குருவிகள் பறந்து விட்டன; பூனை உட்கார்ந்திருக்கிறது

cat

ஒரே நேரத்தில் பூனையும், குருவியும் கர்ப்பமுற்றிருந்தன.
சாத்தியிருந்த ஜன்னலுக்கும், கம்பிக்கும் நடுவே குருவி கூடுகட்டிக் கொண்டது.
மாடிப்படி ஏறும் இடத்தில் இருந்த பரணில் போட்டு வைத்திருந்த டி.வியின் அட்டைப்பெட்டிக்குப் பின்னால் பூனை அடைந்து கிடந்தது.
பறப்பதும், பிறகு வருவதுமாய் சடசடத்த குருவியை அடிக்கடி பார்க்க முடிந்தது.
பூனையின் அசைவுகள் ரகசியமாகவே இருந்தன.
முட்டைகள் பொரிந்து, குஞ்சுகளின் அசைவுகள் ஜன்னல் கண்ணாடியில் மங்கலாய்த் தெரிந்தன.
மாடிப்படியில் யார் ஏறினாலும், அடிவயிற்றிலிருந்து எழுந்த பூனையின் உறுமல் பயம் தந்தது.
இரை கொண்டு வந்த குருவி வாய் பிளந்து ஊட்டி விட, குஞ்சுகள் சத்தங்கள் போட்டுக் கிடந்தன.
பரணிலிருந்து ஒருநாள் தாவி ஓடிய பூனை பிறகு வரவேயில்லை.
குருவிக் குஞ்சுகள் மெல்ல மெல்ல குதித்து கூட்டின் வெளியே எட்டிப் பார்த்தன.
பரணில் செத்துக் கிடந்த பூனைக்குட்டிகளை வீட்டுக்காரன் மூக்கைப் பொத்திக்கொண்டு எடுத்து வெளியே போட்டான்.
குருவிகள் சின்னதாய்ப் பறந்து வேப்ப மரக்கிளையில் உட்கார்ந்து சந்தோஷமாய் உலகைப் பார்த்துக் கூவியது.
மதில் சுவரில் பூனையொன்று தனியே கண்ணை மூடி உட்கார்ந்திருந்தது.

 

*

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கதை எதையோ பின்புலம் கொண்டு இருக்கே!!!
    சற்று புரிந்த மாதிரி இருக்கு...
    இருந்தாலும் பின்னாடி வர்ரேன்.

    பதிலளிநீக்கு
  2. ”மாடிப்படியில் யார் ஏறினாலும், அடிவயிற்றிலிருந்து எழுந்த பூனையின் உறுமல் பயம் தந்தது”.

    **அண்ணா! பூனையின் உறுமல் தன்னையும் தன் குட்டிகளையும் எதிரிகளிடம் காக்கவே தவிற பயமுறித்தி அழிக்கவல்ல.அது தற்காப்பு!

    ”பரணில் செத்துக் கிடந்த பூனைக்குட்டிகளை வீட்டுக்காரன் மூக்கைப் பொத்திக்கொண்டு எடுத்து வெளியே போட்டான்.”

    **எந்த ஒரு உயிரினமும் தன் இனம் விருத்தி அடைந்து செழிக்கவே விரும்பும்.இது உலக நியதி.ஆனால் சில இறக்கமுள்ள உயிரினங்கள் அடிபட்டு, நோயுற்று, நடமாடமுடியாமல் வெறும் உயிர் மட்டும் கொண்டு வதை பட்டு வாழும் தன் குட்டிகளை கருனை அடிப்படையில் உயிர் மீட்பு தரும்.அஹிம்ஸா மூர்த்தி அண்ணல் காந்தியடிகளே! ஒரு ஆட்டுக் குட்டி உயிர் வதை படுவதை காண சகியாமல் கருனை மீட்பு வழங்க பரிந்துரைத்தார் என்று உங்களை போன்ற சான்றோர் சொல்ல கேள்வி,சரிதானா அண்ணா?

    ”மதில் சுவரில் பூனையொன்று தனியே கண்ணை மூடி உட்கார்ந்திருந்தது.”

    ***இந்த தனிமை நிரந்தரமல்ல! இது அடுத்த கட்டத்துக்கான சிந்தனையே அன்று கவலையும் சோர்வும் அல்ல! இதுவும் கடந்து போகும்.

    எல்லாம் சரிதான் அண்ணா! உங்கள் பூனையிடம் புலியின் சாயல் தெரிகிறதே! பூனையும் சரி புலியும் சரி பசித்தாலும் அவைகள் புல்லை புசிப்பதில்லை என்பதை உலகம் அறியும்!

