இயக்குனர் மகேந்திரன் பற்றிய ஆவணப்படம்

mahendran 02 “ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்” நினைவுகளாக ரீங்காரமிட, விடிகாலை சாத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி நடந்தேன். சென்ற சனிக்கிழமை இரவு புறப்பட்டு, மூன்று நாட்கள் சென்னையில் இருந்து இன்றுதான் திரும்பினேன். இயக்குனர் மகேந்திரன் அவர்களோடு பேசியது, பழகியது எல்லாம் நல்ல அனுபவங்களாக வருடிக்கொண்டு இருந்தன.

இயக்குனர்கள் பாலுமகேந்திரா, ராதாமோகன் போன்றோர் “ரொம்ப அவசியமான பதிவைச் செய்கிறீர்கள்.” என மகேந்திரன் குறித்தும், தமிழ்ச்சினிமா குறித்தும் பேசியவை காற்றில் கரைந்துவிடக் கூடியவை அல்ல. இயக்குனர் தாமிராவும், ‘நிழல்’ பத்திரிகையின் ஆசிரியர் திருநாவுக்கரசும் தந்த ஆலோசனைகள் மிகுந்த பயனுள்ளவையாக இருந்தன. பத்திரிக்கையாளர் சௌபா தனது ஃபேஸ்புக்கில் ‘என்னால் ஆன தொழில்நுட்ப உதவிகளைச் செய்கிறேன்’ என அவரே முன்வந்து சொல்லியிருக்கிறார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் “அவசரப்படாமல், நிதானமாக படத்தை எடுக்க வேண்டும்” என அக்கறை கொண்டு இருக்கிறார். சென்ற பதிவின் பின்னூட்டங்களில் அனைவரும் இயக்குனர் மகேந்திரன் குறித்த எங்கள் ஆவணப்பட முயற்சியை வாழ்த்தி பாராட்டி இருக்கிறார்கள். அதில்ஒரு நண்பர், தன்னால் ஆன நிதி உதவி செய்யத் தயாராய் இருப்பதாகக் கூட அறிவித்திருக்கிறார். இந்த ஆதரவுக் கரங்கள் மிகுந்த உற்சாகமளிக்கின்றன. இந்தக் காரியம் எவ்வளவு முக்கியமானது என்பதை தெளிவு படுத்துகின்றன. எல்லாவற்றையும்விட மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக நான் பார்ப்பது, ‘இயக்குனர் மகேந்திரன் மறக்க முடியாதவர்’என்பது! அவர் எடுத்ததே பத்து படங்கள்தாம். அதில் பாதிப் படங்கள் பிரமாதமானவை என்று சொல்ல முடியாது. இந்தப் பதினைந்து வருடங்களுக்குள் அவர் எடுத்திருப்பது ‘சாசனம்’ என்னும் ஒரு படம்தான். இருப்பினும் தமிழ்சினிமாவின் முக்கிய மனிதராய் இன்றும் நினைக்கப்படுகிறார். இந்த வெளிக்குள் நின்று ஆராய்வதே இந்த ஆவணப்படத்தின் நோக்கமாய் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.


mahendran 01 தொடர்ந்து இலக்கியங்களைப் படித்துக் கொண்டும், தமிழ்ச்சினிமாவிலிருந்து உலகச்சினிமா வரை பார்த்துக்கொண்டும் இயக்குனர் மகேந்திரன் அமைதியாக இருக்கிறார் என்பது தெரிந்தது. ‘இன்றைய இந்திய சினிமாவில் மராத்தி, அசாமி, ஒரிய மொழிப் படங்களே அற்புதமாய் இருக்கின்றன என்றார். ‘மொழி’படத்தை அப்படித்தான் பாராட்டினார். ‘வெண்ணிலாக் கபடிக்குழு’ படம் கவனிக்கப்பட படம் என்றார். கலையும், இலக்கியமும் மோசமாய் இருக்கும் சமூகம் உருப்படாது என்று கோபப்பட்டார். பேசும்போது முக பாவங்களும், கண்களில் வந்து போன ஒளிக்கீற்றுக்களும், அவருக்குள் மண்டிக்கிடப்பதையெல்லாம் வெளிப்படுத்தியது. நிறைய பேசினார்.ஏறத்தாழ ஆறரை மணி நேரத்துக்கும் மேலே இயக்குனர் மகேந்திரனோடு, அவர் வீட்டில் வைத்து நாங்கள் உரையாடியதை இரண்டு காமிராக்களில் பதிவு செய்து கொண்டோம். நான், காமராஜ், பிரியா கார்த்தி, சுரேஷ் பாபு, முனிஷ், பாலு, ரஞ்சித் என நாங்கள் அனைவரும் மூன்று நாட்களாய் பேசிப் பேசிக் கிடந்தோம்.

