'2025' புத்தாண்டு வாழ்த்துகள்!



சென்ற வருடம் முழுவதும் கிட்டத்தட்ட சட்டப் போராட்டத்திலும் அதுகுறித்த சிந்தனைகளோடும் செயல்பாடுகளோடும்தான் கடந்திருக்கிறது.
 
வருடத்தின் ஆரம்பத்தில் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருந்தது. எனவே என் மீதான விசாரணையை ஆரம்பித்திருந்தது. தீர்ப்பை எதிர்த்து அப்பீலுக்குச் சென்ற போதிலும், நிர்வாகத்தின் விசாரணையை எதிர்கொண்டேன்.  
 
தலைமையலுவலகத்திற்குள் சென்று சேர்மனிடம் தகராறு செய்ததாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எந்த வித அடிப்படை ஆவணங்களும், முக்கியமான சாட்சிகளும் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. வங்கியின் சிசிடிவி பதிவு கூட இல்லை. சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட நாளன்று எதோ சிசிடிவி ரிப்பேர் என்று மிகச் சாதாரணமாக நிர்வாகம் விசாரணையில் தெரிவித்தது. தயார் செய்யப்பட்டு ஆஜர் செய்யப்பட்ட சாட்சிகள் குறுக்கு விசாரணையில் தட்டுத் தடுமாறினார்கள்.
 
அதுதான் ஆகஸ்ட் மாதத்திலேயே விசாரணை முடிந்து, விசாரணை அதிகாரி அறிக்கையை சமர்ப்பித்தும் கூட என் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது நிர்வாகம். அக்டோபரில் சென்னை ஹைகோர்ட்டில் நான் தொடுத்திருந்த அப்பீலில் சாதகமான தீர்ப்பு வந்தது. நிர்வாகம் அதனை ஏற்றுக்கொண்டு டிசம்பர் மாதத்தில் பணி ஓய்வு சலுகைகளை வட்டியோடு தந்தது.
 
பயணங்களும், அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்பும் அங்கங்கே ‘மானே’, ‘தேனே’  என நாட்களாக இணைந்திருந்தன. இப்படியாக 2024 அமைந்திருந்தது.
 
‘க்ளிக்’ நாவலைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்து ‘காணாமல் போனவன்’ நாவல் முயற்சி அப்படியே நிற்கிறது.
 
இந்த வருடத்தில் முக்கியமாக–
 
என் மீது நிர்வாகம் நடத்திய விசாரணையை ஆவணப்படுத்த வேண்டும்.
 
‘காணாமல் போனவனை’ மீட்டெடுக்க வேண்டும்.
 
வாழ்வெல்லாம் போராட்டங்களும் சோதனைகளும் நிறைந்த ஒரு தோழர் தன் சுயசரிதையை எனக்கு மனம் திறந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதை கதையாகச் சொல்ல வேண்டும்.
 
அப்புறம்… எனது வலைத்தளம் ‘தீராத பக்கங்களை’ மாதவராஜ் என்ற பெயரில் ஒரு செயலியாக (app) மாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அதற்கான சோதனை ஒட்டம் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் Play Store / Google Playவில்  Mathavaraj  இருப்பான்.
 
பணிகள் முன்னே இருப்பது எப்போதும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.
 
பார்ப்போம்.
 
அனைவருக்கும் ‘ 2025’ புத்தாண்டு வாழ்த்துகள்!

Comments

2 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. பல போராட்டத்திற்கு பிறகு வெற்றி..!! இறுதியில் அருமையான வருடம் உங்களுக்கு 2024. 2025யில் நீங்கள் செய்ய நினைக்கும் பல முயற்சிக்கு என் அன்பான வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பொன்ராஜ். அன்பும், மகிழ்ச்சியும்!

      Delete

You can comment here