க்ளிக் நாவலுக்கு திருப்பூர் தமிழ் சங்க விருது!



2022ம் ஆண்டின் சிறந்த நாவலாக ‘க்ளிக்’ நாவலை தேர்ந்தெடுத்து 28.9.2023 அன்று விருது வழங்கியது திருப்பூர் தமிழ் சங்கம்.

நாவல், கட்டுரை, சிறுகதை, கவிதை தொகுப்புகளில் தமிழ் சங்கம் தேர்ந்தெடுத்த புத்தகங்கள்:

நாவல்:
---------
க்ளிக் – மாதவராஜ்
இராஜ ராஜ சோழனின் சபதம் – முகிலன்

கட்டுரை:
-----------
நீர் – ப.திருமலை
யானைகளின் வருகை – கா.சு.வேலாயுதன்

சிறுகதை:
-------------
அரண்மனை வனம் – இந்திரநீலன் சுரேஷ்
ஊடு இழை – பல்லவி குமார்
கவிதை:
----------
கடவுளின் மரபணு கூடம் – சின்மய சுந்தரன்
கவிப் பூங்காடு – கொ.மா.கோதண்டம்

படைப்பாளிகளுக்கு இது போன்ற அங்கீகாரமும் வெளிச்சமும் மிக முக்கியம். உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரும் காரியம்.

படைப்புகளை தேர்ந்தெடுத்த நடுவர்களுடனான உரையாடல் சுவராசியமாக இருந்தது. மேலோட்டமாக இல்லாமல் உள்ளார்ந்த, ஈடுபாட்டுடனான நடுவர்களின் சிரத்தையை அறிந்த போது, தம் படைப்புகளின் மீது படைப்பாளிகளுக்கே நம்பிக்கை கூடியிருக்கும்.

மக்களைத் திரட்டி அவர்களின் முன்பு பெரிய ஏற்பாடுகளோடு விருது அளிக்கும் விழாவை நடத்துவது சாதாரணமானது அல்ல. 31 வருடங்களாக இந்த காரியத்தை தொடர்ந்து செய்து வரும் திருப்பூர் தமிழ் சங்கத்துக்கு பாராட்டுகளும், நன்றியும். விருது வழங்கிய நீதியரசர் மகாதேவன் அவர்களிடம் தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் இருந்த பிடிப்பு விருதுக்கு அர்த்தமளிப்பதாய் இருந்தது.

தமிழ்நாட்டின் முக்கிய இலக்கிய ஆளுமைகள் பலரும் திருப்பூர் தமிழ் சங்கத்தின் விருதைப் பெற்றவர்கள் என அறியும்போது, அந்த வரிசையில் ஒருவனாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!