வெறும் பசி

ஜன்னலில் வலைக்கம்பி அடித்தாகி விட்டது.
இருட்டியதும் கதவுகளை பூட்டுவதும் வழக்கமானது.
பூச்சிகள் தொந்தரவு இல்லாமல் மனிதர்கள் வீட்டிற்குள் நடமாடினார்கள்.
டியூப் லைட்டின் மேலே ஒரே இடத்தில் பல்லிகள் இரண்டு நாக்குகளை உள்ளிழுத்துக்கொண்டு மணிக்கணக்காய் வெற்றுச்சுவற்றில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.

நெருக்கமானவர்களின் திருமணத்திற்கு தொலைதூரம் அவர்கள் போய்விட்டார்கள்.
வீடு இரண்டு நாளாய் பூட்டியேக் கிடக்கிறது.
விடியற்காலைகளில் காகம் ஒன்று வீட்டுச் சுவற்றின் இடது மூலையில் வெற்றிடம் கண்டு நெடுநேரமாய் கரைந்து கொண்டே இருக்கிறது.

*

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. விடிபல்பாவது போட்டு போயிருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. உள் அர்த்தம் இன்னும் பிடிபடவில்லை. பிண்ணூட்டங்களை பார்த்து விட்டு மீண்டும் ஒருதடவை படிக்கனும்.

    பதிலளிநீக்கு
  3. என்ன இப்படி ஆரம்பிச்சுட்டீங்க ரெண்டு பேரும்(காம்ஸ்)

    பதிலளிநீக்கு
  4. இன்னும் சரியா பிடிபடலீங்களே. இன்னுமொருதடவ படிச்சுட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  5. கவிதை மனதிற்குள் எழுப்பிய சித்திரமும் அதன் தாக்கமும் அருமை. நேர்த்தியாக எடிட் செய்யப்பட்ட ஒரு குறும்படக் கவிதை போல் காட்சிகள் மனதிற்குள் விரிகிறது. கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. பல்லிகள் பசியால் இறந்து விட்டன என்று புரிகிறது. உள் அர்த்தம் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. அது சரி பெரும்தலைங்களுக்கே புரியலை நமக்கெங்க!!
    :)

    பதிலளிநீக்கு
  8. //
    டியூப் லைட்டின் மேலே ஒரே இடத்தில் பல்லிகள் இரண்டு நாக்குகளை உள்ளிழுத்துக்கொண்டு மணிக்கணக்காய் வெற்றுச்சுவற்றில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.

    //

    நல்லா இருக்குங்க..

    பதிலளிநீக்கு
  9. இருப்பின் சூழலை உணர்ந்து விவரித்திருக்கிறீர்கள். இதே சூழ்நிலை நேற்று எனக்கு ஏற்பட்டது.... வீட்டில் உள்ளவர்களும் திருமணத்திற்குத்தான் போயிருந்தார்கள்!!! :)

    பதிலளிநீக்கு
  10. தோழர் மாதவராஜ்,
    சொற்சித்திரம் அருமை,
    வரிகளை வேறு மாதிரியாக ஒடித்து அமைத்திருந்தால் எல்லோருக்கும் புரிதல் சிக்கல் இருந்திருக்காது என நினைக்கிறேன்.

    =அகநாழிகை=
    பொன்.வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  11. \ச.தமிழ்ச்செல்வன் said...
    என்ன இப்படி ஆரம்பிச்சுட்டீங்க ரெண்டு பேரும்(காம்ஸ்)

    அடர் கருப்பு -il
    ச.தமிழ்ச்செல்வன் said...
    சரி.அதனாலே?\
    I was laughing for hours when reading these comments. athilum "athanale?" nakkalo nakkal.

    பதிலளிநீக்கு
  12. வால்பையன்!
    விடிபல்பா.... எங்கு போடணும்?


    ஆ.முத்துராமலிங்கம்!
    உங்களுக்குமா!


    ச.தமிழ்ச்செல்வன்!
    என்ன ஆச்சு உங்களுக்கு... இப்படி ஆரம்பிச்சுட்டீங்க?

    ila!
    படிச்சுட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  13. யாத்ரா!
    புரிந்து கொண்டதற்கு நன்றி.


    தீபா!
    பல்லிகள் இறக்கவில்லை.பசியோடு இருக்கின்றன. காகமும் அப்படித்தான். இப்போது புரிகிறதா?


    மங்களூர் சிவா!
    நான் தெளிவாகச் சொல்லவில்லையோ?


    அதுசரி!
    பகிர்வுக்கும், ரசிப்பிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஆதவா!
    சரியாக புரிந்து கொண்டதற்கு நன்றி.


    அகநாழிகை!
    ம்... இருக்கலாம்.


    அனானி!
    அந்த ‘அதனால...?’ அவரிடம் வந்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். அந்த நக்கல் ரசிக்கும்படியாய் இல்லை.

    பதிலளிநீக்கு
  15. யாத்ராவின் பிண்ணூட்டத்தை படித்ததும் புரிந்துவிட்டது. (காட்சிகளின் படிமம் சூழலை மனதில் படர்த்தின்னாலும் மனம் வேறு ஒரு தளத்தில் பயணித்ததினால் குளப்பம்)
    ஆதவா இன்னும் அழகாக புரிந்து கொண்டார். கவிதையை புரிந்து கொள்வதில் கவிதைக்கு சிக்கல் ஏதுமில்லை அது ஏற்படுத்தும் பிம்பங்களே அதற்கான முழுமை.

    அப்புறம்..
    |'உங்க'ளுக்குமா!|

    நான் ரொம்ப சிறியவன்தாங்க.

    பதிலளிநீக்கு
  16. ஆ.முத்துராமலிங்கம்!
    //கவிதையை புரிந்து கொள்வதில் கவிதைக்கு சிக்கல் ஏதுமில்லை அது ஏற்படுத்தும் பிம்பங்களே அதற்கான முழுமை.//
    அருமை.
    இப்படிச் சொல்லிவிட்டு நான் சிறியவன் தான் என்றால் எப்படிங்க?

    பதிலளிநீக்கு
  17. \\அனானி!
    அந்த ‘அதனால...?’ அவரிடம் வந்திருக்கக் கூடாது என நினைக்கிறேன். அந்த நக்கல் ரசிக்கும்படியாய் இல்லை.\\
    உண்மைதான்.
    கவிதை எனக்கு புரியாததாலும், "அதனால.." அதை ஒத்தும், உரைத்துமிசைத்துவிட்டதால் ரசித்துவிட்டேன். யோசித்து பார்த்தால் புண்படுத்துகிற விஷயம்தான். என் கவிதையை வாசிப்பவர் "ம்.." என்கிற ஒற்றை வார்த்தையில் அங்கீகரித்தாலே சுருங்கிவிடும் என் மனது. இது போன்ற எதிர்வினையை எதிர்கொள்ளும் முதிர்ச்சி கூட என்னிடம் கிடையாது. கவிதை புரியாதது என் இயலாமையாய் கூட இருக்கலாம். சரி செய்துகொள்ள முயர்ச்சிக்கிறேன். மற்றபடி என் செயலுக்கான வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அனானி!
    ஐயோ... இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!