பாரதியார் ஏன் எழுதவில்லை...

தாஜ்மஹால் என்றதும் சிறைக்கம்பிகளின் ஊடே காதலியின் கல்லறையைப் பார்த்துக்கொண்டிருந்தார் ஷாஜஹான் என்னும் செய்திதான் நினைவில் தானாக வருகிறது.  தாஜ்மஹால் என்னும் வார்த்தை அப்படி ஒரு நெருக்கமானதாக இந்த மண்ணில் இருக்கிறது.

 

தாஜ்மஹாலை நேரில் பார்த்தவர்களும் அதைப்பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள். எனக்கு மட்டுமல்ல, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கும் இலக்கிய ஆர்வத்தை அதிகமாக்கிய தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் மூன்று முறை தாஜ்மஹாலுக்கு சென்று வந்ததைப் பற்றி ஒருமுறை சொன்னார். பதினெட்டு வயதில் முதன் முறையாக பார்த்தபோது, காதலின் மகோன்னதமான காட்சியாக மனதிற்குள் விரிந்ததையும், முப்பது வயதில் அடுத்தமுறை சென்ற போது, ‘இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள் என உழைப்பின் சாட்சியாகவும், ஐம்பது வயதில் பார்க்கும்போது ‘ஐயோ, இந்த உலக அதிசயமான சலவைக்கல் சுற்றுப்புறச்சூழலால் மங்கிக்கொண்டு வருகிறதே’ என துயரமாகவும் இருந்ததாகச் சொன்னார்.

 

மணிரத்னம், ஷங்கர், போன்றவர்களும் கூட தாஜ்மஹாலைச் சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேயே போகாமல் ’தாஜ்மஹால்’ என ஒரு படமே எடுத்துவிட்டார் நமது பாரதிராஜா. “தாஜ் மஹால் ஒரு பணக்காரனின் சலவைக் கண்ணீர்” என்றெல்லாம் ஏராளமான கவிதைகள் குவிந்திருக்க, ‘தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும்’ என ஒரு கவிதைத் தொகுப்பையே கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் நா.காமராசன். தாஜ்மஹாலின் வண்ணங்களும், கோணங்களும் அற்புதமான ஒவியங்களாகவும், புகைப்படங்களாகவும் வந்துகொண்டே இருக்கின்றன. கலை இலக்கியங்களும் இன்றுவரை கொண்டாடுகின்றன. தாஜ்மஹாலை நேரில் பார்க்காவிட்டாலும் எல்லோருக்குள்ளும் சில தாக்கங்களும், நினைவுகளும் மண்டிக்கிடக்கின்றன.

 

சில வருடங்களுக்கு முன்பு, ஒருமுறை தூத்துக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் அதில் பேச வந்திருந்தார். மேடையில் கவிஞர் சு.வெங்கடேசன் (காவல்கோட்டம் நாவலாசிரியர்) கவிதையின்பம் குறித்து உணர்ச்சி ததும்ப சொல்லிக்கொண்டு  இருந்தார். தாஜ்மஹால் குறித்த ஏராளமான கவிதைகளைக் குறிப்பிட்டு விட்டு, போகிற போக்கில் காதல் கவிதை எழுதிய எந்தவொரு பெரிய கவிஞரும் தாஜ்மஹாலைப் பற்றி எழுதாமல் இருந்ததில்லை எனச் சொன்னார். அது அப்படியே உண்மையில்லையென்றாலும், தாஜ்மஹால் நம் கவிஞர்களை எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதைச் சொல்ல வந்த வார்த்தைகள் என புரிந்துகொள்ள முடிந்தது. மேடையைவிட்டு இறங்கியதும் எழுத்தாளர் ஜெயகாந்தன் சு.வெங்கடேசனை அருகில் அழைத்தார். “தாஜ்மஹாலைப் பற்றி பாரதியார் எழுதவில்லை. தெரியுமோ..” என்று கடகடவென சிரித்தார். சு.வெங்கடேசன் கொஞ்சம் அசடு வழிந்தார்.

