வலைப்பக்கத்தில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்!

tamilselvan1

எழுத்தாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். பூ படத்தின் கதையான ‘வெயிலோடு போய்’எழுதியவர்.அறிவொளி இயக்கத்தில் முன்னணித் தொண்டர். தொழிற்சங்கவாதி. பண்பாட்டுத்தளத்தில் தொடர்ந்து பணியாற்றும் செயல்வீரர். முன்னாள் இராணுவ வீரர். பிறகு தபால்துறை ஊழியர். இப்படி பல பன்முகங்களும், பரிமாணங்களும் அவரது வாழ்வில் உண்டு. இவையெல்லாவற்றையும் தாண்டி அற்புதமான மனிதராக நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

பாய்க்குப் பேர் போன பத்தமடையில் இருக்கும் அவரது இல்லத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன். அவரே அருமையாக சமைப்பார். பேச்சில் மிக இயல்பான நகைச்சுவை எப்போதும் இருக்கும். எதையும் மிக தெளிவாக யோசிக்கிறவர். மிக நெருக்கமான நண்பர் என்பதில் எனக்குப் பெருமை. தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்த அந்த எழுத்தாளரை சமீபகாலமாக ‘வலைப்பக்கம் வாருங்கள், அதற்கென நேரம் ஒதுக்குங்கள்’ என நச்சரித்துக் கொண்டிருந்தேன். எப்போதும் பயணம் செய்து கொண்டே இருக்கும் அவரை, இங்கேயும் அற்புதமான மனிதர்களும், சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள் என கைகாட்டிக் கொண்டிருந்தேன். இப்போது சம்மதித்து வந்திருக்கிறார். அவருக்கென ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிக் கொடுத்த பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது. இங்கே தமிழ்வீதியில் இழுத்து வந்து விட்டிருக்கிறேன்.

உயிர்மையில் அவர் எழுதிய ‘விடுபட்ட சொற்கள்’தொடரை தமிழ் இலக்கிய உலகம் உன்னிப்பாகவும் உற்றும் கவனித்தது. வலைப்பக்கத்தில் அவர் பேசுவதை தமிழ் வீதியில் உங்களோடு சேர்ந்து கேட்க காத்திருக்கிறேன்.

அதற்கு முன், வலைப்பக்க நண்பர்கள் நாம் அவரை வாழ்த்தி வரவேற்போம்.

இனி அவர்-

 

*

கருத்துகள்

28 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ரொம்ப சந்தோஷம் நண்பா.. அவருடைய எழுத்துக்களை படித்தது இல்லை.. கேள்விப்பட்டு இருக்கிறேன்..பூ என்னை மிகவும் பாதித்த படம்.. அவரும் வலையில் இணைவது மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  2. அறிமுகத்திற்கு மிக்க நன்றி, தமிழ்ச்செல்வன் கோணங்கி முருகபூபதி என்ன ஒரு கொடுப்பினை, வீட்டில் அனைவருமே இலக்கிய வட்டத்தில் இருப்பது

    பதிலளிநீக்கு
  3. ச.தமிழ்ச்செல்வன் அவர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..


    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையானதொரு காரியத்தை செய்திருக்கிறீர்கள் மாதவராஜ்..

    நன்றி.. நன்றி..

    அண்ணனின் வருகை இன்னும் கொஞ்சம் தமிழ் வலையுலகத்திற்கு பெருமை சேர்க்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை..

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல விஷயம் தோழரே!

    வரவேற்கிறோம் தமிழ்ச்செல்வன் அவர்களை!

    அன்புடன்
    ஷீ-நிசி

    பதிலளிநீக்கு
  6. தமிழ்க்கே வரவேற்ப,இல்லை இல்லை பின்தொடர்க என்பதே சரி

    பதிலளிநீக்கு
  7. நல்ல விஷயம்

    வரவேற்கிறோம் தமிழ்ச்செல்வன் அவர்களை!

