அதென்ன தெரியவில்லை. அவை பாட்டுக்கு மேய்ந்து கொண்டு இருக்கும் மாடுகளின் மீது எப்படியும் காகம், கொக்கு, கருங்குருவி என ஒன்றைப் பார்க்க முடிகிறது.
சிறகுகளைச் சுத்தம் செய்துகொண்டோ, தூரத்து வெளியை உற்றுப் பார்த்துக்கொண்டோ அவை வீற்றிருக்கின்றன. சிலசமயம் தலை உயர்த்திக் கூவிக்கொள்கின்றன. போதும் என்பதாய் புறப்பட்டு வானத்தில் புள்ளியாகிப் போகின்றன.
அந்தக் கொஞ்ச நேரத்துக்கு தலைகுனிந்திருக்கும் பெரிய மாடு, முற்றிலும் ஒரு சின்னப் பறவைக்குரியதாகி விடுகிறது.
இயல்பாய் ஒரு கவிதை உங்களுக்கு நன்றி
பதிலளிநீக்குஅன்பு மாதவராஜ்,
பதிலளிநீக்குரொம்ப நாளைக்கு உங்களின் இரண்டு பதிவுகள்... முதல் பதிவு... ஈரம்... இன்னும் உலராமல் இருக்குது...
முதுகு... இதில் கடைசி வரி... சின்ன பறவைக்குரியதாகி விடும்...
எனக்கு...மாடு பறவையானது போலத் தோன்றியது அந்தக் கனத்தில்...
சின்னப்பறவை அந்த மாட்டையும் தூக்கிக் கொண்டு பறந்து விட்டதாய் ஒரு காட்சி விரிந்தது...
மாடு பறவையாகிறது... சிறிய பறவை மாட்டுடன் இருந்த காட்சியைத் தூக்கிக் கொண்டு பறந்தது... அந்த மாட்டையே தூக்கிக் கொண்டு பறந்தது போல இருந்தது...
காட்சியும், காட்சி பிழையும் வேறு வேறா என்ன?
அன்புடன்
ராகவன்
தோழர் மாதவ் அவர்களின் பேட்டியை புத்தகம் பேசுதுவில் படித்தேன். நிறைவான பேட்டி.
பதிலளிநீக்குநிழலில்லாமல் நிஜத்தை மட்டுமே பேசும் பேட்டியாக தெரிகிறது.
இன்னும் பல நினைவுகள் தொடர வாழ்த்துகள்.