    பதிலளிநீக்கு
  3. பூனை,குருவி இவைகளின் குணங்களும் பண்புகளும் முழுதாய் தெரியாது எனக்கு.இப்போதுகூட,தன் இரு குட்டிகளுக்கு
    பால் கேட்டு கத்திக்கொண்டிருக்கிறது தாய் பூனை என் வீட்டு அழைப்புமணிபொத்தானின் கீழ் நின்றுகொண்டு.ஆனாலும்,உங்களின் குருவியாக வாழவே ஆசை எனக்கு.

    பதிலளிநீக்கு
  4. புரிந்த மாதிரி இருக்கு இல்லாமையும் இருக்கு

    அந்த வீட்டில் சிட்டுகுருவியும் நானும்
    பிரசவித்திருந்தோம்
    எங்களால் குருவி போல் உயரத்தில்
    கூடுகட்ட இயலவில்லை
    பாட்டன் பிறந்து வளர்ந்த வீடுதானே
    எங்கள் சொந்த வீடும்
    குட்டிகளையும் ஈர்ந்தெடுத்தேன்
    எங்களால் எங்கள் வீடு
    செழிப்படைய தொடங்கியது
    சிலரின் அச்சத்தால்
    எங்களை விரட்ட ஆரம்பித்தனர்
    எங்களால் குருவி போல் உயரத்தில்
    பறக்கவும் இயலவில்லை
    காவலுக்கு உறும தொடஙக
    அழிக்கவும் ஆரம்பித்து விட்டனர்
    எங்களது முப்பாட்டனோ
    மதில் சுவரில் உக்கார்ந்து
    கண்ணை மூடிக்கொண்டிருக்கிறான்

    பதிலளிநீக்கு
  5. நிறைய கேள்விகளையும் பதில்களையும், அதுவாக இருக்குமோ, இதுவாக இருக்குமோ என மர்மமும் பூடகத்தன்மையும் நிறைந்ததாயிருக்கிறது இக்கதை, இது தான் நிலையான அர்த்தம் என்பதன்றி எனக்கு பல புரிதல்களை அளிக்கிறது இக்கதை. இந்தத் தன்மையே இதில் மிகவும் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. புன்னகை, பூனைக்குட்டிகளாகி இன்னொரு தளத்தில் கவிதைச் சொல்லியிருக்கிறார். நன்றி.
    சைக்கோ மனிதாபிமானியாகவும், கனவு நிறைந்த மனிதனாகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.
    யாத்ராவின் கலைமனம் சகல கோணங்களிலும் ஒரு காட்சியை பார்த்து அதில் ஆழ்ந்திடச் சொல்கிறது.
    அண்டோவுக்கு பூனைகளிடம், புலிகளின் சாயல் தெரிவது, அவரது புரிதல். நடப்பு நிகழ்வின் உக்கிரம் பாதித்த சிந்தனை, பார்க்கும் எல்லாவற்றிலும் அதன் சாயலைத் தேடுகிறது.
    அவரவர் பார்வை, அவரவர் புரிதல்.

    சில நினைவுகளும், நிகழ்வுகளும் துயரம் தருகின்றன. சில சந்தோஷம் தருகின்றன.
    அவை சில சமயம் அனுபவங்களாகி, சட்டென்று ஒரு உண்மையை வெளிச்சம் போல காட்டிவிடுகின்றன.

    பதிலளிநீக்கு
  7. இரண்டு முறை படித்தும் ஒருமுடிவுக்கு வரமுடியவில்லை. பின்னூட்டங்களிலும் எனக்குத் தெளிவாகவில்லை... எனினும் யாத்ராவைப் போலவே நானும் விரும்புகிறேன்... எனக்கு அதிகப்படியான தேடல் தேவைப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  8. dear Mathavaraj!
    Vittu siragadipaai inda chittu kuruviyai poley! Bharathiyin varigal manadirkul odugiradu.
    poonaiyin vaazhkai..
    manidhar pola yedhaiyaavadu saarndu..
    yedhaiyaavadu yedirpaarthu..
    yedhaiyaavadu izhandu..
    izhappadarkku yedumillai.
    yenakku siragadikkavey aasai..
    kadamaiyai sei..odikondey iru..
    thanneerai pola..thengi nindral..
    naatramadikkum.
    aatru neer pola nirkkamal oda,
    kavalaigal attru paraka..
    kattru kollvom!
    indha chittu kuruviyidam irundu
    kattru kollvom.

    பதிலளிநீக்கு
  9. அனானி!
    தமிழில் எழுதலாமே.... கவிதையாய் பின்னூட்டம் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!