குண்டுகளால் வீழ்த்தப்பட்ட நமது குழந்தைகள்

tamil child in war

சூரியனை அடைகாக்கும்
புல்லின் நுனியில் இருந்து
திரட்டிய  கவிதையோடு
உலகைக் குலுக்க வந்தவன்
அவர்களில் இருக்கலாம்.

சாமானியர்களின் கையில்
காலத்தை ஒப்படைக்கும்
மக்களின் விஞ்ஞானத்தை
கண்டு பிடித்தவன்
அவர்களில் இருக்கலாம்.

செருக்குடன் நிமிர்ந்திருக்கும் மலைகளை
மிதித்து அடக்கி
உலகம் சமநிலை பெற
அகத்தியப் பிரயத்தனம் ஆற்ற வந்தவன்
அவர்களில் இருக்கலாம்.

கவசமாயிருக்கும்
மக்களையே வாளாக்கி
களத்தில் நிறுத்துகிற
மனிதகுலப் போராளி
அவர்களில் இருக்கலாம்.

யுத்தம் வீசிய குண்டுகளில்
மூளை வெடித்துச் சிதறிய
நமது ஆயிரக்கணக்கான குழந்தைகளில்
அவர்கள் இருக்கலாம்.

 

*

கருத்துகள்

26 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. kuzhandaigalai gundu veesi thaakkuvadhu!
    Mirugamaahi pona Manidham!

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகள் கால தேச எல்லை என எல்லா வரையறைகளும் கடந்தவர்கள்.
    பௌத்தமும் சமணமும் கொல்லாமை சொல்லும் உன்னதங்கள்.
    இவையாவும் குண்டுகளின் சிதறலில் பொசுங்கிப்போகிறது.
    அதனால் தான் இந்தக்கடவுள் என்கிற ....... இல்லவே இல்லை.
    வாழ்க பெரியார்-அம்பேத்கர்.
    யாராங்கே அனானியைக் கூப்பிடு.
    வேண்டாம் தானாக வரும்.

    பதிலளிநீக்கு
  3. கருகி மடிந்தவர் எத்தனை பேர் என்பதை புள்ளி விபரம் சொல்லக் கூடும்! அவர்களில் நாளைத் தலைவர்கள் எத்தனை என்பது யாருக்கு தெரியும்? ஆணித்தரமான கவிதை வரிகள்!!! வரிகள் ஒவ்வொன்றும் மடிந்த மனிதாபிமானத்தை சாட்டை கொண்டு உயிர்ப்பிக்கிறது!!!

    பதிலளிநீக்கு
  4. உங்கள் உணர்ச்சிகளில் நியாயம் இல்லாமல் இல்லை... பிஞ்சுள் மடியும் போது எப்படி ஒரு மனது அதுவும் ஒரு இலக்கிய மனது நிம்மதியாய் இருக்க முடியும்... ஆனால் இந்த போரை மறைமுகமாக ஆதரிக்கும் சீபிஎம் கட்சி அதனுருப்பான தமுஎகச போன்றவைகளிலிருந்து உங்களைப்போன்றோர் வெளியேறவில்லையென்றால் இந்த உணர்ச்சகள் வீணாய்ப் போகும்...

    சிந்தித்துப்பாருங்கள், போரை நடத்தும் இந்தியாவை,இந்திய தேசிய மேலாதிக்கத்தை எதிர்த்து ஒரு கம்யூனிஸ்டு கட்சி ஒரு வார்த்தை பேசவில்லை! க்யூபா நேபாளுக்கெல்லாம் பஞ்சாயத்து செய்யும், அமெரிக்காவுக்கு எதிராக பாயும் உங்கள் தலைவர்கள் மௌனமாக இருப்பது தவறில்லையா? இதை அம்பலப்படுத்தி எழுதுங்களேன். திமுக,காங்கிரஸ் மட்டும்தான் துரோகி என எழுதுவது மோசடியில்லையா?

    பதிலளிநீக்கு
  5. உலகத்தில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை இலங்கையை தவிர வேறு எங்கேயுமில்லை . இரண்டு பிள்ளை பெற்ற சோனியாவும் , பிரியங்காவிற்கும் குழந்தைகளின் வலி தெரியவில்லையே .


    http://kotticodu.blogspot.com/2009/04/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  6. இணையத்தில் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு சட்டென்று தொண்டை அடைத்துவிட்டது....

