அயோக்கியத் தீர்ப்பு

verdictகுதிரை ஒன்று குட்டிப் போட்டது. குதிரையைக் கட்டியிருந்த செக்குக்குச் சொந்தக்காரன் அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு, “இது தனது குட்டி” என சொந்தம் கொண்டாடினான்.

குதிரைக்காரன் வழக்கு தொடுத்தான்.

மத்தியஸ்தர் செக்குக்காரனை அழைத்து விசாரித்தார்.

“எனது செக்கு போட்ட குட்டி இது” என்றான் அவன்.

“செக்கு எப்படி குட்டி போடும்” என்றார் மத்தியஸ்தர்.

“போடும். என்னிடம் சாட்சி இருக்கு!” என்றான் செக்குக்காரன்.

“சிக்கலான விவகாரம். சாட்சி இல்லாம தீர்ப்பு சொல்ல முடியாது. சீக்கிரம் போய் அவுங்க அவுங்க சாட்சியை கூட்டிட்டு வாங்க” என்றார் மத்தியஸ்தர்.

மாலையில் பஞ்சாயத்து கூடியது. செக்குக்காரன் அவனுடைய செல்வாக்கினால் பல சாட்சிகளோடு  வந்தான். அவர்கள் அடித்துச் சொன்னார்கள். “செக்குதான் குட்டி போட்டது. நான் ரெண்டு கண்ணால பார்த்தேன்” என்றார்கள். குதிரைக்காரனுக்கு ஆதரவாக ஒன்றிரண்டே பேரே நியாயம் பேசினார்கள்.

அதிகம் பேர் சொன்னதை வைத்து மத்தியஸ்தம் செய்தவரும் செக்குக்காரனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு சொன்னார்.

மரத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த குருவி ஒன்று “மத்தியஸ்தரே இப்படியா தீர்ப்பு சொல்வது” எனக் கேட்டதாம்.

“பின் எப்படிச் சொல்வதாம்” என்று கோபமாய்க் கேட்டார் மத்தியஸ்தர்.

“குதிரைக்குட்டிக்கு தாய்ப்பால் செக்கு வந்து கொடுக்குமா? குதிரை வந்து கொடுக்குமா? யோசியுங்கள் ஐயா, யோசியுங்கள். உண்மை என ஒன்று எப்போதும் இருக்கிறது” என பறந்து சென்றதாம் குருவி.

கருத்துகள்

23 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது. சரியான சமயத்தில் இந்த பதிவு போட்டு இருக்கீங்க.. சார்.

  பதிலளிநீக்கு
 2. செக்கு என்பது அந்த குதிரைக் குட்டியின் அப்பாகுதிரை. அதனால் அந்த குட்டி இருவருக்கும் சொந்தம் என நீதிபதி சொல்வதற்குள் சில பெரிச்சாளிகள் வழக்கும் புரியாமல் தீர்ப்பும் புரியாமல் குழி தோண்டிக் கொண்டிருக்கிறது. யோசியுங்கள். யோசியுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. அயோத்தி தீர்ப்புக்கு இந்தக் கதையை ஒப்பிட்டு பின்னூட்டங்கள் வருகின்றன. அவைகளை வெளியிட இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  குருவிகளுக்குத் தெரிந்த நியாயங்கள் சில நேரங்களில் சில மனிதர்களுக்குத் தெரியவில்லையே என்பதைச் சொல்லும் ஒரு நாட்டுப்புறக்கதை இது.

  இந்தக்கதை குறித்து பேசும் உரையாடல்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும்.

  பதிலளிநீக்கு
 4. "புலி கடிக்காது" என்றான் ஒருவன்."இல்லை புலி கடிக்கும்" என்றான் மறோருவன்.இருவருக்கும் தகறாரு ஏற்பட்டது மத்தியஸ்தரிடம் போனார்கள்."எந்தப் புலியும் கடிக்கத்தனே செய்யும் "என்று கூறினார்.மத்தியஸ்தர்".எங்க ஊர் புலி கடிக்காது" என்றான் அவன். " வா உங்க ஊருக்கு .கடிக்காதபுலியைப் பார்க்கலாம்" என்றார் மத்தியஸ்தர். அவரை அழை த்துக்கொண்டு அவ்னுடைய ஊரிலுள்ள காட்டிற்கு போனான்".அதோ அந்த மேட்டிற்குப் பின்னால் இருக்கிறது. போய் பர்ங்கள் "என்றான் அவன்.மத்திய்ஸ்தார் போனார் புலியைப் பார்த்தார். திரும்பி வரவெயில்லை--இந்த முட்டாள் நீதிபதியின் கதையை என் பாட்டனார் அடிக்கடி சொல்வார்.-காஸ்யபன்.,

  பதிலளிநீக்கு
 5. அன்பின் மாதவராஜ்

  அயோத்தி தீர்ப்பு வந்த இந்த நேரத்தில் இது போன்ற ஒரு இடுகை படிப்பவர்களுக்கு நிச்சயம் இந்த இடுகையை அந்தத் தீர்ப்புடன் ஒப்பீடு செய்யத் தான் தோன்றும்.

