எண்களின் உலகம்


அரைமனிதர்களாயிருந்த
அவனது அரையும்
அவளது அரையும்
சேர்ந்த ஒன்றை
எண்களின் உலகத்தில் தவழவிட்டார்கள்.
செல்போன்
கிரெடிட் கார்டு
கஸ்டமர் ஐ.டி
போன் நம்பர் இவைகளோடு
வேறென்ன எண்களையெல்லாம் 
அதற்கு சூட்டுவது என 
உலகம் யோசித்துக் கொண்டிருந்தது
பேரைச் சூட்டிய தாத்தாவுக்கு
முகமே நினைவிலிருந்தது!

Comments

9 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. விரல் இடுக்கில் வழிந்தோடும் தண்ணீரை போல நவீன வாழ்க்கை மோஸ்தர்களில் வழிந்தோடிக்கொண்டிருக்கும் நம் கலாச்சார சுயம். மனதை பாரமாக்கும் கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அற்புதம் தோழர்..

    எல்லா உணர்வுகளையும் எண்களாக மாற்றி விற்பனைக்கு கொண்டுவந்து விடுவார்களோ என்றுதான் தோன்றுகிறது..

    ReplyDelete
  3. அற்புதமான கவிதை அண்ணா :)ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. //செல்போன்
    கிரெடிட் கார்டு
    கஸ்டமர் ஐ.டி
    பேன் நமபர் இவை//

    சுருக்கமான வழி இவைகளின் கடைசி இலக்கங்களைக் கோர்த்துக் கொள்ளலாம்.




    பிடித்த நடிகர் நடித்த பாத்திரத்தின் எண்ணோடு தாத்தாவின் எண்ணைச் சேர்த்து பெயரிடலாம்



    இலக்கிய நயமான எண்ணைக் கூட எண்ணாக இடலாம்.

    அல்லது

    வெளிநாடுகளில் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் எண்ணிடலாம்.

    =======================

    தாத்தாவின் எண்ணோடு சேர்த்திட்டால் பாட்டி எப்படி அந்த எண்ணைச் சொல்லிக் கூப்பிடுவார், எனவே அவர் மட்டும் தனியாக ஒரு பட்ட எண்ணை வைத்துக் கொள்ளலாம்,

    ReplyDelete
  5. அன்பு மாதவராஜ்,

    அழகான, ஆழமான கவிதை... முகமற்று போனா வாழ்க்கை முறையாய் மாறி வருகிறது உலகம். நான் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் போது...பொதுவான உரையாடல்களில் 202 என்ன சொன்னார், அவருக்கு இதில் அக்ரிமென்ட் இல்லை, 110 இதை தான் சொல்றாரு... ஆனா 212 மட்டும் தான் செக்ரட்டரி நான் சொலரத கேக்குறாரு... இப்படியே போயிட்டுருந்த ஒரு யுனாநிமஸ் டெசிசன் எப்படி எடுப்பது என்று லாயத்தில் கட்டிய குதிரைகளாய் கணிப்பது சாரி கதைப்பது உண்டு... எனக்கு அந்த நினைவுகளை கொண்டு வந்தது இந்த பதிவு... ஆனால் இது ஒரு படி மேலே போய் மாறி வரும் மட்டீரியளிஸ்டிக் வாழ்க்கையை காட்டுகிறது...



    உங்கள் அன்புக்கும் உதவிக்கும் நன்றிகள் பல மாதவராஜ்...

    அன்புடன்,

    ராகவன்

    ReplyDelete
  6. மாதண்ணா,
    நம் ஆப்ரஹாம் மாமா, அவர்களின் எட்டு குழந்தைகளையும், நகைச்சுவையாக, எண்களை வைத்தே, ந்ம்பர் செவன், நம்பர் எய்ட், என அழைப்பது நினைவுக்கு வருகிறது.
    எதிர்காலம், எண்களின் காலமாகத்தான்
    மாறிவிடுமோ, சுஜாதா கதைகளில் வருவது போல்....?

    ReplyDelete
  7. யதார்த்தம் தவழும் மிக அருமையான கவிதை மாதவன்.

    //பேன் நமபர் இவைகளோடு//

    சரி பண்ணுங்கள்.

    ReplyDelete
  8. அன்பு பாரா,

    அவர் குறிப்பிட்டது PAN CARD என்று நினைக்கிறேன்...

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  9. அனைவருக்கும் நன்றி.

    ராஜாராம்...
    ராகவன் குறிப்பிட்டது சரி.

    ReplyDelete

You can comment here

தீராத பக்கங்களை Subscribe செய்து விட்டீர்களா நண்பரே!

Enter Email and Subscribe தீராத பக்கங்கள்!