    இதுநாள் வரை எனக்கு அப்படி ஆனதே இல்லை.... வெறும் புகைப்படம் ஏற்படுத்தும் பாதிப்பு!!!!

    அது வெறும் படமல்ல... ஒரு இனத்தின் அழிவு!!

    என்னால் பந்த் இல் பங்கேற்று ஒரு நாளை வீணாக்கவோ, வெட்டிப் பேச்சு பேசி தமிழினக் காப்பாளன் என்று பெயர் வாங்கவோ முடியாது!! ஏனெனில் அதில் எந்த நம்பிக்கையுமில்லை..

    ஒருமுறையேனும் அகதிகள் முகாமிற்குச் சென்று அவர்களைக் காணவேண்டும்... ஆறுதலாக பேசவேண்டும்....

    அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  7. அருமையான வரிகள்....

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  8. அருமையான வரிகள்....

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  9. ஈழத் தமிழர்களுக்காக ஒன்றிணைவோம்
    http://www.facebook.com/group.php?gid=74525049402

    பதிலளிநீக்கு
  10. ///யுத்தம் வீசிய குண்டுகளில்
    மூளை வெடித்துச் சிதறிய
    நமது ஆயிரக்கணக்கான குழந்தைகளில்
    அவர்கள் இருக்கலாம்///

    மனம் கனக்கிறது.....

    பதிலளிநீக்கு
  11. வலிகளை என்னவென்று சொல்வது..
    மனம் கனக்கின்றது.

    பதிலளிநீக்கு
  12. அட்டகாசமான கவிதை.

    ஒபாமாவின் அறிக்கைக்கு பிறகு நிரந்தர போர் நிறுத்தம் வருமென்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  13. சாத்தூரானை வழிமொழிகிறேன். உலகின் எங்கோ நடக்கும் அநீதி கண்டு உன் மனம் கொதிக்குமானால் நீ என் நண்பன். சே சொன்னது. நீங்கள் சேவின் நண்பர்களா? இல்லையா? குற்றம் நடக்கையில் தட்டிக் கேட்காமலிருப்பவனுக்கும் குற்றத்தில் பங்குண்டு. என்னைக் கேட்டால் தட்டிக் கேட்காமலிருப்பவன் தான் முதல் குற்றவாளி. ஆம், தட்டிக்கேட்க்கப்படும் என்று தெரிந்திருந்தால் குற்றம் நிகழ்ந்தேயிருக்காதே! தேர்தலை நோக்கிய உண்ணாவிரத ஸ்டன்டுக்கும், அங்கீகாரத்தை நோக்கிய கவிதை ஸ்டன்டுக்கும் என்ன வித்தியாசம்? மலினப்படுத்தும் குறுகிய கேள்விதான். வேறு வழி இல்லை எங்களுக்கு. ஆறரைக் கோடித் தமிழர்களும் தொடர்வார்கள் என்ற முத்துகுமாரின் நம்பிக்கை துரோகிக்கப்பட்டு விட்டது. இத்தனை பெரிய நிஜமாகவே யோக்கியமான நீங்களும் அமைதியாயிருப்பது எங்களை இன்னும் எந்த நிலைக்கும் இறங்கி கேள்வி கேட்கச் செய்யவே செய்யும். கேள்வி கேட்பதையும் தாண்டி இட்லர்களுக்கெதிராக நாங்கள் செயலில் இறங்கும்பொது நீங்கள் குற்றவுணர்ச்சியில் குமைந்திருப்பீர்கள் அல்லது அதையும் கவிதையாய் வடிப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. அனானி!
    காமராஜ்!
    கயல்!
    சயரா பானு!
    ஆதவா!
    சுரேஷ்குமார்!
    கண்னா!
    அஷ்வின் கோபாலகிருஷ்ணன்!
    தீப்பெட்டி!
    ஆ.முத்துராமலிங்கம்!
    ஜோ!
    சந்தனமுல்லை!

    அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
    யுத்தம், பேரழிவுகளைக் கொண்டு வருகிறது.
    மனிதத்தை இழக்க வைக்கிறது.
    வன்மத்தை மேலும் மேலும் தூண்டுகிறது.
    இதைத்தான் புலம்பி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. சாத்தூரான்!
    அனானி!
    மிக்க நன்றி.
    உங்கள் ஆதங்கங்கள் உண்மையானது என்றால், உங்களோடு ஆரோக்கியமாக, நேர்மையோடு விவாதிக்கவே நான் விரும்புகிறேன்.
    எப்போதுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது, குறிப்பாக சி.பி,.எம் மீது உங்களுக்கு கோபம் இருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அது தவறில்லை. அவரவர் புரிதலிலும், சூழலிலும் உருவாகிறது.
    இலங்கைத் தமிழர் பிரச்சினையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலைபாடு குறித்து சொல்லியிருக்கிறீர்கள்.
    ஈழத்தமிழர் பிரச்சினையில், விடுதலைப்புலிகளை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பதைப் பொறுத்தே அரசியல் நிலைபாடுகள் அமைகின்றன என்பது எனது கருத்து.
    நேபாளத்தில், கியூபாவில் இனம் என்பது பிரச்சினையல்ல. அரசியல் அதிகாரம் முன்னுக்கு வந்திருக்கிற காலம். மக்கள் சகல வித்தியாசங்களையும் உடைத்துக் கொண்டு ஆளும் வர்க்கத்துக்கு எதிராக நிற்கும் கோலம். அதில் ஒரு நிலைபாடு எடுப்பதும், தலையிடுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சாத்தியமாகிறது.
    இலங்கையில், அப்படி பிரச்சினையல்ல. இனப்பிரச்சினை. ஒரு நாட்டுக்குள்ளேயே மக்கள் இரண்டாய் நிற்கிறார்கள்.
    தமிழ் இனம் பாதிப்புக்குள்ளாகிறது. அடக்குமுறைக்கு உள்ளாகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லாமல் அனைவரும் ஈழத்தமிழர் பக்கம் நின்றிட முடியும்.
    ஆனால், ஆயுதந்தாங்கிய போராட்டம் என்ற வழிமுறைதான் விமர்சனத்திற்குட்பட்டதாக தொடர்ந்து இருந்து வருகிறது.
    அதிகாரத்தில் பங்கு என்பதை விடுத்து, தனி ஈழம் எப்படி சாத்தியம் என்கிற கேள்விகள் முன்வருகின்றன.
    இப்படி முரண்பட்ட கருத்துக்கள் கொண்டு இருப்பதே, ஈழத்தமிழருக்கு துரோகம் விளைக்கும் செயலாக பேசுவது எப்படி சரியாய் இருக்கும்.
    இனைப்பிரச்சினை ஒரு நாட்டுக்குள்ளேயே நிலவும் போது, அதில் ஜனநாயக ரீதியான தீர்வுகளே சாத்தியமானதும் ,சக்தி வாய்ந்ததும் ஆகும்.
    இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற போராளி சேகுவேரா “எங்கே குறைந்த பட்ச ஜனநாயக வழிமுறைகளும் அடைக்கப்படுகின்றனவோ, அங்குதான் கொரில்லப் போர் சாத்தியம்” என்கிறார்.
    ஆக, இந்த யுத்தத்துக்கு, இனவாத இலங்கை அரசு மட்டுமல்ல, விடுதலைப்புலிகளும் காரணமாகின்றனர். இதுதான் இடதுசாரிகளின் நிலைபாடு.
    இதைச் சொல்வதுதான் இங்கு பலருக்குப் பிடிக்கவில்லை.
    அதேநேரம், இலங்கை அரசுக்கு இந்திய அரசு இவ்விஷயத்தில் உதவிகள் செய்திருக்குமேயானால், அதைக் கண்டிப்பாய் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்;எதிர்த்திருக்க வேண்டும்.
    இதையெல்லாம் தாண்டி, பேரழிவின் கொடுமைகள் தாங்க முடியாத மனித உணர்ச்சிகள் எல்லோருக்கும் பொதுவானது. அதை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  16. மீண்டும் ஒரு முறை உங்களிடம் கேட்கிறேன் பிரபாகரனையும் மற்ற போராளிகளையும் விடுங்கள் மரணம் போராளிகளுக்கு மற்றுமொறு பதக்கம் தான். ஆனால் பாவம் அந்த பிஞ்சு குழந்தைகளும்,அப்பாவி ஆதரவற்ற மனிதர்களையும் பாருங்கள். அவர்கள் அங்கே போரினால் அழிந்து கொண்டு இருக்கும் போது நாம் வீதி விதியாக ஓட்டுப் பிச்சை கேட்பது எப்படி உள்ளது தெரியுமா?எவன் வீட்டில் எழவு விழுந்தாலும் என் வயிறு நிரம்பினால் போதும் என்பது போல் உள்ளது.

