தார்ச்சாலைகள் வாசிக்கும் பத்திரிக்கைச் செய்திகள்

butterfly man

பாம்புகள் அசையாதிருக்கும்
சிலநாட்கள் அப்படியே
வெறும் தோலாய் மட்டும்

குறுக்கே பாய்ந்த நாய்கள்
குடல் சிதறிக் கிடக்கும்

எதோ ஒரு லாரியிலிருந்து சிந்திய
எதோ சில தானியங்களுக்காக
காடைகளும் மைனாக்களும்
இறக்கைகள் பிய்ந்து
எச்சம் போல ஒட்டியிருக்கும்

இவைகளோடு உற்றுப் பார்க்கலாம்
இரத்தச்சிதறல்கள் எதுவுமற்று
சிறகுகள் விரிந்தபடி
சிலுவையில் அறையப்பட்ட ஏசுக்களாய்
ஏராளமான வண்ணத்துப் பூச்சிகளையும்

சக்கரங்கள் உருண்டோடும் இவ்வழியேதான்
நாட்களெல்லாம் செல்ல வேண்டியிருக்கிறது.

 

*

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. கலக்கல்... இந்தமாத்ரி உணர்வுள்ள கவிதைகளைத்தான் தேடிட்டு இர்நுதேன்... அழகாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 2. //எதோ ஒரு லாரியிலிருந்து சிந்திய
  எதோ சில தானியங்களுக்காக
  காடைகளும் மைனாக்களும்
  இறக்கைகள் பிய்ந்து
  எச்சம் போல ஒட்டியிருக்கும் //


  அதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதுதான் தல வாழ்க்கை

  பதிலளிநீக்கு
 3. \\லாரியிலிருந்து சிந்திய
  எதோ சில தானியங்களுக்காக
  காடைகளும் மைனாக்களும்
  இறக்கைகள் பிய்ந்து
  எச்சம் போல ஒட்டியிருக்கும் \\

  இதன் இன்னோரு அர்த்தம் மனதை என்னவோ செய்கிறது

  பதிலளிநீக்கு
 4. நுணுக்கமான அவதானிப்பு எழுத்தாளர்களுக்கு உண்டு என்பார்கள். உண்மைதான் போலும். எச்சங்களில் தேங்கியிருக்கும் துயரத்தை எங்களுக்குள் கடத்தினீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. ம் ஆமாம். இந்தக் காட்சிகள் பார்க்க நேர்கையில் மன அமைதி சிதறும் கணங்களை உணர்ந்திருக்கிறேன்.

  ஒருநாள் பூனையைக்கூட இப்படி பார்க்க நேர்ந்தது:( அதுவும் வெள்ளை‌ வெளேரென்ற பூனை உடலில் சிவப்பு வண்ணத்துடன்:(

  ஆமாம் மாதவராஜ். எழுத்தாளர் எப்போ கவிஞர் ஆனீங்க.

  பதிலளிநீக்கு
 6. இங்கே இருக்கு பாருங்க 'தொலைந்த கவிதை'. எழுதி 2, 3 வருடங்கள் ஆகியிருக்கும்:(

  http://www.keetru.com/literature/poems/madhumitha_2.php

  பதிலளிநீக்கு
 7. அருமை.

  கலக்(க)கிவிட்டீர் கவிஞரே...

  பதிலளிநீக்கு
 8. ஆதவா!
  சுரேஷ்!
  முரளிக்கண்னன்!

  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. தமிழ்நதி!

  உங்கள் எழுத்தில் இருக்கும் உக்கிரமும், வலியும் சமீபத்தில் நான் பார்த்தறியாதது. நீங்களே சொல்லிவிட்டீர்களா!

  மதுமிதா!

  ஆரம்பத்தில் நான் கவிதைதான் எழுதிக்கொண்டு இருந்தேன். தீபம், கணியாழியில் எல்லாம் ஒன்றிரண்டு கவிதைகள் வந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 10. சுந்தர்!

  நீங்களும் சொல்லிட்டீங்களா!

  பதிலளிநீக்கு
 11. வண்ணத்துப் பூச்சியார்!

  ஷாஜி!

  அமிர்தவர்ஷிணி அம்மா!

  தமிழன்!

  அனைவருக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 12. //சக்கரங்கள் உருண்டோடும் இவ்வழியேதான்
  நாட்களெல்லாம் செல்ல வேண்டியிருக்கிறது//

  நல்லா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 13. ம்ம்ம்ம்.. வாழ்க்கையின் நிஜம் வெகுவாய் புலப்படுகிறது வரிகளில்!

  வாழ்த்துக்கள் தோழரே!

  பதிலளிநீக்கு
 14. எவ்வுயிரையும் தம் உயிரைப்போல்...
  இதை கற்ற சிறு வயதில் இருந்து சுற்றுசூழலில் நடக்கும் உயிர் கொலைகள் வலியை தந்தவாரே இருக்கின்றன. விமான ஓடுதளத்தில்/ பறக்கும் வழிகளில் பறவைகளின் நிலையும் பரிதாபத்திற்குரியது.

  பதிலளிநீக்கு
 15. காட்சிப்படுத்தலாகத் தொடங்கும் கவிதை கருத்தாய் விரிந்து.. கலக்கலாயிருக்கிறது சார்.

  பதிலளிநீக்கு
 16. ஷீ-நிசி!

  பாண்டியன் புதல்வி!

  இப்னு ஹம்துன்!

  உங்களை இங்கே முதன்முறையாக சந்திக்கிறேன். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மிக அழகான, உணர்வான கவிதை..
  நல்லா எழுதி இருக்கீங்க..

  இந்த மாதிரி நல்ல கவிதைகளை எழுத என்னையும் உத்வேகப் படுத்துகிறீர்கள், நன்றி!!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!