பேரணிய வாயப்பொளந்து பார்த்துக்கிட்டுருக்கோம். நல்ல பதிவு மாது.
பதிலளிநீக்குஅற்புதம் makkaa! :-)
பதிலளிநீக்கு