நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 2



“நான் என்ன செய்கிறேன் 
தெரியுமா? ‘
 
“கருப்புப் பணத்தை
மீட்பதாகச் சொன்னீர்கள்
எல்லோர் கணக்கிலும் பதினைந்து லட்சம்
வரவு வைப்பதாய்ச் சொன்னீர்கள்
ஒவ்வொரு ஆண்டும்
இரண்டு கோடி பேருக்கு
வேலை தருவதாகச் சொன்னீர்கள்
பெட்ரோல் விலையை
குறைப்பதாகச் சொன்னீர்கள்
அமெரிக்க டாலருக்கு இணையாக
ருபாயின் மதிப்பை
உயர்த்துவதாகச் சொன்னீர்கள்
ஊழலை அடியோடு
ஒழிப்பதாகச் சொன்னீர்கள்
ஏழை மக்களுக்காக
ஆட்சி நடத்துவதாகச் சொன்னீர்கள்
கங்கை நதியை
சுத்தம் செய்வதாகச் சொன்னீர்கள்
ஜனநாயகத்தின் கோவிலென்று
பாராளுமன்றத்தைச் சொன்னீர்கள்!”
 
“போதும். நிறுத்து! நிறுத்து!!
செய்வதைக் கேட்டால்
சொன்னதையெல்லாம் சொல்கிறாய்!
துரோகியே!
இன்னுமா அதையெல்லாம்
நினைவில் வைத்திருக்கிறாய்”

Comments

8 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. தேச துரோகி பட்டம் தங்களுக்கு ரெடி
    மு.மாரிமுத்து

    ReplyDelete
    Replies
    1. நல்லது தோழர் மாரிமுத்து!

      Delete
  2. ஆகா... அதிபர் அவிழ்த்து விட்ட பொய்களை அடுக்கிய
    அங்கத கவிதை அருமை!
    __மு.அருணகிரி அவனியாபுரம் மதுரை

    ReplyDelete
    Replies
    1. மக்கள் மறந்துவிடக் கூடாதே. நினைவுபடுத்துவது நம் கடமை அல்லவா. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அருணகிரி.

      Delete
    2. மக்களின் மறதி தானே மன்னனின் மணி மகுடம்

      Delete

You can comment here