“அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!”

வாய்விட்டு சிரித்ததைப் போல, இன்றைய சாயங்காலத்தின் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் ஒரு மழை பெய்து நின்றது.

ஈரம் பாவிய வெளி சிலிர்த்துப் போய் நிற்கிறது. எல்லாம் சட்டென புதுசாய் தெரிகிறது. சின்னதாய் கட்டிக் கிடந்த நீரில் கருங்குருவிகள் இரண்டு தலையை முக்கி, முக்கி உடலை உதறிக்கொண்டிருக்கின்றன. கலைந்து போயிருந்த வாசல் கோலங்களின் வர்ணங்களில் அடையாளம் தெரியாத ஒரு மந்தகாசம் பூத்திருக்கிறது. சிமெண்ட் சாலை போடப்பட்டு இருக்கும் அடுத்த தெருவிலிருந்து “ஆத்து மேட்டுல.... ஒரு பாட்டு கேக்குது” என ஸ்பீக்கர் செட் யாருக்கோ பாடுகிறது.

கரும்புகள் சிலவற்றையும், மஞ்சள் குலைகளையும் கட்டிவைத்த சைக்கிளில் ஒருவர் தெருமுனையில் திரும்புவது தெரிகிறது.

“அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!”

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. பொங்கல் வந்தாச்சா?...உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
 4. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு/பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மாதவ் அண்ணா.

  பதிலளிநீக்கு
 9. அன்பு மாதவராஜ்,

  மழை உங்களை மட்டும் நனைக்கிறது மாதவராஜ்... இங்கே கானோம்... மழையையும்.

  நீங்கள் புத்தககண்காட்சிக்காய் சென்னை செல்லும்போதெ சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். “உறைமெழுகில் மஞ்சாடி பொன்” தானு பிச்சையா வின் கவிதை தொகுப்பு, வாங்கி படிச்சு பாருங்க... வித்யாசமான நடை, பாடுபொருள் இன்னும் உறவுகள், உணர்வுகள்...

  நானும் சொல்கிறேன்

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! குயில்தோப்பின் எல்லா உயிர்களுக்கும் என் அன்பு.

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ராகவன் அவர்களுக்கு,
   உறைமெழுகில் மஞ்சாடி பொன் - இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கிறது? பதிப்பாளர் யார் என்று நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா? எனக்கு இந்தப் புத்தகம் தேவைப்படுகிறது

   நன்றி
   சரவணன்.சு

   நீக்கு
  2. அன்புள்ள ராகவன் அவர்களுக்கு,
   உறைமெழுகில் மஞ்சாடி பொன் - இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கிறது? பதிப்பாளர் யார் என்று நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா? எனக்கு இந்தப் புத்தகம் தேவைப்படுகிறது

   நன்றி
   சரவணன்.சு

   நீக்கு
 10. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 12. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. நேற்று வரும்போது அந்த கரிசல் காடுகள் முழுக்க வேலி மண்டிக் கிடந்ததைப் பார்த்தேன். கபிலவஸ்து மாதிரி.
  வளமைபோல நெல் தலையாட்டுகிற எங்க ஊர் பெரியகம்மா வயக்காடுகள் அம்மணமாகக்கிடந்தது. சிவகாசியிலிருந்து ஊர்ந்து, நகர்ந்து, வந்த அந்த பட்டாசுக்,கம்பெனிகள் எங்கள் ஊரை நெருங்கிவிட்டது.பல விலைநிலங்களை விழுங்கியபடி. அவர்கள் தவற விட்ட நிலத்தை ரியல் எஸ்டேட் முதலைகள் அபகரித்துவிட்டன.நல்ல அரிசி நாப்பத்தஞ்சு ரூவா. ஒரு குரோட்டன்செடி கூட வளராத கான்க்ரீட் வீடுகளின் முற்றத்தில் தைப்பொங்கலின் தம்பட்டச்சத்தம் ரொம்பத்தான் கேட்குது மாது. நூத்திப்பத்துக் கோடி ஜனங்களைப் பராமரிக்க என்னவெல்லாம் திட்டம்வேண்டும். என்ன வெச்சிருக்காங்க இவிங்க.உலகம் அழியும் போது நோவப்பேழையிப் பிழைக்கிற மாதிரி.சுவிஸ்,அமெரிக்கா,பிரிட்டன் என பலநாடுகளில் டம்மி வீடுகள் கட்டியிருக்கும் அவனுகலுக்கு என்ன.
  ஆனா ஒண்ணு இந்த மக்களுக்கு க்ளைமாக்சிலாவது கோபம் வரும் அந்த நம்பிக்கையோடு.
  பொங்கல் வரட்டும்.

  பதிலளிநீக்கு
 14. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. இனிய பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 16. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. இனிய தைத்திருநாள்

  நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!