 

ஆமாம், இவ்வளவு தூரம் எல்லோரையும் பாதித்த தாஜ்மஹாலைப் பற்றி பாரதி ஏன் எழுதவில்லை.?

 

*

கருத்துகள்

20 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஆச்சரியமானதுதான். வட இந்திய பயணம் செய்தவர் ஏன் அதைப்பற்றி பாடவில்லை?

  இந்தக் கோணத்தில் யாரும் யோசித்ததாகவோ, பேசியதாகவோ நினைவில் இல்லை.

  நல்ல பதிவு


  அன்புடன்
  ஆரூரன்

  பதிலளிநீக்கு
 2. Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
  அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

  உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

  விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

  பதிலளிநீக்கு
 3. அவ்வ‌ப்பொழுது க‌ண்ண‌ம்மா ப‌ற்றி ஈர‌ம் த‌தும்ப‌ எழுதினாலும்,பார‌திக்கு என்ன‌வோ
  வெள்ளைய‌னுக்கு எதிராக‌ த‌ன் எழுத்துக‌ளை போர்வாளாக‌ மாற்ற‌ ம‌ட்டுமே
  நேர‌மிருந்த‌து.

  அச‌த்த‌லான‌ ப‌திவு தோழ‌ர் !!

  பதிலளிநீக்கு
 4. அ.மு.செய்யது சொல்வதுதான்
  எனக்கும் இதுதான் தோன்றுகிறது..

  அதோடு... பாரதி காலத்திய கவிஞர்கள் வேறு யாராவது இது குறித்துப் பாடியிருக்கிறார்களா?

  அந்த காலகட்டத்தில் தாஜ்மஹால் குறித்து இவ்வளவு ஆர்வம் இருந்திருக்காதோ?

  பதிலளிநீக்கு
 5. ஆமாம், ஏன் தாஜ்மஹாலைப பற்றி அவர் எழுதவில்லை?!! ஆச்சர்யமாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
 6. பாரதியின் அனைத்துக்கவிதைகளுமே, நாட்டுப்பற்றுகவிதைகளாக, வெள்ளையருக்கு எதிராக எழுதப்பட்டவை அல்ல.

  கலையழகுக்காகவும் மற்றும் பல உணர்ச்சி வெளிப்பாடுகளுக்காகவும் எழுதியிருக்கிறார். புதுச்சேரியில் எழுதிய குயில் பாட்டைச்சொல்லலாம்.

  வடநாட்டில் பல்லாண்டுகள் வாழ்ந்திருக்கிறார். கண்டிப்பாக தாஜ்மகாலைப் பார்த்திருப்பார்.

  ஏன் பின்னர் எழுதவில்லை அதைப்பற்றி?

  ஒருவேளை, அது மகமதியரின் வேலைப்பாடென்றா?

  கலையுணர்வுமிக்க பொருள்கள் அவரின் கவிதையில் பாராட்டப்பட்டனவா?

  பாரதியின் மனம் ஒரு புதிர். He is a deep well of different conflicts.

  பாரதியைப்பற்றி புகழும் சரிதைகளே எழுதப்பட்டதால், (வலைபதிவுகளிலும் அப்படியே), பாரதி என்ற மனிதனைப்பற்றி நமக்கு தெரியவருவது, ஒரு fantasy character தான். பாதி உண்மை.

  ஒரு மனிதனுக்கு பலமுகங்கள் இருக்கும். குறை, நிறை இல்லாமல் எவரும் இல்லை. குணத்தையும், குற்றத்தையும் சேர்ந்து ஆராய்ந்தபின்னர்தான் முடிவெடுக்கச்சொன்னார் வள்ளுவர்.

  ஆனால், இரண்டையும் வெளிக்காட்டுவது, விபரீதமாகிவிடும் சமூக நாயகர்களைப்பற்றிச் சொல்லும்போது. பார்க்கக்கூடாத முகமாயிருப்பின், அன்னாரது தொண்டர்கள் எதிர்ப்பார்கள். குறிப்பாக, தமிழர்களுக்கு அது பிடிக்காது.

