கருணாநிதி சிரித்தார்!

நிறையவே குடித்து விட்டிருந்தான். பெரும் இரைச்சலோடும், புகை மண்டலமாகவும் இருந்த டாஸ்மார்க் கடைக்குள் அவன் ஒரு பொருட்டு இல்லை. லேசாய் தடுமாறி எழுந்து நின்று, லுங்கியைத் தூக்கி, காற்சட்டைக்குள்ளிருந்து ஒரு பிளாஸ்டிக் பொட்டலத்தை எடுத்து அசுத்தமான  மேஜையில் விரித்தான். அதில் சில பேப்பர்கள், நகை அடமானம் வைத்த வங்கிக் கடன் அட்டை, பிள்ளையார் படம், அப்புறம் ஒரு குழந்தை படம் இருந்தன. பக்கத்தில் இருந்தவரிடம் அந்தப் படத்தைக் காண்பித்து, “இவன் என் பையன் சார். எப்படியிருக்கான் பாருங்க. இவன கான்வெண்ட்ல படிக்க வைக்கப் போறேன்..” எனத் திரும்பத் திரும்பச் சொன்னான். பேண்ட் சட்டை போட்ட அந்த நாகரீகமானவன் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். வேறு யாரும் தான் சொல்வதைக் கேட்பார்களா என்று அங்குமிங்கும் பார்த்தான். எதோ தனக்குள்ளேயே சொல்வது போல முனகிக்கொண்டான்.

சப்ளை செய்த பையன் வந்து மொத்தம் எவ்வளவு ஆகியது என்று சொன்னான். நிமிர்ந்து அவனையேப் பார்த்து, “கணக்கைத் திரும்பச் சொல்லு” என்றான். அந்தப் பையன் சொன்னான். “பேப்பர் மாதிரி இருக்குற பிளாஸ்டிக் டம்ளருக்கு மூணு ருபாயா.... கோல்டு பிளேக் வெளியே மூனு ருபாய், இங்க நாலு ருபாயா. என்ன ஏமாத்துறீங்களா...அநியாயம் பண்றீங்களா...” கத்தினான். ”இங்க அப்படித்தான்... தர்றியா.. இல்லியா” என்றான் சப்ளை செய்தவன். “தரமுடியாது மயிரு. என்னடா செய்வே. ஒன் இஷ்டத்துக்கு விலய வச்சுக்குவே. நான் என்ன இளிச்ச வாயனா..” அவனும் சத்தம் போட்டான். நான்கைந்து பேர் அவனை நோக்கி இறுகின முகங்களோடு வந்து, சட்டைப்பைக்குள்ளிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, நெட்டித் தள்ளி, இழுத்துக்கொண்டு போய் வெளியே விட்டனர். “வெளங்க மாட்டீங்க டாய்...! வெளங்க மாட்டீங்க..!” என்று நடந்தான்.

சாலை பிரகாசமாய் இருந்தது. அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டு போனான். அங்கும் அவன் ஒரு பொருட்டு இல்லைதான். போஸ்டர் ஒன்றில் கருணாநிதி சிரித்தபடி இருந்தார். பக்கத்தில் போனான். கும்பிட்டான். “தலைவா... நீ நல்லாயிருக்கணும். ஒன்னயப் போல உண்டா. நாங்க இருக்கோம் தலைவா ஒனக்கு.” என நெஞ்சில் அடித்துக்கொண்டான். “தலைவா...ஒன்னய யாரும் அசைக்க முடியாது. ” என்றான். அவன் சொன்னதைக் கேட்டது போல,  உலகத் திருக்குறள் பேரவை சார்பில் நடந்த பாராட்டு விழாவிலிருந்த கருணாநிதி அந்த நேரம் சிரித்தார்.

*

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அவருக்கென்ன, சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார் :))))))

    பதிலளிநீக்கு
  2. :)))

    எத்தனை வாங்கிக் கட்டிக்கப் போறீங்களோ!

    பதிலளிநீக்கு
  3. அதே நேரத்தில் விழாவில் 'கள்ளுண்ணாமை' பற்றிக் கூட யாராவது உரையாடிக் கொண்டிருக்கலாம். :-)

    பதிலளிநீக்கு
  4. மதுரையா இருந்தா அழகிரி சிரிப்பாரு. வடக்க ஸ்டாலின் சிரிப்பாரு. 'சோம பானம், சுறா பானம்'னு நாகரீகமா இலக்கிய கூட்டங்கள்ல, சென்னை சங்கமத்துல கனிமொழி சிரிப்பாங்க. ஒரு காலத்துல 'தைரியமாக சொல் நீ மனுசந்தானா' ன்னு பாடிய எம்.ஜி.ஆர். சிரிச்சாரு. இப்போ கருணாநிதி சிரிக்காரு. குறளோவியம், நெஞ்சுக்குநீதி எழுதுனவங்க எல்லாம் சாராயக்கட நடத்துறாங்க, ஏற்கனவே சாராயம் காச்சி வித்த ஜேப்பியார் மாதிரி ஆளுங்க எல்லாம் பள்ளிக்கூடம் காலேஜ் நடத்துறாங்க. சாராயத்தந்தைக எல்லாம் இப்போ கல்வித்தந்தைக, கல்வித்தந்தைக எல்லாம் இப்போ சாராயத்தந்தைக. என்ன, தல சுத்துதா?! விட்டுத்தள்ளுங்க, மொத்தத்துல நம்ம வாழ்க்க கெடந்து சிரிப்பா சிரிக்குது.
    இக்பால்

