சுற்றி நின்றிருந்தது கூட்டம். ஒருவனைப் போட்டு அடித்துக்கொண்டு இருந்தார்கள். அருகில் சென்று விசாரித்த போது, “பிக்பாக்கெட் மாட்டிக்கிட்டான்” என்றான் ஒருவன்.
சட்டைக் கிழிந்திருக்க அந்த மனிதன் தரையில் கிடந்தான். அவனது முதுகில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டே இருந்தான் ஒருவன். காலால் எட்டி மிதித்தான் ஒருவன். கிடைத்த இடைவெளியில் போய் நங்கு நங்கென்று குத்திவிட்டுப் போய்விட்டான் ஒருவன். அடிப்பதற்கு ஆசைப்பட்டும், கூச்சப்பட்டும் நின்றார்கள் ஒருசிலர். பாவம் என்று பரிதாபப்பட்டார்கள் வேறுசிலர்.
“போலீஸ்ல புடிச்சுக் குடுங்க “ என்றான் ஒருவன்.
“இதுக்கு மேலயும் அடிக்காதீங்க, செத்துக் கித்துப் போயிருவான் ” என்றான் ஒருவன்.
“வாயத் திறந்து பேசுறானாப் பாருங்க, கல்லுளி மங்கன்?” என்றான் ஒருவன்.
கை கால்களை மடக்கி, தாயின் வயிற்றுக்குள் சுருண்டிருப்பதைப் போல தரையில் கிடந்தான் அந்த மனிதன். தொண்டைக்குழி, அடிவயிறு, நெஞ்சுக்கூடு எல்லாம் துடித்துக்கொண்டு இருந்தன. லேசாய் அசைந்து வாயைத் திறந்து, கட்டைவிரலைத் தூக்கி தண்ணீர் என்று சைகையில் கேட்டான். அப்போதும் அவன் கண்கள் மூடியே இருந்தன.
kodumai.
பதிலளிநீக்குஉழைக்க மறந்தவனே திருடனாகிறான்! அரசியல்வாதிகள் தவிர்த்து - அவர்கள் திருடுவதற்காக அதிகம் உழைக்கிறார்கள்!
பதிலளிநீக்குதிருடர்கள் நன்கு நடிப்பார்கள்! அரசியல்வாதிகள் உட்பட!
அவன் திருடனாயிருக்க மாட்டான் மாதவராஜ். திருடனாயிருந்தால் அவனுக்காக உயர் நிலை செயற்குழு கூடியிருக்குமே
பதிலளிநீக்குஇது சிறு கதையா? குட்டி கதையா?
பதிலளிநீக்கு// திருடனாயிருந்தால் அவனுக்காக உயர் நிலை செயற்குழு கூடியிருக்குமே//
பதிலளிநீக்குகுறி தவறாம அடிக்கிறீங்க;-)
//உழைக்க மறந்தவனே திருடனாகிறான்//
பதிலளிநீக்குஉழைக்கும் வாய்ப்பு மறுக்கப் பட்டவன்??
முகவை மைந்தன்!
பதிலளிநீக்கு//உழைக்க மறந்தவனே திருடனாகிறான்//
உழைக்கும் வாய்ப்பு மறுக்கப் பட்டவன்??///
உழைக்கும் வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களை, மேற்குத் தமிழ்நாட்டின் அனைத்து தொழிற் நகரங்களுக்கும், பஸ் ஏற்றி அனுப்பி வையுங்கள்! போதும் போதும் எனும் அளவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும்! சிறிது காலத்திற்குப் பின் அதிக நேரம் வேலை செய்யச் சொல்லுகிறார்கள்:முதுகு தண்டு பாதிக்கப்படுகிறது என்று தர்ணா எல்லாம் செய்யக் கூடாது! சரியா?
பிக்பாக்கட்டுகளை ஆதரிக்கும் எண்ணமில்லை.ஆனால் ரத்தமும் சதையும் நம்மையும் போலவே
பதிலளிநீக்குஅமையப்பெற்ற ஒரு சக மனிதன்.அவன் வலி சிறிதாவது நம்மை பாதிக்கவேண்டாமா?