சிறு பெருமையோடு….!

Honey Bee pencil

இதற்கு முன்னரும் என் மகள் ஜோதிஷ்ணா ஒரு குறும்படம் எடுத்திருந்தாள். ரொம்பச் சாதாரணமாக இருந்தது. இந்த ‘Honey Bee pencil' குறும்படமும் அவளுக்கு திருப்தியில்லாமல்தான் இருக்கிறது. இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாள். இதைவிடவும் அவளோடு visual communication படிக்கும் நண்பர்கள் மிகச் சிறப்பாக செய்திருப்பதாக பாராட்டிக்கொண்டு இருக்கிறாள். ஆனால் எனக்கு இந்தப் படமே சிறு பெருமையாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.

 

தொழில்நுட்பரீதியாக இந்தப் படம் மிகச் சாதாரணமானதுதான். இந்தப் படம் பேசும் விஷயம்தான் முக்கியமானதாகவும் ஆழமானதாகவும் படுகிறது எனக்கு. ஒரு சிறு ஆசையை வைத்து குழந்தையின்  மனவுலகில்  சஞ்சரிக்கும் இந்தப் படத்தில்  ஆசை குறித்தும், வெறுமை குறித்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. கேட்பது, கொடுப்பது இரண்டிலும் இருக்கிற சந்தோஷங்களை தவறவிடுவதை அதீதமில்லாமல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்து குறிப்பிட வேண்டியது கரீனாவாக நடித்திருக்கும் அந்த சிறு பெண்!

 

நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்.

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. குழந்தைகள் மிக சிறிய விஷயங்களில் சந்தோஷமடைகின்றனர்.அவர்களின் உலகத்திற்கு இந்த குறும்படமும் நம்மை சில கணங்கள் அழைத்துச் சென்று அவர்களின் ஆசை, ஏக்கம்,இன்பம்,நேர்மை,நட்பு,பாசம் ஆகியவற்றை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 2. கண் கலங்கி விட்டது.
  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. அண்ணே அருமை..

  ஜோதிஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 4. அன்பின் மாதவ்

  HONEY BEE PENCIL குறும்படம் நானும் எனது மகள் இந்துவும் பார்த்தோம்..
  சிறப்பாக வந்திருப்பதாகவே இருவரும் ரசித்தோம்...

  நீங்களே சொல்லியிருப்பது போல், மிக எளிய கதை என்றாலும் லைட்டிங், காட்சி அமைப்பு, சொல்ல வந்த செய்தியை வழங்கி இருக்கும் விதம் இவை யாவும் பாராட்டுக்குரியது என்று இந்து விவரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்...

  நடிப்பு கச்சிதம்....

  குழந்தைகளுக்கு ஒரு பொருள் மீது விருப்பமும், ஆர்வமும், அடைய வேண்டும் என்ற கனவும் எப்படி கூடுகிறது என்பதை இந்தப் படம் அருமையாக வளர்த்துக் காட்டுகிறது....

  குழந்தைகள் எப்படி அடுத்தவர் பொருளைத் தன்னகப் படுத்துவதும், அது குறித்த சுய பரிசீலனையில் எப்படி சகஜமாய் இறங்குகிறார்கள் என்பதும், அன்பின் கரைதலில் இந்தச் சிறு களவு ஒரு திருட்டாகவே பார்க்கப் படவில்லை என்பதும், பரஸ்பரம் மீண்டும் தங்களது சொந்தப் புள்ளியில் எப்படி அவர்களால் கலந்துவிட முடிகிறது என்பதும் ஜ்யோதிஷ்ணாவுக்குப் பிடிபட்டிருப்பது ஒரு கலைஞராக அவரது உருவாக்கத்தின் முக்கிய மெயில் கல்லாகக் கொண்டாட முடியும்

  அதை இன்னும் அழகுபடுத்துவது, நெகிழ்ச்சியை வழிய கூட்டுவது, இசையைச் சேர்ப்பதாக எண்ணிக் கொண்டு பார்ப்பவர் மனத்தில் தாமாக உருவாகும் சித்திரத்தைக் கலைத்துத் திணிப்பது இவற்றை எதற்கு யோசிக்க வேண்டும்..

  சுந்தர ராமசாமியின் ஸ்டாம்ப் ஆல்பம் என்ற சிறுகதையை நீங்கள் வாசித்திருக்க வில்லை எனில் உடனே தேடி எடுத்து வாசிக்கவும்....
  அதை ஜ்யோதிஷ்ணா சிறப்பாகக் குறும்படம் ஆக்க முடியும் என்று உடனே தோன்றியது....