  எனவே, பாரதி என்னும் மனிதன் என்றுமே ஒரு புதிராகத்தான் இருப்பான். ‘ஏன் தாஜமகாலைப்பற்றி எழுதவில்லை?’ என்பது அப்புதிர்களுள் ஒன்று.

  பதிலளிநீக்கு
 7. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
  புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
  நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
  பல தள செய்திகள்...
  ஓட்டுப்பட்டை வேண்டாம்...
  எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
  முழுவதும் தமிழில் படிக்க....

  தமிழ்செய்திகளை வாசிக்க

  (இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

  (விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

  தமிழ்செய்திகளை இணைக்க

  ஆங்கில செய்திகளை வாசிக்க

  வலைப்பூ தரவரிசை

  சினிமா புக்மார்க்குகள்

  சினிமா புகைப்படங்கள்

  பதிலளிநீக்கு
 8. ‘இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள்

  unmathaa

  ammaa.

  pakirvukku nanri.

  பதிலளிநீக்கு
 9. காதல் பொழிவான நேரத்தில் காதல் பற்றி எவரும் அக்கறை கொள்ளமாட்டார்கள். காதல் அன்று திளைத்திருந்தது. அதனால் தாஜ்மஹால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை.

  பின்னாளில் காதல் தொலைய ஆரம்பித்ததும், காதலை முன்னிறுத்திய தாஜ்மஹால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

  அழகிய வேலைப்பாடுகளுக்கென போற்றப்பட்ட தாஜ்மஹால் காதல் மலிந்து போன இந்த காலத்தில் காதலுக்கென போற்றப்படுவது இயற்கைதான்.

  காதலுக்காக தாஜ்மஹால் எடுத்துக்கொண்ட பரிமாணம் இது.

  அன்றைய தினத்தில் காதல் செழித்திருந்தது எனவே, இதை பாரதியார் காதலுக்கென தாஜ்மஹாலை முன்னிறுத்தி பாடாமல் இருந்ததில் ஆச்சரியமொன்று இல்லை.

  நல்லதொரு சிந்தனையை பகிர்ந்தமைக்கு நன்றி மாதவராஜ் அவர்களே.

  பதிலளிநீக்கு
 10. பாரதியார் வீரபான்டியாய கட்டபொம்மன உம பாடவே இல்லை ? ஏன்?

  பதிலளிநீக்கு
 11. ஏனோ? பாரதிக்கே வெளிச்சம். வித்தியாசமான சிந்தனைக்கு பாராட்டுக்கள். பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நல்ல பதிவு.

  ஒரு வேளை பாரதியின் ஊர் சார்ந்தவன் என்பதாலோ என்னவோ எனக்கும் தாஜ்மஹால் (மும்தாஜ் மஹால்) மீது அந்த அளவு ஈர்ப்பு இல்லை.

  ஒரு முறை ஆக்ரவிலேயே ஒரு நாள் தங்கி இருந்தேன், இருந்தும் பார்க்க மனம் வர வில்லை.

  ஆமாம் ஷாஜகான் செலவு செய்தது தன சொந்த பணத்தையா அல்லது மக்களின் வரிப் பணமா.

  பதிலளிநீக்கு
 13. chumma said...
  பாரதியார் வீரபான்டியாய கட்டபொம்மன உம பாடவே இல்லை ? ஏன்

  எங்கோ ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிட்டதாய் படித்த ஞாபகம்
  நண்பரே (வரிகள் ஞாபகமில்லை மன்னிக்கவும் )

  பதிலளிநீக்கு
 14. //‘இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள் ..//

  பிரமாண்ட்மான கலைச்சின்னங்கள் எதுவானாலும், தொழிலாளிகள் உழைப்பால்தான் உருவானவை. தாஜ்மகல் மட்டுமல்ல். தஞ்சைப்பெரிய கோயிலும் அப்படியே.