    மற்ற கட்சிகளை போல் அல்ல மார்க்சிஸ்டுகள் என்பதாலே தொழிற்சங்க அரங்கத்தின் மூலம் ஈர்கப்பட்டு உள்ளே வந்தேன். ஆனால் இன்றோ என் மனசாட்சியின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லாமல் என் கோழைதனத்தையும்,கையாலாகததனத்தையும் எண்ணி வெட்கிதலைகுனிகிறேன்.
    நமது அமைதியை வரலாறு மன்னிக்காது..............

    பதிலளிநீக்கு
  17. கவிதையின் சொற்களுக்குப் பின்னாலிருக்கும் ஆதங்கம் கலந்த வலி மனதைப் பிசைகிறது.

    பதிலளிநீக்கு
  18. வேறு வழியில்லை, இந்த முறை antoவை வழிமொழிகிறேன்.
    சேகுவேரா “எங்கே குறைந்த பட்ச ஜனநாயக வழிமுறைகளும் அடைக்கப்படுகின்றனவோ, அங்குதான் கொரில்லப் போர் சாத்தியம்” அப்படித்தானே தொடங்கியது புலிகள் இயக்கம். ஒரு இனத்தை சல்லிவேர் கூட இல்லாமல் அழித்தொழிக்கும் முயற்சி எந்த மாதிரியான சனநாயக உரிமைகளை உங்களுக்கு தரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

    \\இலங்கையில், அப்படி பிரச்சினையல்ல. இனப்பிரச்சினை. ஒரு நாட்டுக்குள்ளேயே மக்கள் இரண்டாய் நிற்கிறார்கள்.
    தமிழ் இனம் பாதிப்புக்குள்ளாகிறது. அடக்குமுறைக்கு உள்ளாகிறது.\\
    இந்தியாவில் மதத்தின் பெயரால், நம்ம ஊரில் சாதியின் பெயரால், அங்கு இனத்தின் பெயரில். எதன் பெயரில் நடந்தாலும் அடக்குமுறைக்கு எதிராக அநீதிக்கு எதிராக போராடுவதுதானே மார்க்சிஸ்டுகள் வழக்கம். அப்புரம் ஏன் இந்த அமைதி?

    \\அதேநேரம், இலங்கை அரசுக்கு இந்திய அரசு இவ்விஷயத்தில் உதவிகள் செய்திருக்குமேயானால்..\\ இதை எழுதும்போது நிச்சயமாய் மனசாட்சியோடு மல்லுக்கட்டியிருப்பீர்கள். ஜெயித்திருக்கிறீர்கள். மொத்தத்தில் தோற்றிருக்கிறீர்கள். இல்லை இல்லை தோற்றுக்கொண்டிருப்பதென்னவோ தமிழினம் மட்டும்தான்.

    தனிமனிதனாய் இருக்கிற எங்களால்தான் எதுவும் செய்ய இயலவில்லை. போரட்டங்களும் உண்ணாவிரதங்களும் ஆள்வோருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மக்களுக்காக மட்டுமே போராடுகிற இயக்கமாயிருக்கிற உங்களாலும் செயல்படமுடியவில்லை என்பதுதான் வருத்தமாயிருக்கிறது. சரி விடுங்கள், பேசிப் பேசி ஆகப் போவது ஏதுமில்லை. வெட்டியாய் பேசிக்கொண்டிருப்பதற்க்குப் பதில் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாம். தேடிச் சோறுநிதந்தின்று வேடிக்கை மனிதராய் வீழ்வதை தவிர வேறு என்ன செய்துவிட முடிகிறது நம்மால்?

    பதிலளிநீக்கு
  19. Whose going to help these Tamil children and public in Srilanka from Srilankan army??

    In Tamilnadu all politicians parties lke DMK, CONG, ADMK,MDMK,PMK,LEFT-RIGHT COMMIUST AND ETC, they are all using Srilankans Tamil problems for their own victory purpose in coming Election.

