ஆளுக்கொரு டார்ச் லைட்
அவரவர் கைகளில் இருக்கிறது.
தேவைப்பட்ட நேரத்தில்
தேவைப்பட்ட இடத்தில் மட்டுமே
வெளிச்சத்தை செலுத்திட முடிகிறது.
தங்களை இருட்டில் வைத்துக்கொள்ளவும்
அடுத்தவர் முகங்களை மட்டுமே பார்க்கவும்
வசதி இருக்கிறது.
தங்கள் முகங்களில் அடித்துப் பார்த்து
அவை பேய் பிசாசாய்
தன்னையே பயமுறுத்துவதை
யாரும் விரும்புவதில்லை.
தங்களை இருட்டில் வைத்துக்கொள்ளவும்
பதிலளிநீக்குஅடுத்தவர் முகங்களை மட்டுமே பார்க்கவும்
வசதி இருக்கிறது; இந்த வரி எனக்கு பிடித்து உள்ளது.நல்லா எழுதிறீங்கா
கஜன்ஸ்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
கட்டுரைகள் எழுதிய என் நண்பர் இப்பொழுது கவிதைகளுமா , வாழ்த்துக்கள் நண்பருக்கு
பதிலளிநீக்குGg!
பதிலளிநீக்குநண்பா!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
இதை கவிதை என்று சொல்ல கூச்சமாய்த்தான் இருக்கிறது.
கவிதை போல சில வரிகள்.
\\தங்களை இருட்டில் வைத்துக்கொள்ளவும்
பதிலளிநீக்குஅடுத்தவர் முகங்களை மட்டுமே பார்க்கவும்
வசதி இருக்கிறது\\
அருமை ...
Uncle!
பதிலளிநீக்கு"இருட்டில் தன் முகம் ஒளித்து அடுத்தவரை மட்டும் குறி பார்க்கும் டார்ச் லைட்டுகளையே எங்கும் காண்கிறேன்!
தன் முகம் மட்டும் காட்டி சூழலையே அழகாக மாற்றும் அகல் விளக்குகளுக்காக ஏங்குகிறேன்!"
இது தான் ஒரிஜினல். நீங்கள் 2000 ஆம் அண்டு எழுதிய கவிதை. என்னிடம் அந்தக் காகிதம் இன்னும் பத்திரமாக உள்ளது!
நட்புடன் ஜமால்!
பதிலளிநீக்குநன்றி.
தீபா!
பதிலளிநீக்குஆஹா...
அந்தக் கவிதை இப்போது முழுமையாய் ஞாபகத்துக்கு வருகிறது.
நன்றி.
பிறகு புத்தகமாக வரும் போது சரி செய்து கொள்வேன்.
எனக்கு கமிஷன் வேண்டும், நினைவூட்டியதற்கு! (சும்மா)
பதிலளிநீக்கு