நாகரீகமானவன்

வலப்பக்கம் அமர்ந்திருக்கும் அவளின் துப்பட்டா விலகலுக்குள் அலை பாய்கிறான். அலுவல்களில் அவள் கவனமாயிருக்கும் சமயமாய்ப் பார்த்து, இன்னும் சில கணங்கள் நிலைக்கிறான். மேலும் கீழுமான பிரதேசங்களோடு ஒப்பிட்டுத் திமிறலை அறிகிறான். இப்படித்தான் இருக்கும் எனத் தெரிந்தாலும் அவள் அறியாவண்ணம் இன்னொருமுறை சரியாகப் பார்க்கத் துடிக்கிறான். எழுந்து நடக்கும்போது அவள் பின்னால் மேய்கிறான். பார்த்துப் பார்த்தும், பழகாத பிம்பங்களில் புதையுறுகிறான். வளைவுகளிலும், அசைவுகளிலும் பெருமூச்சு விட்டுக் கிடக்கிறான்.

கோப்பு ஒன்றை நீட்டி, சந்தேகம் கேட்டு அருகில் வந்து பேசிக்கொண்டு இருந்த அவள் மீது தெரியாமல் விரல்கள் படவும் சுண்டி கை இழுத்துக்கொள்கிறான். “ஸாரிங்க, ஸாரிங்க” என்று பதறுகிறான்.

Comments

10 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. எத்தனை இசங்கள், நவீனத்துவங்கள் படித்தாலும், பார்த்தாலும் இன்னமும் பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கும் எண்ணம் நம் ஹார்மோனில் இருந்து குறைவதே இல்லை.

    இதனால் தானே இன்னமும் கோடம்பாக்க படைப்பாளிகள் , கதையை விட சதையை நம்பி படம் எடுக்க வேண்டி உள்ளது.

    ReplyDelete
  2. பிரமாதம் சார்
    சொல்ல வார்த்தையே இல்ல...
    அற்புதம்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு!!!

    ReplyDelete
  4. கூப்பிட்டு அறைவிட்ட மாதிரியான உணர்வு..

    ReplyDelete
  5. நிதர்சன உண்மை அழகான பதிவாய்....
    அருமை அண்ணா.

    ReplyDelete
  6. Com,

    we used to avoid wearing saree in public places for the reasons you specified.. but, even when we wear chudithar the problem continues..
    men are men..

    here i would record another point.. globalised culture has putin the minds of women, to dress for exposing their beauty.. some women have preferences to expose their beauty with tight fitting dress, than for dignified appearance.. such women enjoy comments from their colleagues about their dress...

    ReplyDelete
  7. dear madav

    what a reality NIDARSANAM

    excellent

    balu vellore

    ReplyDelete
  8. உங்கள் அனைத்துப் பக்க்கங்களும் நன்றாக இருக்கிறது நண்பரே ..அதிலும் குறிப்பாக இந்த நாகரீகமானவன் பகுதி எதோ ஒன்றை உணர்த்துகிறது .
    உங்கள் முயற்சிகள் தொடரட்டும் .
    by-naga-

    ReplyDelete
  9. மேலும் கீழுமான பிரதேசங்களோடு ஒப்பிட்டுத் திமிறலை அறிகிறான். இப்படித்தான் இருக்கும் எனத் தெரிந்தாலும் அவள் அறியாவண்ணம் இன்னொருமுறை சரியாகப் பார்க்கத் துடிக்கிறான். எழுந்து நடக்கும்போது அவள் பின்னால் மேய்கிறான். பார்த்துப் பார்த்தும், பழகாத பிம்பங்களில் புதையுறுகிறான். வளைவுகளிலும், அசைவுகளிலும் பெருமூச்சு விட்டுக் கிடக்கிறான். ]]


    எழுதியவரின் ( மன )கண்ணோடமும் தெரிவது போல உள்ளது..

    இது இயற்கையோ?.

    ReplyDelete

You can comment here