    We People should teach a lesson to all the politician parties in coming Election by voting section – 49-O

    பதிலளிநீக்கு
  20. முகமது பாருக்2 மே, 2009 அன்று 11:13 AM

    வணக்கம் அண்ணா,

    ஆயுதம் ஏந்தி போராடுதல் மற்றும் போரில் வெற்றியை விட இழப்புகளும் வசை சொற்களும்தான் மிஞ்சும்.. இலங்கை ராணுவம் தன்னுடைய மக்கள் மீதே இப்படி கொடுரமா தாக்குதல் நடத்துவதை பார்த்தல் சிங்கள ராணுவம் அவர்களை தம் மக்களாக பார்க்கவும் இல்லை.. காலம் காலமாக தமிழனின் பூமியாக உள்ள பகுதியையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு அங்கே கட்டாய சிங்கள குடிகளை அமர்த்தி அங்கே தமிழன் என்ற பூர்வக் குடிகள் அனைத்தையும் அளிப்பதே அவர்களின் ஆசை. ஆனால் இன்று சர்வதேசமும் இந்தியாவும் சேர்ந்து இதை செய்வதைதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..குழந்தைகளையும், தாய்மார்களையும் இப்படி அப்பாவி மக்களை கொள்வதை இந்தியா முழுமையாக ஆதரிக்கிற நிலைமை ரொம்ப வெட்க கேடாக உள்ளது..இது வன்மையாக கண்டிக்க தக்கது..

    இங்கே பிரபாகரன் (காலத்தின் குழந்தைகள் நாம் உட்பட) என்ற ஒருவரை ஏன் இந்த சமுதாயம் உருவாக்குக்கின்றது? என்று பார்ப்பதை விட அவரை அழிப்பதில்தான் அனைவரும் சிந்திகிறார்கள்.. கடந்த காலத்தில் புலிகள் பல தவறுகள் செய்துள்ளனர். அன்று அவருக்கு 28 வயது இன்று 54 வயது காலம் கண்டிப்பாக நிறைய படங்களை கற்றுக்கொடுத்திருக்கும்..இன்றைய பொழுது வரை சிங்கள அரசு தமிழர்களுக்கு சமன் உரிமை மற்றும் தனி மாநிலம் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வில்லை.

    ஒரு எதிர்ப்பு இருப்பதினால்தான் உலக அரங்கில் இந்த விஷயம் விவாதிக்கப்படுகிறது. இல்லையெனில் இலங்கை அரசு கொடுக்கும் செய்திகள் மட்டும் வெளி உலகிற்கு வரும். இந்த விஷத்தை நமது ஈன அரசியல்வாதிகள் வைத்து விளையாடுவது ரொம்பவும் வேதனையை அளிக்கிறது..

    என்னை பொறுத்தவரை சமகாலத்தில் வாழ்வதினால் என்னமோ பிரபாகரனை நம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லையோ?...

    உலக சரித்திரத்தில் அனைத்து போராளிகளுமே காலத்தின் கைகளால்தான் உருவாக்கப்படுகிறார்கள்...நான் வாழும் காலத்தில் பிரபாகரன் என்னும் போராளி ஒரு தனித்துவம் மிக்கவரே. நாம் படிக்கும் வரலாற்றுக்கு வீரர்களுக்கு கை அளவு நாடாவது இருந்தது..ஆனால் இவர்களிடம் இவர்கள் தரப்பு நியாயத்தை கேட்பதற்கு கூட உலகதிற்கும் இந்தியாவிற்கும் நேரம் இல்லை. பல விடுதலை போராட்டங்களை இந்தியா எப்படி அடக்கியது எப்படி இன்னும் அடக்க நினைக்கிறது என்பதற்கு கஷ்மீர், வடகிழக்கு மற்றும் பஞ்சாப். அங்கெல்லாம் உள்ளவர்களிடம் மற்றும் வெளிமாநிலகாரர்களிடம் இந்தியா தேசிய உணர்வை ஊட்டி தப்பித்துக்கொள்ளும் ஆனால் இலங்கை விசயத்தில் குட்டு வெட்ட வெளிச்சமாக அம்பலமாகிவிட்டது..ஈழத்தில் தினம் தினம் பசியாலும் குண்டுகளாலும் இறக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் இந்தியாவிற்கும் மிக்கிய பங்கு உண்டு

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  21. முகமது பாருக்3 மே, 2009 அன்று 7:02 PM

    மன்னிக்க

    //அன்று அவருக்கு 28 வயது இன்று 54 வயது காலம் கண்டிப்பாக நிறைய படங்களை கற்றுக்கொடுத்திருக்கும்//

