எங்களது முதல் படம்!

நாம் எல்லோரும் தினம் தினம் பார்க்கும் காட்சிகள்தான் இவை. லௌகீக வாழ்வின் ஊடாக கவனிக்காமல் அல்லது கவனித்தாலும் அவை குறித்த சிந்தனையற்று கடந்து போகிறோம். கொஞ்சம் நின்று கவனித்து, பதிவு செய்த ஒரு நிகழ்வு இது. சாத்தூர் மண்ணிலிருந்து வந்த சிறு முயற்சி.

அன்புத்தம்பி பிரியா கார்த்தி, 2005ம் ஆண்டில் டிஜிட்டல் காமிரா வாங்கிவந்து, “அண்ணா இதுலயும் படம் எடுக்கலாம்..” என்று சொல்லி சிரித்தபோது, லேசாய் நெருப்பு பற்றியது. சாலையோரத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த இந்த எளிய மனிதர்களே எங்கள் மனிதர்கள் ஆனார்கள்.  காமராஜ், முத்து ஆகியோர் கூட இருக்க, இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.

இது பேசும் படம் அல்ல. பத்து நிமிடங்களுக்குள் வாழ்வின் உண்மைகளை பேசுகிற படம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இன்று பலர் காமிராக்களோடு களத்தில் இறங்கி இருக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஆதர்சனமாக இருந்த படம் இது.  நாமும் படம் எடுக்கலாம் என்ற நம்பிக்கையையும், வேகத்தையும் ஊட்டியது.  ஒரு மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் இந்தப் படத்தை திரையிட்டுக் காண்பிக்க, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் தொண்டையடித்துப் போய் பேசினார். படத்தில் வரும் குழந்தை அவரை பேசவிடவில்லை. மேலாண்மை பொன்னுச்சாமி, எஸ்.ஏ.பெருமாள், ஆதவன் தீட்சண்யா, உதயசங்கர், என ஒரு பெரும் இலக்கியவாதிகள் கூட்டம் சிலாகிக்க நாங்கள் முதல் படியில் நடக்க ஆரம்பித்தோம்.

கரிசல் குழுமத்தில் இருந்து பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் என மூன்று ஆவணப்படங்கள் தயாரித்திருக்கிறோம். அதில் முதல் படம் இது. குறைகள், விமர்சனங்கள், தொழில்நுட்பக்குறைகள் எல்லாம் தாண்டி இன்னமும் இந்தப்படம் பார்க்கும்போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன. இந்தப்படத்திற்குப்  பிறகான சம்பவம் ஒன்று அதற்கான காரணமாக இருக்கலாம். அந்தக் குழந்தை எவ்வளவு கனவுகள் நிரம்பியது. அதன் தாய் எவ்வளவு அழகானவள்!

மேலும் பேசுவது இப்போது சரியாய் இருக்காது. பின்னூட்டத்தில் சொல்ல நிறைய இருக்கிறது....


 

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. உடனேக் காண்பதற்கு ஆவலாய் உள்ளது. ஆனால் அலுவலகத்தில் காண இயலாது. இரவு பார்த்துவிட்டு சொல்லுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான படம் சார் இது. மற்றவர்களுக்காக உழைத்தாலும் அந்த மக்களின் வாழ்க்கை இன்னும் அடிமட்டதில்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. Great one and good to note that the story didn't end in a tragedy. We have seen this in real life, but people hardly take note of it and do something for them. Hope someone helps or the society takes care of these type of hard working people. I wish someone starts a voluntary organisation to take care of the children (day care) of low wage working class people while they are at work and provide basic education to them.

    பதிலளிநீக்கு
  4. படத்துக்கேற்ற நல்ல தலைப்பு
    தொடக்கம் அருமை
    நல்ல இசை
    பள்ளம் என்றும் பள்ளம் தான்.....

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அருணா மேடம்.
    நல்லாயிருக்கீங்களா?
    ஏன் பார்க்க முடியல?
    படத்தின் மீது கிளிக் செய்தால், daily motion தளத்துக்கு அழைத்துச் செல்லும்.
    அங்கும் பார்க்கலாம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லாருக்கு - பள்ளத்துலே இருக்கறவங்க பள்ளத்துலேயேதான் இருக்காங்க..அந்த குழந்தையின் முகம் இன்னும் மனதில்...படக்குழுவினருக்கு , டைரக்டர் மற்றும் உதவி டைரக்டருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. இன்னும் பார்க்கலை மாது.பார்ப்பேன்..

    பதிலளிநீக்கு
  8. தோழரே,

    அந்தக் குழந்தை மனதை விட்டு அகல மறுக்கிறது....

    தாமதமாக பார்க்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன்.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. என்ன தோழர்... விதர்பா போகணும்னு நீங்க பேசுனது ஞாபகத்துக்கு வருது... நாம் போவதற்குள் விவசாயப் பஞ்சம் போய் விவசாயிகளுக்கே பஞ்சம் வந்துவிடும் போலிருக்கிறது... ஆனால் மற்றொரு விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். ஆவணப்படங்கள் இன்னும் முற்போக்கான விஷயங்களை பேசுகிறவர்கள் மத்தியில் கூட போய்ச் சேர்ந்ததுபோல் தெரியவில்லையே..

    பதிலளிநீக்கு
  10. நல்ல படம்.

    /*லௌகீக வாழ்வின் ஊடாக கவனிக்காமல் அல்லது கவனித்தாலும் அவை குறித்த சிந்தனையற்று கடந்து போகிறோம்*/
    உண்மை தான். ஒரு மிட்டாயைச் சப்பிக்கொண்டு அழகாக அமர்ந்துள்ளது அக்குழந்தை; அன்பான பெற்றோர்; அவளுக்கு நல்ல கல்வி கிடைக்குமா என்ற கேள்வி தான் மனதுள் எழுந்தது. குழந்தையின் முகம் மனதில் நிற்கிறது.

    நல்ல இசை. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. எப்படி இப்படி???
    நிஜம்!!! நிஜம்!!!
    அருமையான படம்!!!!

    உண்மையிலே நிங்க Super....!!!

    பதிலளிநீக்கு
  12. Very good effort. Exposure of such difficulties, is the first step to solution.

    What would help along with such effort is some more research on the actual project details like.
    1. What is the total project buget
    2. How much is given to these employees
    3. What is possible, like providing these people with some more advanced machinery, better living conditions for the long run.
    4. Creating some kind of union for such work, which will assure long term employment, good machinery for efficiency
    5. Some kind of recommendation of creating such organization
    6. Or even to recommend to the government to create an inventory of good equipments to reduce such pain and increase efficiency.

    Identifying misdeeds is one side of the story, but identifying a solution, way and means to implement them, creating opportunities for their next generation are the real need of the hour.
    Where do we start?

    பதிலளிநீக்கு
  13. பொறுமையாய் படம் பார்த்தவர்களுக்கும், கருத்துச் சொன்னவர்களுக்கும் என் நன்றிகள்.

    இப்படம் குறித்துச் சொல்ல வேண்டிய சில விஷயங்களை இன்று பதிவாக எழ்தி இருக்கிறேன்.

    itsdifferent சார், மிக்க நன்றி. அதுபோன்ற காரியங்களில் ஒரு இயக்கமாக இறங்கவேண்டும். அவர்களை கைகொடுத்து மேலே தூக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!