ஒரு தென்னம் பூவுக்கு

frog

 

பகலெல்லாம் எங்கிருக்குமோ தெரியவில்லை. இரவானதும் சிறியதும், பெரிதுமாய் தோட்டமெல்லாம்  தவளைகள் வந்து விடுகின்றன. விரிந்து சுருங்கும் வயிறுகளோடு   தென்னை மரத்தடியில்  உட்கார்ந்து கண்களை உருட்டியபடி  ‘கொரக் கொரக்கென்று’ அவைகளில் சில  பேசிக்கொண்டு இருந்தன.

 

வானம் கிழிந்து மின்னல் வெட்டி பெருஞ்சத்தத்தோடு  இடி  ஒன்று விழுந்தது. தவளைகள்   கலங்கவுமில்லை. கொஞ்சங்கூட அசையவுமில்லை.

 

வெடித்த பாளையிலிருந்து,  உதிர்ந்த தென்னம்பூ தவளையொன்றின் மீது விழுந்தது.   ‘ஐயோ செத்தேன்’ என அரண்டு  குதித்து திசையற்று பாய்ந்தது அது. அவ்வளவுதான் என்னமோ  எதுவோவென்று மற்ற தவளைகளும் அங்கங்கு தாவிப்  பதுங்கின.

 

தென்னை சிரித்தது.

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அண்ணா! எனக்கென்னமோ இந்த தவளைக் கூட்டத்தில்....காவி நிறம் தெரிகிறதே!

    ஒருவேளை என் பார்வையில் கோளாறு...கீளாறு இருக்கோ?

    பதிலளிநீக்கு
  2. இடி:- விளிம்பு நிலை மாந்தர்களின் தினசரி அவலங்கள், வறுமை, இல்லாமை...
    தென்னம்பூ உதிர்வது:- ஒரெஒரு தட்டு செல்லமாய் முதுகில் தட்டி திட்டத்தை கலைப்பது.
    தவளைகள்:- குறிக்கோள் இல்லாமல் தமக்குத் தாமே புரியாமல் சொந்த உலகத்திற்கில் உறைந்து கண்மூடி கலகம் e-தேசபக்தர்கள் / கார்ப்பொரேட் சாமியார்களின் தீவிர ஆங்கில பக்தர்கள்.

    என்னுடைய கணிப்பு பொருந்துதான்னு தெரியல.

    பதிலளிநீக்கு
  3. இடி:- விளிம்பு நிலை மாந்தர்களின் தினசரி அவலங்கள், வறுமை, இல்லாமை...

    தென்னம்பூ உதிர்வது:- ஒரெஒரு தட்டு செல்லமாய் முதுகில் தட்டி திட்டத்தை கலைப்பது.

    தவளைகள்:- குறிக்கோள் இல்லாமல் தமக்குத் தாமே புரியாமல் சொந்த உலகத்திற்கில் உறைந்து கண்மூடி கலகம் செய்யும் e-தேசபக்தர்கள் மற்றும் கார்ப்பொரேட் சாமியார்களின் தீவிர ஆங்கில பக்தர்கள். blog, twitter, email போன்ற மறை உலகத்தில் வாழ்பவர்கள்.

    என்னுடைய கணிப்பு பொருந்துதான்னு தெரியல.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!