நேற்று மாலை ஊருக்குக் கிளம்பும் போது போன்செய்தேன். மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், “ஆமாம், மாதவராஜ் நீங்க பாட்டுக்கு நான் ஒரே இட்த்தில் உட்கார்ந்து பேசியதையெல்லாம் எடுத்து வச்சிருக்கீங்க. இது நல்லாவா இருக்கும்? என்ன செய்யலாம்னு இருக்கீங்க” என்றார். “இன்னும் நாம ஆரம்பிக்கல்ல சார். நாம் ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமாகி இருக்கோம்னு நெனைக்கேன். உங்களோட நாங்களும், எங்களோட நீங்களும் டிராவல் செய்யணும். முட்டம், கோபிச்செட்டிப் பாளையம், முள்ளும் மலரும்ல வரும் அந்த விஞ்ச் ஒடிய லொகேஷன் என எல்லா இடங்களுக்கும் போகணும். நிறைய யோசிச்சிட்டு இருக்கேன்” என்றேன். “ம்... பிளான் செய்ங்க. அதுதான் நல்லது. அப்புறம் நேத்து நீங்க வச்ச காமிரா கோணம் சரியில்ல. இனி நா அதைப் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்றார். “நாங்க கொடுத்து வச்சவங்க” என்றேன். இருவரும் சிரித்தோம். “சரி, மாதவராஜ். வீட்டுக்குப் போன பிறகு போன் செய்யுங்க” என்றார்.


radha mohan “ரொம்ப நல்ல காரியம் செய்றீங்க” என்ற இயக்குனர் ராதா மோகன், “இந்தப் படத்தை எடுத்து என்ன செய்யப் போறீங்க” என்றார். அமைதியாய் அவரைப் பார்த்தேன். “இல்ல.... எப்படி மார்க்கெட்டிங் பண்ணுவீங்க?” என்றார். “அதைப் பத்தியெல்லாம் யோசிக்கல. அவரப் பத்தி எடுக்கணும்கிறது எங்க கனவுகளில் ஒன்னு. எடுக்கிறோம். பிறகு பார்ப்போம்.” என்றோம். ஆச்சரியமாய்ப் பார்த்தார்.  இயக்குனர் மகேந்திரனைப் பற்றியும், அவரது தாக்கங்கள் தன்னைப் போன்ற இயக்குனர்களிடம் எப்படி ஊடுருவி இருக்கிறது என விவரித்ததும் அழகானவை. அதனைப் படத்தில் பார்க்கலாம்.

”நான், மகேந்திரன், பாரதிராஜா, பாலச்சந்தர் என அந்த டைம்ல சில நல்ல படங்களையெடுத்தோம். நல்ல டிரெண்டு செட் ஆனது. ஏ.வி.எம் பேனர்ல வந்த சகல கலா வல்லவனும், முரட்டுக்காளையும் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. நான் இதனை ஏ.வி.எம் சரவணனிடமே சொன்னேன்.  அவரோ புன்னகைத்து அமைதியானார்” என காலங்களை நினைவுகூர்ந்து சினிமா குறித்து நிறைய பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பாலுமகேந்திரா. அவரது சினிமா பட்டறையின் ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்று காண்பித்தார். தற்போது பனிரெண்டு மாணவர்கள் அவரிடம் சினிமா படிப்பதாகச் சொன்னார். அவரது வீடு படத்தில் வரும் கட்டிடம்தான் இந்த சினிமாப் பட்டறை என்றதும சுவரைத் தொட்டுப் பார்த்தன விரல்கள்.