  சிரமப்பட்டு ஸ்டாம்ப் சேர்த்து ஆல்பம் தயாரிக்கத் துடிக்கும் சிறுவனை, சிங்கப்பூரில் இருந்து உறவினர் மூலம் கிடைத்த ஆல்பம் வைத்திருக்கும் நண்பன் பாதித்துவிடுகிறான்.. அதைப் பார்க்கப் போகும் சாக்கில் அவன் வீட்டில் இருந்து இவன் அதைத் திருடியும் வந்து விடுகிறான்....ஆனால் விஷயம் காவல் துறை வரை சென்றுவிடுகிறது....மிகவும் சிக்கல் மிகுந்த அந்தக் கட்டங்களையும், தனது விருப்பத்தை மீறி அந்தச் சிறுவன் செய்ய வேண்டி வரும் வேதனையான ஒரு வேலையும்...அய்யோ...குழந்தைகள் உலகின் உளவியல், குற்ற உணர்ச்சி, தப்பிக்கத் துடிக்கும் தத்தளிப்பு இவற்றை சு.ரா கலக்கலாகச் செய்திருப்பார்....அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த ஆண்டு எடுத்துப் படித்தேன் இந்தக் கதையை...

  வாழ்த்துக்கள் ஜ்யோதிஷ்ணா...இன்னும் புதிய உயரங்களைத் தொடவும், மனித வாழ்விலிருந்து கற்றதை அவர்களுக்கே திரும்ப எடுத்துச் சொல்லவும்....

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 5. நண்பர்களே...
  நேற்று சனிக்கிழமை 18 - 05 - 2013 அன்று,
  பதிவர் பட்டாபட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
  பதிவுலகமே இயங்காமல் மவுன அஞ்சலி செலுத்தியது.
  பேஸ்புக்கில் கூட, தினமும் ஸ்டேட்டஸ் போடும் பலர்,
  நேற்று கருத்திடாமல் மவுன அஞ்சலி செலுத்தினர்.
  அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

 6. வழ்த்துக்கள் மாதவராஜ் அவர்களே! ஜொதிஷ்ணா வுக்கு ஆசிகள்! தந்தையிடம் haoney bee pencilukkaaka நச்சரித்த அந்தச் சிறுமியிடம் தாய் அதட்டி எழுந்து வா என்கிறாள்! பயந்து விரலை வாயில்வைத்துக் கொண்டு தந்தையைப் பார்க்கும் அந்தச் சிறுமியின் முகம் நம் இதயத்தைப் பிசைகிறது! surprise ஆக தந்தை பென்சிலைக் கொடுக்கும் போது சிறுமி பொங்கி பூரிக்கவில்லை ! மாறாக அமைதியாக வாங்கிச் செல்கிறாள்! "என்னாச்சு இவளுக்கு! ஒண்ணுமே சொல்லமப் போரா! "என்று தாய் ஆச்சரியப்படுகிறாள்! சிறுமி கரீனாவின் --அந்த சின்ன மனுஷியின் --soul torture இதைவிட மென்மையாகவும் மேன்மையாகவும் சித்தரிக்கமுடியாது! ஜொதிஷ்னாவுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்! தோழா!
  subtitle போட்டு பரவலாக கொண்டு செல்லவேண்டும்! ---காஸ்யபன்!

  பதிலளிநீக்கு
 7. வழ்த்துக்கள் மாதவராஜ் அவர்களே! ஜொதிஷ்ணா வுக்கு ஆசிகள்! தந்தையிடம் haoney bee pencilukkaaka நச்சரித்த அந்தச் சிறுமியிடம் தாய் அதட்டி எழுந்து வா என்கிறாள்! பயந்து விரலை வாயில்வைத்துக் கொண்டு தந்தையைப் பார்க்கும் அந்தச் சிறுமியின் முகம் நம் இதயத்தைப் பிசைகிறது! surprise ஆக தந்தை பென்சிலைக் கொடுக்கும் போது சிறுமி பொங்கி பூரிக்கவில்லை ! மாறாக அமைதியாக வாங்கிச் செல்கிறாள்! "என்னாச்சு இவளுக்கு! ஒண்ணுமே சொல்லமப் போரா! "என்று தாய் ஆச்சரியப்படுகிறாள்! சிறுமி கரீனாவின் --அந்த சின்ன மனுஷியின் --soul torture இதைவிட மென்மையாகவும் மேன்மையாகவும் சித்தரிக்கமுடியாது! ஜொதிஷ்னாவுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்! தோழா!
  subtitle போட்டு பரவலாக கொண்டு செல்லவேண்டும்! ---காஸ்யபன்!

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள..

  வணக்கமுடன் உறரணி.

  இப்போதுதான் உங்கள் பதிவிற்கு வந்து உங்கள் பெண் எடுத்த படத்தைப் பார்த்தேன். என்னங்க தொழில்நுட்பம் வேண்டியிருக்கு?.... இதுல உணர்வுதான் முக்கியம். ஆழமான செய்திதான் முக்கியம். அற்புதமாக இருக்கிறது. எதார்த்தம் கொஞ்சம் படம் இது. உங்கள் பெண்ணிடம் நுட்பங்கள் இருக்கின்றன. அவை வாழ்வின் அர்த்தமான பகுதிகளை ஒளியாக்கும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. உணர்வு பூர்வமான கதை...(நிகழ்வு) நிச்சயம் பாரட்டப்பட வேண்டும், தொழில்நுட்ப தவறுகளை கலைந்தாள் நிச்சயம் பலரை சென்றடையும்...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!