அன்புடையீர்!
தீராத பக்கங்கள் திறந்தவுடன் 'Subscribe' செய்ய ஒரு வேண்டுகோளை பார்க்கலாம். ‘சரி’ என்பதை க்ளிக் செய்யுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பிரவுசர் ‘allow’ செய்ய கேட்கும். ‘Allow’ செய்ய அனுமதியுங்கள். தீராத பக்கங்களில் புதிய பதிவு வந்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் / மொபைலில் notification வந்துவிடும். நன்றி.

அஞ்சி நடுங்கும் மோடியின் அரசு!


50க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. டெல்லி காவல்துறையினரோடு ஏறத்தாழ 30,000 துணை ராணுவத்தினரும் இறக்கப்பட்டு இருக்கின்றனர். இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. வழிகள் எல்லாம் சோதிக்கப்படுகின்றன. ஜந்தர் மந்தருக்கான சாலைகள் அடைக்கப்பட்டு விட்டன.  

பினராயி விஜயன், மாணிக் சர்க்கார், அரவிந்த கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகிய நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். சி.பி.எம் பொதுச்செயலார் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.காரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே விமானத்திலேயே கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இருக்குமிடம் தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் மாண்புமிக்க வழக்கறிஞர்கள் கைது செய்யபப்ட்டு இருக்கின்றனர். பத்திரிகையாளர்கள் விரட்டப்பட்டிருக்கின்றனர். இடதுசாரி மாணவ அமைப்புகளின் தலைவர்கள் அடாவடித்தனமாக கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஊர்வலமாய் வந்தவர்கள் மீது இரக்கமற்று தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. 


மொத்தமுள்ள 90 கோடி வாக்காளர்களில், 13 கோடி பேரின் வாக்குகளைத் திருடிய தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாரைக் காப்பாற்றுவதற்காக மோடியின் பாஜக அரசு இத்தனை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது. அமைதியான முறையில் ஜந்தர் மந்தரில் கூடி குரல் எழுப்புவதைத் தடுக்கத்தான் இத்தனை அராஜகத்தையும் அரங்கேற்றியிருக்கிறது. 


சர்வ வல்லமை பொருந்திய மோடியும், சகல அதிகாரம் கொண்ட அரசும் அச்சத்தில் ஆடிப் போயிருப்பது தெரிகிறது. ஏனென்றால் போராடுகிறவர்கள் - அவர்களை நோக்கி விரல் சுட்டுகிறவர்கள் – யாரென்றால் இந்த தேசத்தின் இளைஞர்கள். அரசின் அத்தனை தடைகளையும், மிரட்டல்களையும், நடவடிக்கைகளையும் மீறி டெல்லியின் பல பகுதிகளில் இளைஞர்கள் அணி அணியாய் கூடிக்கொண்டு இருக்கிறனர். அவர்கள் கூடும் இடமெல்லாம் ஜந்தர் மந்தர்களாகின்றன. 


இளம் தலைமுறை விழித்துக் கொண்டதுதான் இப்போது ஆட்சியாளர்களை நடுக்கமுறச் செய்திருக்கிறது. 


அந்தத் தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வும், போர்க்குணமும் வந்து விடக் கூடாது என்றுதான் விஜய் போன்றவர்களுக்கு ஆளும் வர்க்கம் ‘கியூட்டாக’ பிம்பம் கட்டி விடுகின்றன. இதையும் சேர்த்துத்தான் இந்த தருணத்தில் யோசிக்க வேண்டி இருக்கிறது. 


2 Comments

You can comment here

  1. நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தங்கள் பெயர் தெரிவிக்கலாமா?

      Delete
Previous Post Next Post