வளையல் சத்தம்

 

எப்போதாவது ஜன்னலைத் திறந்தால் அவள்தான் தெரிவாள். ஒட்டி இருந்த காம்பவுண்டில் அந்த வீடுதான் நேர் எதிரே. கல்யாணமான புதிது என்பதால் பெரும்பாலும் ஜன்னல் மூடித்தான் இருக்கும். பார்க்கிற நேரமெல்லாம் அந்த வீட்டு முகப்பில் உட்கார்ந்தே இருப்பாள். விரல்கள் தீப்பெட்டி அட்டைகளை ஓட்டிக்கொண்டே இருக்கும். அப்படியொரு வேகம். வளையல் சத்தம் ஓயாது. இளம் வயதுதான். நிமிர்ந்து ஒருகணம் பார்த்துவிட்டு குனிந்துகொள்வாள். கண்களில் இருந்த எதோவொரு சோகத்தை வளையல்கள் தெளித்துக்கொண்டு இருந்தன.

வீட்டில் இவள்தான் சில செய்திகளை அவ்வப்போது சொன்னாள். அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டதாம். புருஷன் பம்பாயில் எதோ கடையில் இருக்கிறானாம். அங்கு கொஞ்சம் கலவரமாய் இருந்ததால் இங்கு அவளது அம்மா வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டானாம். நாலைந்து மாதங்கள் ஆகிவிட்டதாம். இன்னும் இரண்டு மாதங்களில் கூட்டிக்கொண்டு சென்றுவிடுவானாம். அந்தப் பெண்ணின் முகமும், வளையல் சத்தங்களும் இப்போது புரிந்தது. ஒளியிழந்த கண்கள் தாழ்ந்தே இருந்தன.

இவள் பிரசவத்திற்கு ஊருக்குச் சென்றிருந்தபோது, சினிமாத் தியேட்டர்களில் மாலைகளை கழிக்கும்படி ஆயிற்று. ஒருநாள் அந்தப்பெண்ணும் படம் பார்க்க வந்திருந்தாள். சரியாக பின்சீட்டில் ஒருவனோடு உட்கார்ந்திருந்தாள். முகம் நிமிர்ந்து பார்த்தாள். அவளது கணவன் வந்திருக்கிறான் என்பது புரிந்தது. தெரிந்தவள் போல நேருக்கு நேர் பார்த்து சகஜமாக சிரித்தாள். ஆச்சரியம்தான். விளக்கு அணைக்கப்பட்டு படம் போடப்பட்டது. வளையல் சத்தங்கள் இப்போதும் ஓயவில்லை. அவை சிரித்துக்கொண்டே இருந்தன.

*

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //வளையல் சத்தங்கள் இப்போதும் ஓயவில்லை. அவை சிரித்துக்கொண்டே இருந்தன.//

    இது அழகு

    பதிலளிநீக்கு
  2. இது வளையல் சத்தம் இல்லை..வளையல் மொழி!

    பதிலளிநீக்கு
  3. குட்டி கவிதை படிச்ச மாதிரி இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. அது வளையல் சத்தம் மட்டுமல்ல தோழர், அவளின் வளையாத சத்தமும் கூட.

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ஆரூரன்

    பதிலளிநீக்கு
  5. பெண்மையின் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான வலை(ளை)ப்பதிவு

    பதிலளிநீக்கு
  6. கதிர்!
    வருகைக்கும், ரசனைக்கும் நன்றி.

    வேல்ஜி!
    நல்ல தலைப்பைச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

    மங்களூர் சிவா!
    நன்றி.

    சக்திபிரபா!
    நன்றி


    ஆரூரன் விசுவநாதன்!
    நன்றி.


    தியாவின் பேனா!
    நன்றி.


    அம்பிகா!
    மொழி விளையாட்டா...! ரசித்தேன்.


    உழவன்!
    நன்றி.

    மண்குதிரை!
    நன்றி.


    தீபா!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அமித்து அம்மா!
    பா.ராஜாராம்!
    அன்புடன் மலிக்கா!
    சந்தனமுல்லை!

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!