    பதிலளிநீக்கு
  5. அடுத்தமுறை இந்த மாதிரி எழுத வேண்டி வரலாம்.. "அகில உலக டாஸ்மாக் குடிமக்கள் பேரவை பாராட்டு விழாவில் இருந்த கருணாநிதி சிரித்தார்"

    பதிலளிநீக்கு
  6. ஏங்க மாதவ், நாய் வித்த காசு குரைக்குமா? ஒரு ரூபா அரிசிக்கு மான்யம் எதிலேந்து வரதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? இதுதாங்க பேலன்ஸ்டு எகானமி. இந்த ராஜதந்திரம் கூட புரியாம கருணாநிதி சிரிக்கிறார்னு எழுதறீங்க. எங்க தலைவருக்கு எல்லாம் தெரியும். யார் யாருக்கு என்னன்ன வேணும் அத எப்படியெல்லாம் கொடுக்கறதுன்னு அவருக்கு அத்துபடி. ஒரு பக்கம் 58க்கு மேல உள்ள பெரிசுகளுக்கு அத்தக் கூலி வேல. இன்னொருபக்கம் சிறுசுகளுக்கு ஊர் ஊருக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம். சும்மா சொல்லக் கூடாது நம்ம இளைஞர்களும் என்னமோ நாளைக்கே வேலை கையிலே கொடுக்கறா மாதிரி படை படையா க்யூவிலே நாள் பூரா நிக்கறத பார்க்கும் போது திரும்பவும் டாஸ்மாக்கிற்குள்ளே போய்ட்டு தலைவா நீ ரொம்ப நாள் இப்படியே(!) வாழனும்னு வாழ்த்தத் தோணுது. நாதன்,திருச்சி.

    பதிலளிநீக்கு
  7. அங்கே சிரிப்பவர்கள், சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு!

    பதிலளிநீக்கு
  8. பதிவை படித்து விட்டு நானும் சிரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. கள்ளுக் கடை காசில தாண்டா கட்சி கோடி ஏறுது போடா

    ஒயின் ஷாப் கடை காரர்கள் தான் ஒன்றிய கழக செயலாளர்கள்,

    மணல் வியாபாரிகள் தான் மாவட்ட செயலாளர்கள்.

    அன்றைய சாராய வியாபாரிகளான ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், நைனார் நாகேந்திரன் இன்றைய அமைச்சர்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஒரு ரூபாய் அரிசி, விவசாய கடன் ரத்து, மலிவு விலை மளிகை, இலவச டிவி... இதையெல்லாம் வாங்கி வருகிறவர்களை பார்த்தும் சிரித்தார்.... டாஸ்மாக்கிலிருந்து வருபவனை பார்த்தும் சிரிக்கிறார்... சிரிப்பு ஒன்றுதான்... அதன் அர்த்தம் பார்ப்பவர்களை பொறுத்தது...

    பதிலளிநீக்கு
  11. அமிர்தவர்ஷிணி அம்மா!
    வால் பையன் அந்தச் சிரிப்பு குறித்து கருத்து சொல்லியிருக்கிறார்.


    தீபா!
    வரட்டும். வரட்டும்.


    சுரேஷ்கண்ணன்!
    அப்படியும் நடந்திருக்கலாம். எல்லா சாத்தியங்களையும் கொண்டதுதானே இந்த ஜனநாய்கம்.


    இக்பால்!
    கடும் வேகத்தோடு வார்த்தைகள் வந்து இருக்கு. அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா என்று எதையும் செய்யத் துணிகிறார்கள். மக்களை எவ்வளவு இழிவுபௌத்த முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள். அவ்வளவும் மக்களின் பேராலேயே நடப்பதுதான் கண்றாவி.


    பிள்ளையாண்டான்!
    அதுவும் நடக்கும். அதற்கும் சாத்தியங்கள் உண்டு. அதற்கும் கமலும், ரஜினியும் அழைக்கப்படலாம். கலைஞர் டி.வியில் காட்டப்படலாம்.

    பதிலளிநீக்கு
  12. நாதன்!
    என்ன நடக்குதுன்னு திணறடிக்கிற மாதிரி எல்லாம்தான் நடக்கு. இன்னும் செம்மொழி மாநாடு வேற வருது. :-)))))


    வால்பையன்!
    சிரிப்புச் சத்தம் கேட்குதா?
    :-)))


    அம்பிகா!
    உன் சிரிப்புச் சத்தம் எனக்கு கேட்டது.



    அனானி!
    இருவரும் ஒருவரே!

    பதிலளிநீக்கு
  13. குப்பன் யாஹூ!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


    ரிஷபன்!
    வேடிக்கை மட்டுமல்ல நண்பா, துயரமும்தான்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!