ஈரம் கசியும் கடிதங்கள்

 

இராணுவத்தின் மீது மதிப்பும், மரியாதையும் ஒரு போதும் வந்ததில்லை. தங்கள் உயிரைத் துச்சமென மதிக்கும் அந்த வீரர்கள், எந்த உயிரையும் மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. மிருகத்தனமும், மூர்க்கத்தனமும் இராணுவத்தின் இயல்பாக இருக்கின்றன. பொதுவான இந்த மதிப்பீடுகளும், பார்வைகளும் தனிப்பட்ட இராணுவ வீரர்களின் துயரங்களை அறியும்போது தணியத்தான் செய்கின்றன.

 

எங்கேயோ ஒரு நிலத்திலிருந்து, யுத்த களத்திலிருந்து, இந்த வீரர்கள், தங்கள் குடும்பம், வீடு, ஊரை நினைத்து ஏங்கிடும் தவிப்புகள், தனிமையின் வதையாய் இருக்கின்றன. இன்னொரு முறை பிரியமானவர்களின் முகங்களைப் பார்க்கத் துடிக்கும் அந்த மனிதர்களின் நினைவுகளில் நாட்கள் எல்லாம் புதைந்து கிடக்கின்றன. பண்டைக்கால இலக்கியங்களிலிருந்து இன்று வரை இந்த வீரர்கள் தங்கள் காதலிக்கும், மனைவிக்கும், குழந்தைகளுக்கும், தாய்க்கும் கடிதங்களில் அனுப்பிய முத்தங்களின் ஈரம் அந்த எழுத்துக்களிலிருந்து கசிந்து கொண்டே இருக்கின்றது.

 

சமீபத்தில் இணையத்தில் இதுபோன்ற பல கடிதங்களை வாசித்துக்கொண்டு இருந்தேன். ஒரு கடிதம் என்னை நிலைகுலைய வைத்தது. சென்ற வளைகுடாப் போரில் 1991 மார்ச் 8ம் தேதி சௌதி அரேபியாவில் இருந்து அமெரிக்க சார்ஜெண்ட் டேன்வில்ச் தனது  அம்மாவுக்கு எழுதிய கடிதத்தின் இறுதி வரிகள் இவை.

 

"..அந்த காரில் சடலமாய் ஒரு ஈராக்கியன் இருந்தான்.அகலத் திறந்திருந்த கண்கள் மௌனமான அலறலில் உறைந்திருந்தன.

நான் சுட்டு வீழ்த்திய அந்த மனிதனை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் அதைச் செய்திருக்காவிட்டால் அவன் போர்க்கைதியாக பிடிபட்டிருப்பான். விடுதலை பெற்று தன் வீட்டிற்குச் செல்லும் நாளை எண்ணிக் கொண்டிருப்பான். என்னைப் போலவே..."

போர்க்களத்தில் இறந்துபோன ஒருவனும்,  அவனைக் கொன்ற ஒருவனும்  ஒரு புள்ளியில் ஒன்றாகவே இருக்கின்ற அனாதி வெளி  நிழலாடுகிறது. வெப்பம் மிகுந்த அந்த மணற்பிரதேசத்தின் ஒரு இரவின் தனிமையில் டேன்வில்ச்சிற்கு தன் வீட்டின் ஞாபகம் தாகமாய் தகிக்க வெளிப்பட்ட உணர்வில் ஒரு அடர்த்தியான சோகம் இருக்கிறது. அந்த ஈராக்கியனுக்கு தன்னைப் பொறுத்த வரையில் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டதாகவே தோன்றியிருக்கிறது.

 

படித்து முடித்த பிறகு ரொம்ப நேரத்துக்கு எதுவும் ஒடவில்லை. புஷ்ஷுக்கும், போர் வெறியர்களுக்கும் இந்தக் கடிதங்கள் நிச்சயமாய் பிடிக்காதுதான். நமக்கு யுத்தமும், இராணுவமும் மனித சமூகத்துக்கு எவ்வளவு பெரிய சாபம் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப எழுந்து கொண்டு இருக்கிறது. 

 

*

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வணக்கம் மாதவராஜ்

    ம்ம்ம் இதே போன்ற ஒரு கடிதம் (யார் எங்கு என நிணைவில்லை ) உயிர்மையில் வந்தது

    ஒரு விமானி தன் தொலைந்த காதலிக்கு எழுதியதாக-- மிக நெகிழ்வாக இருக்கின்றது பதிவு

    இராஜராஜன்

    பதிலளிநீக்கு
  2. ஆன்மீகம் என்பது ஒன்றும் இல்லை சக உயிர்களையும் உலகில் உள்ள அனைத்தையும் நேசிப்பது/அன்பு செய்வது.. ஆனால் இவ்வுலகில் நடப்பெதென்ன...மகான்களின் அறிவுரைகள் அனைதும் விலலுக்கிறைத்த நீர்..

    அறிவுரைகளை விடுத்து, அவர்களின் பால் வகுப்புவாதம் உறுவாகிறது என்பது அல்லவா உண்மை.


    ஏன் இந்த, பேராசை...ஆசையை ஒலித்தல்....

    பதிலளிநீக்கு
  3. ////நமக்கு யுத்தமும், இராணுவமும் மனித சமூகத்துக்கு எவ்வளவு பெரிய சாபம் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப எழுந்து கொண்டு இருக்கிறது.///

    நிதர்சனமான உண்மை சார்.

    பதிலளிநீக்கு
  4. :-(

    அங்கிள் All quiet on the western front புத்தகத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தீர்களே. இயன்ற போது அதை மீள் பதிவிடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  5. ம்ம்..எல்லோரும் மனுஷங்கதானே என்று நீங்கள் முன்பு எழுதிய இடுகை நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  6. நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

    அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

    கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

    நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

    இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

    இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

    முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. ராம்!
    நன்றி.

    இராஜராஜன்!
    அனானி!
    இளவட்டம்!
    சந்தனமுல்லை!
    அமுதா!
    ஞாநி!

    நன்றி.



    தீபா!
    நன்றி.மீள் பதிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!