செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?






"ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகிறது.  தமிழகத்தை மின்மிகை மாநிலமாக நீங்கள் மாற்றுவதாகச் சொன்னதைக் கூட நாங்கள் மறந்துவிடுகிறோம். மின்வெட்டைக் குறைப்பதற்காவது நடவடிக்கை எடுங்கள். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“ அம்மாவின் பெயரால் குறைந்த விலைக்கு சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கொடுக்கிறீர்கள். அதுபோல தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கடுமையாக ஏற்றிய பால்விலை, பஸ் டிக்கெட், மின்சாரத்தையும் அம்மாவின் பெயரால் மலிவு விலைக்கு வழங்கி, செய்த பாவத்துக்கு புண்ணியம் தேடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“இலவசமாய் ஆடு கொடுத்ததும் போதும், மாடு கொடுத்ததும் போதும். தாங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தால் இலவசமாய் கல்வி கொடுக்க ஏற்பாடு செய்யுங்களேன். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“நான் அங்கம் வகிக்கும் மத்திய அரசு இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும்  தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும்  கச்சத் தீவை மீட்கும் என்றும் திரும்பத் திரும்ப ஒப்பிக்கிறீர்கள். அதெல்லாம் இருக்கட்டும். முதலில் இந்த அண்ணா நூலக இடமாற்றத்தை கைவிடலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“காங்கிரஸின் தவறான ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரமே சீர்குலைந்துவிட்டதாகவும், நாட்டு மக்களெல்லாம் அவதிப்படுவதாகவும் கூட்டத்துக்கு கூட்டம் ஆவேசமாகப் பேசி வருகிறீர்கள். தவறான ஆட்சிக்கு முக்கிய காரணமே,  சில முதலாளிகளின் நலன்களுக்காக பெரும்பான்மை மக்களை வாட்டி வதைக்கும் தனியார்மயத்தை காங்கிரஸ் ஆதரித்த போக்குத்தான். தாங்கள் நல்லாட்சி செய்ய வேண்டுமென்றால் அந்த தனியார் மயத்தை கைவிட வேண்டி வரும். செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“மக்கள் ஒற்றுமைக்கு எதிரான கட்சி பா.ஜ.க என்றும், பா.ஜ.க ஆட்சிக்கு வருவது பிளவு வாத சக்திகளை மேலும் ஊக்குவிக்கும், நாட்டுக்கு பேராபத்து காத்திருக்கிறது என்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் எச்சரிக்கின்றன.   தாங்களும் பிளவுவாத சக்திகளை முறியடித்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்போம் என ஜான்சிராணி போல சூளுரைக்கிறீர்கள். அப்படியென்றால் பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டு இல்லை என அறிவிக்கலாமே. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”

“250 ருபாய் கொடுக்குறேன்னுச் சொல்லி இங்க கூட்டி வந்தாங்க. புள்ளைகளத் தனியா விட்டுட்டு வந்தேன். மூணு மணி நேரமா இந்த வெயில்ல காத்துக் கெடக்கேன். குடிக்க ஒரு பாக்கெட் தண்ணிதான் தந்தாங்க. இப்ப வீட்டுக்குப் போகவும் விட மாட்டேங்குறாங்க. சீக்கிரமா ஹெலிகாப்டரில் வந்து தொலைங்க. செய்வீர்களா?.... நீங்கள் செய்வீர்களா?”




கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. மாதூஉஉஉஉஉஉஉஉஉ! வந்துட்டிங்களாய்யா... வாங்க வாங்க..
    சரியா ரெண்டு ஆண்டு வனவாசமா? மௌனவிரதமா? ஏதோ ஒன்னு.
    திரும்பவும் உங்கள எழுத வைத்த தேர்தலுக்கு நன்றி. உங்கள் எழுத்தைத் தொடர்ந்து எழுத வேண்டி நான் வைத்த கோரிக்கையில் ஒன்று -எப்படியோ நிறைவேறிடுச்சு! பார்க்க - http://valarumkavithai.blogspot.in/2013/09/blog-post_6153.html. நன்றி நன்றி தொடர்ந்து எழுதவேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே போய்விடுவோம்.இங்குதான் இருக்கிறோம்.
      மிக்க நன்றி தோழர்.
      உங்கள் பதிவைப் படித்தேன். உற்சாகமாய் இருக்கிறது.
      எழுதுவோம்.

      நீக்கு
  2. செய்யமாட்டாங்க தோழரை....மிக அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  3. அவங்க செய்யுறாங்களோ இல்லயோ! நாம் செய்வோம்! ஆட்சி மாற்றத்தை...,

    பதிலளிநீக்கு
  4. regarding dr. Jayalalitha our c.m. think about the question asked by the people not by mr.madhavaraj.

    பதிலளிநீக்கு
  5. இதையும் சேத்துங்க.

    முதல்வர் அவர்களே, தொலைகாட்சிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பேசும் தங்கள் கட்சித் தலைவர்களை ஒரு முறையாவது உங்கள் பெயரை உச்சரிக்கச் சொல்லுங்கள். எல்லாமே நீங்கள்தான் என்று அவர்கள் கூறினால் கட்சியை அழித்துவிடுங்கள்.

    சரி, பாஜக மதவாதிக் கட்சி என்று கூறும் நீங்கள், இந்தியாவில் மைனாரிடிகளின் ஒட்டுக்கள் காலம் காலமாக மசூதிகளிலிலும் தேவாலயங்களிலும்தான் தீர்மானிக்கப் படுகின்றன என்கிற உண்மையை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு... திராவிட,மது போதையில் அடிமை தமிழன்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!