    பாடங்களை

    //ஈழத்தில் தினம் தினம் பசியாலும் குண்டுகளாலும் இறக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் இந்தியாவிற்கும் மிக்கிய பங்கு உண்டு//

    முக்கிய

    பதிலளிநீக்கு
  22. அண்டோ!
    மார்க்சிஸ்டுகள் இந்தப் பிரச்சினையில் நேற்று ஒரு நிலை, இன்று ஒரு நிலை எடுக்கவில்லை. எப்போதுமே பிரபாகரனின் நிலைபாடு குறித்து விமர்சனமே செய்து வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் அதுகுறித்து பேசாமல் திடீரென்று உங்களுக்குத் தோன்றும்போது பேசுவதும், அல்லது இந்த நேரத்தின் முக்கியம் கருதி பேசுவதும் யாருடைய தவறு தோழனே?

    யாத்ரா!
    நன்றி.

    அனானி!
    //இந்தியாவில் மதத்தின் பெயரால், நம்ம ஊரில் சாதியின் பெயரால், அங்கு இனத்தின் பெயரில். எதன் பெயரில் நடந்தாலும் அடக்குமுறைக்கு எதிராக அநீதிக்கு எதிராக போராடுவதுதானே மார்க்சிஸ்டுகள் வழக்கம். அப்புரம் ஏன் இந்த அமைதி?//
    சரிதான். போராட வேண்டும் என்பதிலும் எதிர்த்து இயக்கம் நடத்த வேண்டும் என்பதிலும் தடுமாற்றம் இல்லை. ஆயுதம் தாங்கி போராடுவதில்தான் முரண்பாடு நண்பரே!

    தமிழன் கறுப்பி!
    நன்றி.

    ஜான் பொன்ராஜ்!
    உங்களின் இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

    முகமது பாருக்!
    இந்த இனப்பிரச்சினை இன்று முளைத்தது போல் எல்லோரும் பேசுவதுதான் வியப்பளிக்கிறது. பலகாலம் நீடித்து இருக்கிறது. ஜனநாய்க ரீதியாக போராடுவதற்கான வழிமுறைகளை அடைத்ததில் விடுதலைப் புலிகளுக்கும் பங்கு உண்டே. ஆயுதம் எடுப்பது இறுதியான வழியாகவே இருக்க முடியும். அதில்தான் முரண்பாடு. ஜனநாய்க ரீதியில் போராடியிருந்தால் விடுதலைப் புலிகள் இன்று சர்வதேச அரங்கிலிருந்து தனிமைப்படுத்த பட்டிருக்க மாட்டார்கள்.

    இதில் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவில்லை என்று நிலைபாடு எடுத்ததைப் போல, இலங்கை அரசுக்கும் ஆதரவு இல்லை என்று சொல்லியிருந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  23. முகமது பாருக்4 மே, 2009 அன்று 7:18 PM

    // ஜனநாயக ரீதியாக போராடுவதற்கான வழிமுறைகளை அடைத்ததில் விடுதலைப் புலிகளுக்கும் பங்கு உண்டே//

    கண்டிப்பாக...ஆனால் இலங்கையில் உண்மையாகவே ஜனநாயகம் என்பதற்கு அர்த்தம் வேறு..எந்த ஒரு காலத்திலும் தமிழரின் உரிமையைப் பற்றி சிங்கள அரசு பேசவே இல்லை. ஒருவேலை விடுதலைப்புலிகளை தவிர்த்து இன்றைக்கு சிங்கள அரசுக்கு ஆதரவு தரும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் போல அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் போல!!.. இப்போ போர்நடக்காத பகுதிகளுக்கு வந்த மக்களுக்கு சாப்பாடு மருந்து எதுவுமே கொடுக்கவிடாமல் தடுத்து ஒரு இனத்தையே அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் கேட்டால் புலிகளை பற்றி பழைய கதையே சொல்லி சிறுவர்களையும் சிருமிகளைகும் பெற்றோரிடமிருந்து பிரித்து கொன்று குவித்து வருகிறார்கள். கேட்பதற்கு நாதியே இல்லாமல் ஒரு மிகப் பெரிய இன அழிப்பை திட்டமிட்டப் படி நடத்திக்கொண்டுள்ளது. இதற்கு இந்தியா முழு உதவி செய்து வருவதைத்தான் பொறுக்க முடியவில்லை. மருந்து மற்றும் உணவு கொடுக்கிறேன் என்று அணைத்து விதமான ராணுவ உதவிகளை புத்திசாலித்தனமாக செய்கிறது நமது தாய்நாடு.