மகேந்திரனைப் பற்றிய ஆவணப்படத்தைத் தானே எடுப்பது போல அக்கறையோடும், ஆர்வத்தோடும் பேசினார் ‘ரெட்டைச்சுழி’ இயக்குனர் தாமிரா. நிறைய ஆலோசனைகள் தந்தார். யாரையெல்லாம் பார்க்க வேண்டும், எங்கெல்லாம் செல்ல வேண்டும் என சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்கான உதவிகள் அனைத்தும் செய்வதாகச் சொல்லி இருக்கிறார். தமிழ்ச்சினிமா குறித்து அவருக்கு இருக்கும் ஆதங்கம், விமர்சனம், கோபம் எல்லாவற்றையும் இன்னொரு சமயம் பேசலாம்.


maathu 01 ரெயிலில் திரும்பும்போது மலைப்பாகவும், பெருங்கனவாகவும் இயக்குனர் மகேந்திரனைப் பற்றிய ஆவணப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. சின்னச் சின்னப் புள்ளிகளாய் வைத்து, தமிழின் உதிராதப் பூவொன்றினை கோலமாக்கத் துவங்கி இருக்கிறோம். அதன் நீள அகலங்கள் கண்டு வியந்தாலும் துணிந்திருக்கிறோம். சாத்தூரில் உள்ள ஒரு சிறு ஆவணப்படக் குழுவிற்கு இது அவ்வளவு எளிதல்ல என்றாலும் எங்களை நோக்கி ஆதரவுக் கரங்கள் நீட்டும் பல நல்ல உள்ளங்கள் நம்பிக்கையளிக்கின்றன. இன்னும் எங்களிடம் மெட்டி, நண்டு, பூட்டாத பூக்கள், ஊர்ப்பஞ்சாயத்து, சாசனம் போன்ற அவரது படங்கள் இல்லை. இயக்குனர் மகேந்திரனிடமும் இல்லை. இவைகளைப் பெறுவதற்கு வழி தெரிந்தால், தெரிவிக்குமாறு  உங்களைப் போன்ற நண்பர்களிடமே வேண்டுகிறோம். இயக்குனர் மகேந்திரன் குறித்த பழைய பத்திரிகைச் செய்திகள், படங்கள் கிடைத்தால்  அனுப்பி வைக்குமாறும் வேண்டுகிறோம். இதுகுறித்து தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் எனது இ -மெயிலுக்கு ( jothi.mraj@gmail.com ) எழுதுங்கள். தமிழ்ச்சினிமாவுக்கு அதன் அழகை, அர்த்தங்களை, வரலாற்றை, வலியைச் சொல்லும் ஆவணத்தை இயக்குனர் மகேந்திரனை முன்வைத்து நாம் உருவாக்குவோம்.

அவ்வப்போது, இது குறித்து இங்கு பேசுவோம். சாத்தூருக்கு வந்த பிறகு இயக்குனர் மகேந்திரனிடம் இன்னும் பேசவில்லை. போன் செய்தால், “ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்” பாடல் முதலில் கேட்கும்.

கருத்துகள்

22 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. தொடங்கியாச்சா!.. சந்தோசம்.

  அவ்வப்போது இப்படி பகிரவும் மாது. பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. ஊரெல்லாம் போய் சினிமா..மக்கள் சினிமா என்று மைக்குகளோடு மல்லுக்கட்டுகிற எங்களைவிட, உங்களின் பணிதான் காலத்திற்கும் நிற்குமோ என யோசிக்கவைத்துவிட்டீர்கள்.ராதாமோகனின் கேள்விக்கு நீங்கள் பதிலளித்து இருக்கலாமே என்று தோன்றுகிறது.தொடங்கிவிட்டது “மகேந்திரக் கனவு”

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் மாதவராஜ் சார்...

