க்ளிக் நாவல் வெளியீடு சாத்தூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற நிகழ்வு திருவுடையான் தண்டபாணியின் காதல் ததும்பும் பாடல்களோடு துவங்கியது. சாத்தூர் தமுஎகச தலைவர் தோழர் பிரியா கார்த்தி தலைம தாங்க, கிளையின் பொதுச்செயலாளர் தோழர்.விஸ்வநாத் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வை தமுஎகச மாநில துனைப் பொதுச்செயலாளர் தோழர் லஷ்மிகாந்தன் தொகுத்தளித்தார்.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட்டார். இளம் தலைமுறையினர் அகிலன், காவ்யா, தனலட்சுமி, மீனாட்சி, அய்னி பாரதி, ரத்தன் பாபா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் தோழர் அறம் , எழுத்தாளர்கள் உதயசங்கர் , மணிமாறன் , உமர் பாருக் , முத்துலட்சுமி, அண்டோ கால்பர்ட் , சுமதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இன்றைய இளைஞர்களின் மனநிலையை, ஐ.டி துறையின் சமூக தாக்கங்களை, சென்ற தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்குமான கால மாற்றங்களை, ஆண் பெண் உறவுகளை ‘க்ளிக்’ பேசுகிறது என்றனர். மிக சுவாரசியமான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அடர்த்தியான விஷயங்களை அங்கங்கு மனித மனங்களுக்கு கடத்திச் செல்கிறது என்றும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.
வாழ்வில் கிடைத்த அனுபவங்களும், அதுகுறித்த சிந்தனைகளுமே படைப்புக்களுக்கு ஆதாரமாய் இருக்கின்றன என்றும், புறச்சூழல்களால் படைப்பாளி இயங்குவதாகவும், தனது ஏற்புரையில் எழுத்தாளர் மாதவராஜ் தெரிவித்தார்.
கிளையின் துணைத் தலைவர் காதம்பரி வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
க்ளிக் நாவல் குறித்து அறிமுகமாகவும், ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் நூல் வெளியீடு அமைந்திருந்தது.
வெளியீடு நிகழ்வு குறித்த வீடியோ மேலே பகிரப்பட்டுள்ளது.
க்ளிக் நாவல்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
விலை ரூ. 250/-
ஆன்லைனில் வாங்க: Thamizh Books
அல்லது கீழ்கண்ட QR code ஐ ஸ்கேன் செய்து புத்தகத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.