எலிகள் பெருகி விட்டன. பயிர்களை நாசம் செய்தன. கண்ணில் பட்ட எலியொன்றை விரட்டினார்கள். அது ஒடி ஓளிந்த பொந்தொன்றை வெட்டித் தேடினார்கள். மண்ணுக்குள் ஒன்றிலிருந்து ஒன்றாய்ப் பிரிந்து எல்லாப் பக்கங்களிலும் பொந்து பொந்துகளாய் போய்க் கொண்டே இருந்தன. தோட்டம் முழுவதும் எலிப்பொந்துகள். அடுத்த தோட்டம், பக்கத்துத் தோட்டம் எல்லாம் எலிப்பொந்துகள்.
ஒரு எலியை ஒருவழியாய் பிடித்தார்கள். வாலைப் பிடித்துத் தூக்கினார்கள். அந்தக் கதையை ஊருக்குள் சாகசமாய் சொல்லிக் கொண்டார்கள்.
அது ஒரு சொன்னதைச் செய்த, அதிக வெளிச்சத்திற்கு ஆசைப்பட்ட, "பலி எலி".
பதிலளிநீக்குஉள்ளே கிடை,கிடையாய் கிடக்கிறது, பிடிப்பவர்களையே கடித்து விழுங்கும் அளவிலான பழம்பெரும் பெருச்சாலிகள். மக்களின் எதிர்ப்பு நீரால் நிலத்தை நிறைத்தால் தான், வெளியேறும் நம் நிலத்தை விட்டு.
இதே காமன் வேல்த்தில் வெற்றி பெற்ற வீரர்களின் வெற்றியின் மேலும் சந்தேகம் வரும் வெளிநாட்டுக்காரருக்கு.
பதிலளிநீக்குஎங்கும் ஊழல் எதிலும் ஊழல் . இவர் மாட்டிகொண்டது ஜனநாயகத்தின் வெற்றியல்ல. நிச்சயமாக இல்லை
எலிகள் அதிகமாகாமல் இருக்க பாம்புகள் உயிர்வாழ வேண்டும். நமது நாட்டில் உற்பத்தியாகிற உணவுப்பொருட்கள் கூட ஏழைக்கு நிச்சயமாக இல்லை;எலிகளுக்கு மட்டும்தான். இந்தப்பெருச்சாளிகளுக்கோ
பதிலளிநீக்குஎல்லையே இல்லை...
அவைகளின் எண்ணிக்கையும் தெரியவில்லை...
முதலில் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க பாம்புகள் கொல்லப்படாமல் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குநாட்டின் உணவுக்கிடங்குகளில் கிடக்கும் உணவுப்பொருட்கள் கூட இங்கே ஏழைகளுக்கல்ல எலிகளுக்கு மட்டுமே என்று உறுதிபட நமது பிரதமரால் சொல்ல முடிகிறது.கூடவே இருக்கும் மந்திரிமார்களை மட்டும் தட்டிக்கேட்கத் திராணி இல்லை அவருக்கு. டுனிஷியா எகிப்து போல நம் மக்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வரும் நாள் எந்த நாளோ?
எல்லா எலிகளும் ஒன்று சேர்ந்து உங்கள் மேல் வழக்குப் போடும் பாருங்கள் மாதவராஜ். ”உணவுக்காகத் திருடும் எங்களைப் போய் கல்மாடியோடு ஏன் தோழா ஒப்பிட்டீர்கள்” என்று நியாயம் கேட்கும்.
பதிலளிநீக்குஅற்புதம் . இதுமாதிரி குட்டி குட்டியாய் உள்ள பதிவுகளை தொகுத்து ஒரு புத்தகமாகப் போட வேண்டும். அலகாபாத் தீர்ப்பு வந்த அன்றைய உங்கள் பதிவினை நோட்டீசா போட்டே விநியோகிக்கலாம்
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லுகின்ற இந்தியாவில் உள்ள அணைத்து அரசியல் கட்சிகளும் ஏன்
பதிலளிநீக்குஊழலை ஒழிக்க கூட்டணி அமைத்து போராட முன்வரவில்லை ???
ஆட்சியை பிடிக்க வேண்டும் , எம் பி ஆகவேண்டும், கூட்டணி மந்திரி சபைல மந்திரி அகனும் என்று
கொள்கைகளை விட்டு கூட்டணி சேர்ந்து மந்திரி ஆகும் கட்சிகள் ஏன் கூட்டணி சேர்ந்து
ஊழலுக்கு எதிராக போராட முன்வரவில்லை ???
அப்போ பூனைக்கு யார்தான் மணி கட்டுவார் !!!???