  உங்கள் எண்ணமும் முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. மிக அற்புதமான பணி, வாழ்த்துக்கள்,
  உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் குழுவிற்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. நேரில் வருகிறேன் .இது பற்றி அவசியம் பேசி விவாதிக்க வேண்டும் மாது.

  பதிலளிநீக்கு
 6. மாதவ்ஜி, புதிதாக இடுகை எதுவும் இல்லாத போதே சந்தேகப்பட்டேன் தோழர் காமராஜும் மோனத்தில் இருந்தார்.பொட்டியைத் இருவரும் தூக்கிவிட்டீர்கள் என்று காரைக்குடி,பரமக்குடி, திருப்பரங்குன்றம், மதுரை தமு.எ.க.ச.நண்பர்கள் அவரை கலை இரவுகளுக்கு அழைத்து பாராட்டி விழா எடுத்துள்ளார்கள்.இவர்களைத்தொடர்பு கொள்ளலாம்.லெனின்,ராஜேஷ்,ஆகியொரையும் சந்தியுங்கள்...வாழ்துக்கள்.....ஆவணப்பட வெளியீட்டு விழாவிற்கு புறப்பட இப்போதே தயாராகி விட்டேன்....காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 7. wow! Very interesting!
  படமெடுக்கும் அனுபவங்களை உடனுக்குடன் இயலாவிடினும் அவ்வப்போது இங்கே பகிருங்கள்.

  //அப்புறம் நேத்து நீங்க வச்ச காமிரா கோணம் சரியில்ல. இனி நா அதைப் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” //

  :-)))))

  பதிலளிநீக்கு
 8. எண்ணத்தில் தொடங்கி உடனடியாக களத்தில் இறங்கிய உங்கள் மற்றும் உங்களது குழுவினரை வாழ்த்துகிறோம். எனக்குத் தெரிந்து வேறு தமிழ் இயக்குனரை வைத்து குறும்படம் வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை. இது வந்தால் தமிழ் இயக்குனர் அதுவும் தரமான இயக்குனருக்குச் செய்யும் கலை மரியாதையாகும்.... நிச்சயம் செய்யணும்!!

  வாழ்த்துக்கள் சார். குறும்படத்தை எதிர்நோக்கி!!

  \ஆதவன்

  பதிலளிநீக்கு
 9. Try not to become a man of success, but rather try to become a man of value.

  I don't divide the world into the weak and the strong, or the successes and the failures, those who make it or those who don't. I divide the world into learners and non-learners.

  Best wishes for your your future plan.....

  பதிலளிநீக்கு
 10. மகேந்திரன்..
  அடேயப்பா.. என்னையும் என் நண்பர் குழாமிற்கும் அது ஒரு மந்திரச்சொல்..
  அவர்மீதும் அவர் படைத்த படைப்புகள் மீதும் என்றும் தீராத காதல் கொண்டவர்கள்.. உங்கள் ஆவணப்படம் அதுவும் மகேந்திரன் பற்றியது .. மிகவும் வித்தியாசமாய் வர வேண்டும்.. எப்படி செய்ய வேண்டுமென அவரிடமே கேளுங்கள்..
  அவர் ஐடியாப்படி செயல்பட்டாலே ஒர்க் அவுட ஆகும்..
  அவர் மாமா, காரைக்குடியில் அவர் வாழ்வு, எம்.ஜி. ஆரிடம் பொண்ணியின் செல்வனிற்கு திரைக்கதை அமைத்தது, சோவிடம் அவரின் நட்பு, குறைமாத குழந்தையான அவரை வயிற்றுசுட்டில் வைத்து காப்பாற்றிய டாக்டர் அம்மா-
  இப்படி எல்லாவற்றையும் கவர் செய்து விடுங்கள்..
  அருமையாய் வர என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

