ஒளிப்பூக்கள்

முந்தா நாள் மழை பெய்தது. நேற்றிரவில் தெரு விளக்கு பூத்துக் குலுங்கியது. இன்று காலை கோழிகள் சில, விளக்குக் கம்பத்தினடியில் தரை கீறி கீறிக் கொத்திக்கொண்டு இருந்தன. பூனையொன்று அவைகளை விரட்டி மண்ணை முகர்ந்து பார்த்து நாக்கை நீட்டியது.

 

அருகிலொரு மரத்தினடியில் சிந்திக்கிடந்த பன்னீர்ப் பூக்களோ, யாரும் சீந்துவாரில்லாமல் அப்படியே வட்டமாய்க் கிடந்தன.

 

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நிறைய விசயங்களை எங்கள் கற்பனைக்கே விட்டு
    விட்டீர்கள். விளக்கு கம்பத்தின் கீழ் கோழிகள்
    உணவை (கீழ் கிடக்கும் ஈசல்களை) உண்ணும்
    போது, அவசர உலகில் குறைந்தபட்ச ரசனையை
    கூட இழந்த மனிதன் அந்த பூக்களை மிதிக்காமல்
    சென்றாலே, அதுவே நமக்கு ஆறுதலான விஷயம்

    பதிலளிநீக்கு
  2. சந்தனமுல்லை!
    நன்றி.

    நாஞ்சில்நாதம்!
    மொத்தமாய் பதிவுகளை படித்து விட்டீர்கள் போலிருக்கிறது. நன்றி.


    முத்துக்குமார்!
    சொற்சித்திரத்துக்கு பொழிப்புரை, மதிப்புரை எல்லாம் எழுதிவிட்டீர்கள். மிக்க நன்றி.


    ஐந்திணை!
    அவ்வளவுதான்....:))))

    பதிலளிநீக்கு
  3. எனக்கு புரியல (வருந்துகிறேன்)

    பதிலளிநீக்கு
  4. சூப்பர்!

    @முத்துக்குமார்
    நன்றி. கலக்கீட்டீங்க!

    பதிலளிநீக்கு
  5. தீபா!
    நன்றி.

    பாலரவிசங்கர்!
    காட்சிகளை ஒன்றொடொன்று கோர்த்துக்கொண்டு செல்லுங்கள் புரியும்.

    மங்களூர் சிவா!
    நன்றி.
    நீங்களே ஒருவரை கலக்குவதாகச் சொல்றீங்களா....!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!