முதல்வர் வருகிறார் என போக்குவரத்தையே நிறுத்தி வைக்கிறது காவல்துறை. வாக்கி டாக்கிகளின் சத்தம் மட்டுமே கேட்கும்படியாய் வாகனங்களின் இரைச்சல் அடங்கிப் போகிறது. சகல திசைகளிலும், கொளுத்தும் வெயிலில் தத்தம் அவசரங்களோடு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். அறியாமல் முன்சென்ற ஆட்டோக்காரனை இழுத்துப் போட்டு அடிக்கிறார்கள் இரண்டு காவலர்கள்.
வீட்டை விட்டு நான் வெளியே செல்லும் ஒவ்வொருமுறையும் இந்த நாய் ஓடிவந்து வாசலருகே வந்து நிற்கிறது. தெருவில் போகிற வருகிறவர்களை கோரப்பல் காட்டி குரைக்கிறது. விசுவாச மிகுதியால், சமயங்களில் விரட்டவும் செய்கிறது. அந்த வீட்டுக்காரனைத் தெருவே சபிக்கிறது.
இப்போ ... இந்த எடத்துல யார நாயின்னு சொல்ல வர்றீங்க....!!!
ReplyDelete:-) super!
ReplyDeleteஇன்னும் விரிவாக நாய் எப்படிப் பாய்ந்து வந்து முதல்வரை வரவேற்றது என்று எழுதி இருக்கலாமோ!
ஹாஹ்ஹாஹா! செம பகடி !
ReplyDeleteஎஜமானர்கள் எல்லாம் 'காமராஜர்' ஆக இருந்தால் தானே? நாயை நொந்து என்ன பிரயோஜனம் ?
ReplyDeleteகலக்கல்!
ReplyDeleteஎஜமானர்களா அல்ல அல்ல, அவர்களுக்கு குறுநில மன்னர்கள் என்று நினைப்பு...... தெரிந்தும் தெரியாததை போல கண்ணை மூடி கொண்டு போய்கொண்டிருகிறார்கள் தங்கள் வசதிக்காக.....
லவ்டேல் மேடி!
ReplyDeleteமன்னிக்கவும். நாயை மட்டும்தான் நாயென்று சொல்லியிருக்கிறேன்.
தீபா!
விரிவாக எழுதலாம். ஆனால் அடர்த்தியாய் இருக்காது.
ச.முத்துவேல்!
ரசனைக்கு நன்றி.
அகோரி!
நாயை நான் நொந்துகொள்ளவில்லை.
RR!
உண்மைதான் நீங்கள் சொல்வது....
LOL!
ReplyDeleteரசித்தேன்!
நாய்களும் அறியும் கடமை..., கண்ணியம்....
ReplyDeleteசந்தனமுல்லை!
ReplyDeleteஇலக்கியா!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.