    //இதில் இந்தியா விடுதலைப் புலிகளுக்கு ஆதரவில்லை என்று நிலைபாடு எடுத்ததைப் போல, இலங்கை அரசுக்கும் ஆதரவு இல்லை என்று சொல்லியிருந்திருக்க வேண்டும்.//

    இதையேத்தான் நானும் கேட்கிறேன் அண்ணா. நேற்று பாகிஸ்தானில் தாலிபான்கள் சீக்கியர்களை தாக்கினார்கள் (செய்தியை உறுதிகூட செய்யவில்லை) என்றவுடன் உடனே கண்டித்து அறிக்கைவிடும் இந்தியா. பங்களாதேசில் பிரச்சினை என்றால் உடனே உதவத் தயார் என அறிக்கைவிடும் இந்தியா ஏன் இலங்கையில் மட்டும் இறையாண்மை பற்றி வாய்கிழிய பேசுகிறது?. ஏனெனில் போரை நடத்துவதே இந்தியாதான். பதவிக்காக மொழியை பயன்படுத்தும் ஈன அரசியல்வாதிகளை பார்த்து அனைத்து தமிழ்மக்களையும் எடைப்போட்டு வைத்துள்ளது இந்தியா.

    நீங்கள் சொல்வது போல ஒன்று இருசாருக்கும் உதவாமல் விடுவது. இல்லையேல் விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்குவது?. இந்திய அரசுக்கு பிரபாகரன் வேண்டுமென்றால் நேரடியாக போர்புரியவும். முடியாது ஏனெனில் ஏற்கனவே அவர்களிடம் வாங்கிய அடியை மறக்கவில்லை, சோனியா மற்றும் இந்திய ராணுவத்தின் பழிவாங்கும் போக்கே அங்கே பசியால் குழந்தைகள் மடிவதை பார்த்துக்கூட மனம் இறங்கி ஒரு அறிக்கை கூட விட முடியவில்லை அவர்களால்.

    மதிப்பிற்குரிய அன்னை சோனியாவின் புத்திசாலித்தனம் போபர்ஸ் ஊழல் வழக்கில் தனது சொந்தத்தை காத்ததில் இருந்து புரிந்துகொண்டேன். பிரணப் முகர்ஜி, மன்மோகன் சிங் மற்றும் சோனியாவின் இனப்பற்று நமகில்லாமல் போனதே மிகப் பெரிய வேதனை.. தமிழக ஈன அரசியல்வாதிகளின் முகத்தை மீண்டும் ஒருமுறை வெட்ட வெளிச்சமாக காட்டி உள்ளது ஈழப்பிரச்சினை. 1983 பிறகு இப்போதுதான் அதிக மக்களை கொன்று குவித்துவருகிறது சிங்கள ராணுவம்...

    மிகுந்த வேதனையுடன் தம்பி

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா4 மே, 2009 அன்று 9:48 PM

    Mr.Mathavaraj, in case of Palestine
    your logic will be different. In case of Nepal it will be different.
    In both cases you will support movements that practise violence
    and kill innocent civilians.
    You can oppose LTTE but why are you all opposing the demand for Eelam. In which way the demand for Eelam is less credible than the demand for Palestine. Is it because there USA is supporting Israel, so you will support the demand for Palestine as that would
    go against interests of both Israel and USA. Here China is
    helping the govt. to wage the war
    and is against discussing this
    in the Security Council. Since China is opposing Eelam and supporting the govt. you will
    take an anti-LTTE AND anti-Eelam
    stand. You can support demand for Eelam and still opppose LTTE.
    Why this is not forthcoming from
    CPI(M). Ask yourself this question. There are no easy answers but think.In Nepal the Maoists raised a parallel army, waged violent struggles, killed innocents and you would still
    support them.In case of Sri Lanka
    you all in CPI(M) would become apostles of non-violence. What nonsense it is. Why is that you are unable to write a single sentence against China. If you feel for those children why cant you name those who support and encourage such killings. Nepal is plunging into chaos. Now Maoists will resort to violence and your party is likely to justify it.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!