வண்ணப் புதிர்

butterfly

இலைகளை உரசியபடி வேண்டா வெறுப்பாய் மரக்கிளைகளின் ஊடே நகர்ந்த வண்ணத்துப் பூச்சி சட்டென்று விலகி தாழப் பறந்தது. சின்னச் சின்னச் செடிகளின் மீதெல்லாம் யோசித்தபடியே நகர்ந்தது.  அருகிலிருந்த பூஞ்செடிகளை நோக்கிச் சென்று அதன் பூக்களிலெல்லாம் தேடியது. பிறகு அந்த இரும்பு கேட்டின் மீது பேசாமல் உட்கார்ந்து சிறகுகளை மூடிக் கொண்டது.

அதற்கு யார் மீது, என்ன கோபம் என்று தெரியவில்லை.

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அருமையான கவிதை.. வாழ்த்துகள்..!

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

  பதிலளிநீக்கு
 2. ................
  ................

  You will not publish my comments,then why shoud I ?

  Thks.

  பதிலளிநீக்கு
 3. வேறென்ன, வூட்டுக்காரம்மா வண்ணத்தியக்கா 'பொழக்கத் தெரியாதவனே'ன்னு
  சொல்லியிருக்கும். :-)
  Jokes apart,
  வண்ணப்புதிர் கொள்ளை அழகு.

  பதிலளிநீக்கு
 4. வண்ணத்துப்பூச்சிகளை எல்லாம் ஒழித்துக் கட்டிய மனிதர்கள் மீது தான்...

  பதிலளிநீக்கு
 5. இயல்பான தனது செயல்பாட்டைக் கூட மனித மனங்களைப் போல் எண்ணிக் கற்பிதங்கள் செய்பவர்களை எண்ணி நொந்து போயிருக்கலாம் அந்த வண்ணத்துப் பூச்சி.

  அல்லது, கவித்துவமான தனது இயல்பு இயக்கத்தைக் கண்டும் காணாமல் போகிறவர்களை நினைத்து விசனப்பட்டிருக்கலாம்.

  மகரந்தங்களை நுகரப் போன இடத்தில், தாவரங்களின் மரபணுக்களில் நஞ்சை ஊடுருவ வைத்துக் கொண்டிருக்கும் - மனித குல விரோதிகளான லாப வெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த சிந்தனயில் மூழ்கி இருக்கக்கூடும் அந்த வண்ணத்துப் பூச்சி.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
 6. வண்ணத்துப் பூச்சிக்கு
  மனநிலை சரியில்லையா?

  புளிச்ச ஏப்பத்தில் இருக்கிறதா?

  மரம், செடிகளில்
  பூச்சி மருந்து அடிக்கப்பட்டுள்ளதா?

  பதிலளிநீக்கு
 7. பொன்ராஜ்!

  சென்ற பதிவுக்கு தாறுமாறான புகழ்ச்சியோடு உனது பின்னூட்டம் இருந்ததால், அதை வெளியிடவில்லை. மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 8. எஸ்.வி.வி!
  தங்கள் பின்னூட்டத்தில் அர்த்தங்களும், ஏக்கங்களும் புதைந்துள்ளன. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. குரு!
  நன்றி.

  அரபுத்தமிழன்!
  ரசித்ததற்கு நன்றி.

  ஜோ!
  இருக்கலாம் நீங்கள் சொல்வது போல.

  விஜயராஜ்!
  ஆராய்ச்சித் துணுக்காக நான் எழுதவில்லை. :-)))

  அசோக்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. இயல் வாழ்விழந்த மனிதனைச் சொல்வதாய் எடுத்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. இயற்கையை சீரழிக்கும் மனிதர் மீது தான் கோபம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!