    மிக அருமையானதொரு காரியத்தை செய்திருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த விடயம்.
    சாதித்துவிட்டீர்கள் மாதவ். மிக்க நன்றி.
    வலை உலகில் உள்ள ரசனையான மனிதர்களை பற்றி அவர் அறிந்துகொள்ளவும்,த மு எ ச வின் மாலுமிகளில் ஒருவரான அவரையும் அவரின் எழுத்துக்களையும் பற்றி நமது தோழர்கள் (கடல் கடந்து )அறிந்துகொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமையும்.மீண்டும் நன்றிகளுடன்.

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு பணியைச் செய்திருக்கிறீர்கள். பாராட்டும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  10. தமிழ்ச்செல்வன் அவர்களே வருக,

    உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வலையுலகுக்கு நல்வரவு தோழர். கொண்டு வந்து சேர்த்த மாதவராஜுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இப்பத்தான் வரவேற்த்தேன்.... ரொம்ப சந்தோஷம்... அவரின் எழுத்துக்களைப் படிக்கவும் ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. நெருங்கிய நண்பரா....??

    அடடே!!! கொடுத்து வைத்தவர்!!!!நீங்கள்!

    பதிலளிநீக்கு
  14. மிக நல்ல விசயம்.
    அவரது சிறுகதை தொகுப்பு(தமிழினி வெளியீடு) தமிழில் மிக முக்கியமான சிறுகதைகள் அடங்கியது.

    எங்கள் மாவட்டம் என்பதால் அவரது கதைமாந்தர்களின் வட்டார மொழி மிகவும் ரசிக்க வைத்தது.

    சமீபத்தில் அவரை சந்தித்தேன். மிகவும் பயனுள்ள சந்திப்பாய் அது அமைந்தது.

    அவரது எழுத்துக்களை வலைப்பூவாக காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  15. நல்ல காரியம் செய்தீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  16. நல்ல காரியம். நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  17. உங்கள் அனைவரின் மகிழ்ச்சியை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

    தமிழோ, ”என்னை இப்படி இழுத்து விட்டுட்டியே” என்றார்.

    எதோ என்னால் முடிந்தது!

    பதிலளிநீக்கு
  18. தமிழ்ச்செல்வனின் கட்டுரைகளும் மிக நன்றாக இருக்கும். அண்மையில் ஒரு தொகுப்புப் படித்தேன். 'சொல்லாத சொல்'என்று நினைக்கிறேன். பிடித்திருந்தது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வலைப்பக்கம் வரும்போது, வாசிக்க நிறையக் கிடைக்கும் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. வாருங்கள். இணைய நீரோட்டத்தில் சேருங்கள். (இதான் அடிக்கடி மேடைப் பேச்சுக் கேட்கக் கூடாதென்பது:)

    பதிலளிநீக்கு
  19. உயிர்மையில் அவர் எழுதுவதை தொடர்ந்து படிப்பேன். கட்டுரைகள் மிக நன்றாக இருக்கும். வலைக்கு வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. த.மு.எ.ச மாநில மாநாட்டில் இந்த மொக்கைச்சாமியையும் மேடையேற்றி கெளரவித்த அண்ணன் தமிழ்ச்செல்வன் அவர்களின் வலைப்பூ வருகை மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகின்றது.

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறோம்..

    பதிலளிநீக்கு
  22. தமிழ்நதி!

    டாகடர்.முருகானந்தம்!

    அப்துல்லா!

    தமிழன் கறுப்பி!

    அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. தமிழ்ச் செல்வன் பெயர் பார்த்ததுமே அந்த எழுத்தைப் படித்துவிட்டே மேற்கொண்டு வேறு பக்கங்களைப் புரட்டுவேன். நல்லதொரு நிகழ்ச்சி இது .வலைப்பூ நன்கு மலரும். மிக்க நன்றி நண்பர் மாதவராஜ்.

    பதிலளிநீக்கு
  24. வல்லிசிம்ஹன்!

    இங்கு உங்களை சந்தித்து ரொம்ப நாளாகி விட்டது. வருஅகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  25. மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

    வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. நல்லதொரு பணியைச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்..!

    நன்றி! வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!