மின்சாரம் சுருட்டிய பறவைகள்

 


குழந்தைகளின் சத்தங்களால்
தெருவே
நிறைந்து ததும்பியது  

அப்போதுதான் பூத்ததாய்
மங்கிய நிலவின் வெளிச்சம்  

ஒளிந்து விளையாடினார்கள்
ரெயில் ஓட்டினார்கள்
யாரோ சத்தம் போட
வீடு கட்ட
கொட்டிக் கிடந்த மணலில்
குதித்துக் கிடந்தவர்கள்
'ஹோவென்று' கலைந்தார்கள்
அங்கொரு வேப்ப மரத்தடியில்
மீண்டும் சேர்ந்தார்கள்  

பளிரென தெருவும்
வீடுகளும் விழித்துக் கொண்டன  

சட்டென குழந்தைகள்
மாயமாகிப் போனார்கள்  

சோடியம் விளக்கு
அனாதையான தெருவின் மீது
தனியாய் சிரித்துக் கொண்டிருந்தது.

Comments

13 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. சோடியம் விளக்கு
    அனாதையான தெருவின் மீது
    தனியாய் சிரித்துக் கொண்டிருந்தது^)நீங்கள் எழுதிய கவிதையில் இந்த வரி என்னை கவர்ந்து உள்ளது.இது அல்லவா கவிதை

    ReplyDelete
  2. கஜன்ஸ்!

    மீண்டும் உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல கவிதையும் அதற்குப் பொருத்தமான தலைப்புமாக அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  4. வாங்க வடகரை வேலன்!

    கொஞ்ச நாளாய் பார்க்கலையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. சுருங்கச் சொல்லி விளங்கப்பண்ணும்
    நகர நடப்பு அருமை மாது

    ReplyDelete
  6. \\சோடியம் விளக்கு
    அனாதையான தெருவின் மீது
    தனியாய் சிரித்துக் கொண்டிருந்தது.\\

    அழகான சிரிப்பு (சிந்திப்பு) ...

    ReplyDelete
  7. காமராஜ்!

    நட்புடன் ஜமால்!

    இருவருக்கும் நன்றி.

    ReplyDelete
  8. நகரீயமயமாதலின் அழித்தொழிப்பு சரியாய் வந்திருக்கிறது..
    நன்று..

    ReplyDelete
  9. வாங்க அய்யனார்!

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. இயற்கையை வென்ற செயற்கை! செயற்கை யாவும் சூழ் நிலையை ஒத்து இருப்பதில்லை; செயற்கையில், இயற்கைகள் கரைந்து போகின்றன. நல்ல எண்ண ஓட்டம்.

    ReplyDelete
  11. சந்தர்!

    உங்கள் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.

    ReplyDelete

You can comment here