  இப்படி உழைப்பாளிகள் இல்லாமல் கலைச்சின்னம் ஒன்று வேண்டுமானால், சிறு சிற்பங்கள்தான் தேறும். ஒரு சிற்பியும், ஒரு உளியும் போதுமல்லவா?.

  தாஜ்மகலைப்பார்த்தவுடன் உழைப்பாளர்கள் நினைவுக்கு வந்தால், நீஙகள் தெருச்சாலையில் கூட நடக்கமுடியாது. அதுவும் உழைப்பாளிகளின் வியர்வையே. ஜயினமுனிவர்கள் சாலைகளில் நடக்கும்போது அவர்கள் தொண்டரடிப்பொடிகள் முன்னே தூத்துக்கொண்டே போவர். சிறுபூச்சிகள், எறும்பு போன்ற உயிரனிங்க்ளை மிதித்து கொன்றுவிடக் கூடாதென்பதற்காக்! நீங்கள் அப்படிச்செய்ய முடியுமா? அவர்கள் குளிக்கமாட்டார்கள். அழுக்குடம்பில் புகலிடம்தேடி வாழும் உயிரினங்கள் மரித்துவிடக்கூடாதென்பதற்காக்! உங்களால் முடியுமா?

  கலைகளை இரசிக்கவும் சிறுசிறு தியாகங்கள் ப்ண்ணித்தான் தீரவேண்டும். ஒன்றைக்க்கொடுத்துத்தான் மற்றொன்றைப்பெறவேண்டும்.

  இருக்கட்டும்: ஏன் தாஜ்மகலைப்பற்றி எதுவும் எழுதவில்லை என்பதற்கு இதுவா பதில்?

  பதிலளிநீக்கு
 15. //ஆமாம் ஷாஜகான் செலவு செய்தது தன சொந்த பணத்தையா அல்லது மக்களின் வரிப் பணமா.
  //

  வரிப்பண்ம்தான். இதிலென்ன சங்கை?

  மக்களின் வரிப்பணத்தில் ஒரு கலைச்சின்னம். சரிதானே! இன்றும் நின்று கண்ணுக்கு விருந்தாகவும், நாட்டிற்கு ஈட்டித்தரும் அந்நியச்செல்வாணி வழியாகவும் திகழ்கிறதல்லவா? அது பெருந்ன்மைதானே நமக்கு?

  எனக்கும் உங்களூர் அருகில்தான். எட்டயபுரத்தில் வாழ்ந்த பாரதி, அங்கு வாழ்ந்த ஒதுக்கப்பட்ட இனத்தைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே ஏன்? ஏன்? ஏன்?

  புதுச்சேரி வாசம்தான் அவருக்கு, ஒதுக்கப்பட்டவர் உண்மையில் துர்நாற்றமுள்ளவர் அல்ல என்பதைக் கற்றுத்தந்தது. அதன்பின்னரெ, அவரின் பார்ப்பனத்துவேசம் பெருக்கெடுத்தது. அது வெளிப்படத்தொடங்கியதும், பார்ப்பனகுலத்தார் அவரைவிட்டு விலகத்தொடங்கினர். எப்படி, ச்ங்கரராமன் குடும்பத்தினரைப்பற்றி கவலைப்படாமல் விலகினார்களோ அப்படி!

  அவர் சரிதம் கிடைத்தால் படிக்கவும்.

  உங்களூர்காரைப்பற்றி மற்றவூர்க்காரரிடம் கேட்டுத்தெரியும் நிலையா உங்களுக்கு?

  பதிலளிநீக்கு
 16. //பாரதியார் வீரபான்டியாய கட்டபொம்மன உம பாடவே இல்லை ? ஏன்?//

  நல்ல கேள்வி. இதற்கெல்லாம் மாதவராஜ் பதில் சொல்வார். இருப்பினும், வழிப்போக்கன் எனக்குத் தெரிந்தது இது.

