அவனுக்கென்ன!

பட்டப்பகலில் இது நடந்தது. உலகமே வேடிக்கை பார்த்தது.

ஆனால் அவன் சாதாரணமாகவும், இயல்பாகவும் இருந்தான். கந்தல் கந்தலான ஆடையில் அழுக்காயிருந்தான். தாடியும், மீசையும் அதுபாட்டுக்கு வளர்ந்து கிடந்தது.

நாற்கரச்சாலையின் தார்ப் பரப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தான். அந்த பார்சலை அவிழ்த்தான். உள்ளிருந்த இலையை விரித்தான். இட்லிகள் இருந்தன. பிளாஸ்டிக் பையில் கட்டி வைத்திருந்த சாம்பாரை நிதானமாய் அதில் ஊற்றினான். இட்லியைப் பிய்த்து ஒரு வாய் சாப்பிட்டான். வானம் பார்த்தான்.

எங்கிருந்தோ வந்துகொண்டிருந்த லாரிகளும், பஸ்களும், கார்களும் அருகில் வந்ததும், வேகம் தணித்து வளைந்துதான் தாண்டிச் சென்றன. கொஞ்சம் தள்ளி கடையோரங்களில் நின்றவர்கள், முதலில் அதிர்ச்சியோடு பார்த்து பிறகு சுவராசியம் கொண்டனர். சிலர் சிரிக்கவும் செய்தனர். விலகியே நின்றனர் யாவரும்.

ஒரு நாய் அவனருகே சென்றது. ஒரு இட்லியை அதற்குப் போட்டான். குனிந்து சாப்பிட்டது. சிரித்தான். வானம் பார்த்தான்.

அவனுக்கென்ன...!

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சுய நினைவிழந்தவனாகத் தெரிகிறது மற்றவர்களுக்கு, உண்மையில் நினைத்ததை செயல்படுத்தும் நிஜ முகத்தோடு அவனிருப்பதை யாரரிவார்?

    பதிலளிநீக்கு
  2. அவனுக்கென்ன, தனியாத் தெரியுறான், அவனைப்போலவே

    பதிலளிநீக்கு
  3. விலகியே நின்றனர் யாவரும்...
    எங்கும்... எப்போதும்

    பதிலளிநீக்கு
  4. தனித்திருந்தான்.
    பசித்திருந்தான்.
    போலவே விழித்தும்.

    பதிலளிநீக்கு
  5. அவனுக்கென்ன!

    தன் பசி போக்கி, மற்றொரு உயிரின் பசி போக்கினான்.

    அவனுக்கென்ன குழந்தையா, குட்டியா.

    பதிலளிநீக்கு
  6. எதைப் பற்றியுமே கவலை இல்லாத மனிதன் இருந்தால் சாபிடுவான் இல்லாவிடால் இருப்பான்
    ....எல்லை கடந்தவன்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!