  பதிலளிநீக்கு
 11. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குண்ணா, ஆவனப்படத்தை காண மிகுந்த ஆவலோடிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. ஒரு தாய் இரு மகள்களின் உறவை மெட்டியில் மகேந்திரன் காண்பித்ததை விட நுணுக்கமாக வேறு எந்த தமிழ்ப் படத்திலும் நான் பார்க்கவில்லை. உங்கள் ஆவணப் படத்தில் மகேந்திரன் படங்களில் பெண்களின் சித்தரிப்பு என்ற அம்சம் கட்டாயமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

  விஜயசங்கர்

  பதிலளிநீக்கு
 13. தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த இயக்குனர் இவரே! பிடித்த படம் முள்ளும் மலரும். நீங்கள் ராதா மோகன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை, நன்று. உங்கள் பதிவில் ஒரு ஆவணப்படம் உள்ளது என்று மட்டும் சொல்லுங்கள். பிறகு அதனை என்ன விலை சொன்னாலும் வாங்க ரசிகர்கள் உண்டு.

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துகள்..!

  தமிழ் சினிமா நல்ல பாதைக்கு திரும்புவதை இயந்திரன்கள் விரும்பாமல் போனாலும் நல்ல பாதையில் பயணித்தவர்களை கௌரவப்படுத்தவாவது மாதவராஜ் போன்றோர்கள் இருக்கிறார்களே..

  மீண்டும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. //சாத்தூரில் உள்ள ஒரு சிறு ஆவணப்படக் குழுவிற்கு இது அவ்வளவு எளிதல்ல//


  உங்கள் எண்ணமும் முயற்சியும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. Really happy to hear this news.Mahendran is such a nice director ,his first movie i saw was johny it touched my heart so much what a romantic story without any unwanted scenes(see today's movie feeling shame)a philosophy was in the movie he expressed in a poetic way no word to explain(eg life la ellame onna vida onnu better ah terium)from that movie i became fan of mahendran sir after that uthiri pookal(last scene no one will forget) metti outstanding movie especially senthamarai and sarath babu sir character simply superb i like to born in 80s because nowadays movies r coming it only touched our eyes not heart but mahendran sir movies somethingdisturbing our heart no way to express hats off to mahendran sir we are missing mahendran sir.
  mahendran sir movies are mostly about human realtionship but nowdays he is not directing from this onwards we can find the value for human relation ship is decreasing in this computer world..............
  all the best for your project

  பதிலளிநீக்கு
 17. Really happy to hear this news.Mahendran is such a nice director ,his first movie i saw was johny it touched my heart so much what a romantic story without any unwanted scenes(see today's movie feeling shame)a philosophy was in the movie he expressed in a poetic way no word to explain(eg life la ellame onna vida onnu better ah terium)from that movie i became fan of mahendran sir after that uthiri pookal(last scene no one will forget) metti outstanding movie especially senthamarai and sarath babu sir character simply superb i like to born in 80s because nowadays movies r coming it only touched our eyes not heart but mahendran sir movies somethingdisturbing our heart no way to express hats off to mahendran sir we are missing mahendran sir.
  mahendran sir movies are mostly about human realtionship but nowdays he is not directing from this onwards we can find the value for human relation ship is decreasing in this computer world..............
  all the best for your project

  பதிலளிநீக்கு
 18. i like all mahendran movies but some movie i did'nt see but what movie i saw all are different no one tell the human relationship like a nature and decent way .Sarath babu acted in most of mahendran sir movies particularly in meeti i like the acting of sarath babu sir and senthamarai sir impressed me most.....i cried after watching this movie i am from this generation but todays movies r not stand in our heart.mahendran sir is the only one no one beat his direction.

  பதிலளிநீக்கு
 19. மாது இயக்குனர் மகேந்திரனின் படங்கள் மிகவும் அருமையானவை. அதையும் விட அருமையான விஷயங்கள் அவரிடமிருந்தே ஆவணப்படத்தில் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!