  Since it is a long message and I dont want to encroach the space here, I am putting it up in my own blog today. Chumma can read there. Others, too, if willing.

  பதிலளிநீக்கு
 17. எந்த ஒரு கவியும் , தன்னை பாதித்த விசயங்களை நிச்சயம் பதிவு செய்து விடுவான் . ஒன்று, தாஜ்மஹால் பாரதியை பாதித்து இருந்து இருக்காது அல்லது ,
  அவர் எழுதிய விஷயம் நம்ம கைஇல் கிடைக்காமல் போய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 18. மாதவராஜ், பாரதியின் கவிதைகளை மட்டும் வைத்து, ‘எழுதவில்லை’ என்கிறீரா? இல்லை, உரைநடையில் எழுதிவற்றையும் சேர்த்துசொல்கிறீரா?

  ஒருவேளை, முத்துக்குமார் guess பண்ணியதுபோல, உரைநடையில் எங்காவது எழுதியிருப்பார். தேடலாம்.

  பதிலளிநீக்கு
 19. கண்ணம்மா அவன் காதலி...அவள் அவனது கற்பனை...கவிஞர்கள் ஒருபோதும் கற்பனைக்கு கல்லறைகட்டுவதில்லை...அதனால் அவன் அந்த கல்லறையில் தன் காதலை உறங்கச்செய்யவில்லை....

  பதிலளிநீக்கு
 20. வாசித்தவர்களுக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.

  எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னவுடன் எனக்குத் தோன்றிய கேள்விதான் கடைசி வரிகள். பாரதி, சுதந்திரப் போராட்டம் குறித்து எழுதவில்லையென்றால், ஆது ஆராய்ச்சிக்குரியது.சிந்தனைக்குரியது. தாஜ்மஹாலை எழுதாதது அப்படியொரு கவனத்திற்குரியது அல்ல எனினும் சுவராசியமானது. அதற்குத்தான் இந்தப் பதிவும்.

  முத்துக்குமார் அவர்கள், இதனை அருமையாகச் சொல்லியிருப்பதாகப் படுகிறார். //எந்த ஒரு கவியும் , தன்னை பாதித்த விசயங்களை நிச்சயம் பதிவு செய்து விடுவான் . ஒன்று, தாஜ்மஹால் பாரதியை பாதித்து இருந்து இருக்காது// . இது சரியான விஷயமாக இருக்கிறது.

  செய்யது அவர்கள் கேட்டு இருப்பது பாரதி காலத்தில் உள்ள கவிஞர்கள் பெரிய அளவுக்கு குறிப்பிட்டது போல தெரியவில்லை. தாகூர் எழுதியிருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.

  மண்குதிரை அவர்கள் //இதைக் கட்டுவதற்கு எத்தனை தொழிலாளிகள் தங்கள் வேர்வையையும், உதிரத்தையும் சிந்தியிருப்பார்கள் // என்று கேட்டிருப்பதும்,
  ராம்ஜி அவர்கள் //ஆமாம் ஷாஜகான் செலவு செய்தது தன சொந்த பணத்தையா அல்லது மக்களின் வரிப் பணமா// எனச் சொல்லியிருப்பதும் முக்கியமான விஷயங்கள். கட்டிடத்தின் அழகில் ரசிக்கும் நாம் அதே நேரம் அதன்பின்னால் இருக்கும் வலியையும் உணர வேண்டும்.
  ’சிந்திக்க விரும்பும் சிலருக்காக்’ ஒருவேளை இதிலிருந்து மாறுபடலாம். அவர் குறிப்பிட்ட //பாரதி என்னும் மனிதன் என்றுமே ஒரு புதிராகத்தான் இருப்பான். ‘ஏன் தாஜமகாலைப்பற்றி எழுதவில்லை?’ என்பது அப்புதிர்களுள் ஒன்று.// வரிகள் அருமையானவை.

  மீண்டும் அனைவருக்கும் நன்றி நண்பர்களே...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!