விட்டு விடுதலையாகாமல்...



எப்போது பார்த்தாலும்
என்னறையின் கண்ணாடியை
கொத்திக்கொண்டே இருந்தது
அந்தச் சிட்டுக்குருவி

எத்தனைமுறை விரட்டினாலும்
ஜன்னல் வழியே
அம்பென வெளியேறி
திரும்பவும் கண்ணாடிக்கே வந்தது

கண்ணாடிக்குள் சிறைபட்ட
தன்னைப்போல் ஒன்றை
விடுதலை செய்ய போராடியது

முட்டாள் குருவி
செத்துத் தொலையாமல் இருக்க
ஜன்னலை மூடினேன்

இப்போது கண்ணாடியில்
என்முகம் தெரியவில்லை

குருவியே உள்ளிருந்து
கொத்திக்கொண்டிருக்கிறது

ஜன்னலுக்கு வெளியேவும்
குருவியின் சத்தம்.

Comments

15 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. விட்டுவிட முடிவதில்லை...

    ReplyDelete
  2. I am also having this experiments daily.Now I have nearly 4 "chittuKuruvikal" friends.Daily in the morning i used to put some quantitative of rice to them.It is a happy things to us.If i forget to put rice they will give sounds and remember me.My very good friends are these "Chittu kuruvikals".-Selvapriyan

    ReplyDelete
  3. சிட்டு குருவி பறந்த பின் விம்பமும் விடுதலையாகி விட்டது

    ReplyDelete
  4. அழகான கவிதை. இறுதி வரிகள் அருமையாக இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !

    இதே போன்ற குருவியும், கண்ணாடி விம்பமுமான படிமத்தை கவிஞர் ஃபஹீமா ஜஹானின் 'மீட்டெடுக்க முடியாமற்போன விம்பம்' கவிதையிலும் கண்டிருக்கிறேன். ஆனால் அது வேறு உட்கருத்தினைக் கொண்டது. அதன் சுட்டியிது
    http://faheemapoems.blogspot.com/2008/07/blog-post.html

    மனங்களில் சிறகடிக்கும் பட்சிகள் எத்தனை,எத்தனை விதமாக உள்ளிருக்கும் கவிதைகளை வெளிக்கொணர்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறது !

    ReplyDelete
  5. iyalpinum iyalpaai oru kavithai
    super

    nandri thala

    bala

    ReplyDelete
  6. //கண்ணாடிக்குள் சிறைபட்ட
    தன்னைப்போல் ஒன்றை
    விடுதலை செய்ய போராடியது //

    இந்த கவிதையில் நீங்கள் யாரையோ சாடுவது போல் உள்ள்து.

    ReplyDelete
  7. அருமையான கவிதை!!!! இதைவிட அதிகமாக எதிர்பாக்கிறோம்

    ReplyDelete
  8. நல்லாயிருக்கு. உட்கார்ந்து ரொம்ப நேரம் யோசிச்சேன். திரும்பத் திரும்பப் படிச்சேன்...

    ReplyDelete
  9. வாவ்./...

    அட போடவைக்கும் அழகான கவிதை. ஒரு அழகான கவிதைக் காட்சியை கண்ணுக்கு நிறுத்துகிறீர்கள். தன் விருப்பம் மீறியும் மனதுள் நுழையப் பார்க்கும் ஒரு காதல்////

    சிலசமயம் காதலிகள் சிந்திப்பார்களே... அட... அந்த ஜன்னலைத் திறந்துவிட்டுத்தான் பார்ப்பமே என்று!!!!

    எப்போதும் குருவிகளை அடைக்காதீர்கள்... உள்ளேயும், வெளியேயும்.....

    கலக்கல் மாதவராஜ் அவர்களே

    ReplyDelete
  10. கவிதை அருமை!! அதைப் படிக்கும் போது எங்கள் வீட்டுச் “சொந்தக்காரக் குருவி” செய்த அட்டூழியத்தின் விளைவாக, உங்கள்
    படைப்பிலிருந்து என் “மட்டமான காப்பி” பதிவு: விட்டு விடுதலையாகாமல்...நாங்கள்!.

    உங்கள் கவிதையின் உட்கருத்தும், சொற்கோவையும் எப்பவும் போல் அருமை. நன்றி!

    ReplyDelete
  11. வந்து வாசித்து கருத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.,

    ReplyDelete

You can comment here