  உங்கள் வலைப்பூவில் எந்த இடுகைகளை எப்போது போட வேண்டும் என்ற உரிமை நிச்சயமாக உங்களுக்கு உண்டு. அதில் இரண்டாம் கருத்து இல்லை.

  நானாக இருக்கும் பட்சத்தில் இதே இடுகையை இன்னும் சில காலம் தாழ்த்திப் போட்டிருப்பேன்.

  மறுபடியும் நானாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்வது போன்ற பின்னூட்டங்கள் தொடர்ந்து வரும் பட்சத்தில் அந்த இடுகையை எடுக்கவும் தயங்க மாட்டேன்.

  இந்தக் கதை குறித்து இந்தத் தருணத்தில் இதைத்தவிர வேறேதும் பேச எனக்குத் தோன்றவில்லை.

  நான் கூறியதில் ஏதேனும் தவறாக உள்ள பட்சத்தில் என்னை மன்னியுங்கள்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. கோபி ராமமூர்த்தி!

  நான் என்ன சொல்கிறேன் என்பதைத் தாங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ!
  :-)))))

  பதிலளிநீக்கு
 7. அன்பின் மாதவராஜ் ஐயா...

  உங்கள் தைரியம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...

  பதிலளிநீக்கு
 8. mohamed ashik!

  இந்த நாட்டுப்(புற)க்கதைவிட உங்கள் பின்னூட்டம் கிண்டலாக இருக்கிறதே! :-))))

  பதிலளிநீக்கு
 9. அண்ணா வணக்கம்...அருமையான பதிவு.சரியான நெத்தியடி.
  உங்க படைப்புகள் அத்தனையும் யதார்தம் மிகுந்திருப்பதால் என்னை உங்கள் மீது தீராத காதல் கொள்ள வைத்தது.சிறுபிள்ளை போல எல்லாப் பக்கங்களையும்..புரட்டிப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. அன்பின் மாதவராஜ்

  நாட்டுப்புறக்கதை நல்லாவே இருக்கு

  நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. விந்தைமனிதன் அவர்களின் பின்னூட்டம் தெரியாமல் டெலிட் செய்யப்பட்டுவிட்டது. அதனை அப்படியே வெளியிடுகிறேன்:

  விந்தைமனிதன்
  has left a new comment on your post "அயோக்கியத் தீர்ப்பு":

  கதை என்பதே முகத்திலறையும் உண்மைகள் ஊடுபாவி நிற்பதுதானே?!

  பதிலளிநீக்கு
 12. அயோத்தித் தீர்ப்பு குறித்து உங்கள் நேரடியான கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக வந்தேன். கதை சொல்லி இருக்கிறீர்கள். :(

  பதிலளிநீக்கு
 13. காஷ்யபன் அவர்களின் கதையும் அருமையாக இருக்கிறதே. :))))

  பதிலளிநீக்கு
 14. Super Sir, நிச்சயமாக தீர்ப்பு அயோக்கிய தீர்ப்புதான் , நானும் இந்த இடுகையில் சொல்லப்பட்ட தீர்ப்பைதான் சொன்னேன்.

  பதிலளிநீக்கு
 15. அன்புடையீர்.. தீர்ப்பு பற்றி மாதவராஜ் மற்றும் கவின்மலர் என்ன சொல்கிறார்கள் என பார்த்தேன்.தங்களின் கதை பொருத்தமான ஒன்று..சரியான நேரத்தில் வெடித்த குண்டு..

  ஆ/ஈசுவரன்

  பதிலளிநீக்கு
 16. உங்களுடைய கருத்தை நன் வரவேற்கிறேன்

  என்னுடைய இடுக்கை பார்க்கவும்:
  http//:www.saffronterrors.blogspot.com

  பதிலளிநீக்கு
 17. intha kathail theerpu enpathu endraikumana theerpu endru ondru illave illai enpathai unarthukirathu

  பதிலளிநீக்கு
 18. endraikumana theerpu endru ondru illave illai enpathai intha kathai unarthukirathu

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!