வெளியே
சன் மியூசிக்கில்
சிம்ரன் கைகளைத் தூக்கியபடி
ஆடிக்கொண்டு இருக்க
அந்த வார குமுதத்தின் அட்டையில்
ஸ்ரேயா ஸ்லிவ்லெஸ்ஸில்
சிரித்துக்கொண்டு இருக்க
உள்ளே
முதலிரவில் அவன்
மோசம் போனான்
ஐந்து வருடம் காதலித்தவளுக்கு
அக்குளில் முடிபார்த்து
அப்படி இருக்கவே முடியாதென்பதாய்
அருவருப்படைந்தான்
கற்பனைகளெல்லாம் சிதறி
கலைந்து போனான்
நாகரீகமானவன் அவன்
நாலும் தெரிந்தவன் அவன்.
சினிமாப் பித்தம்
June 11, 2009
24
:-o)
ReplyDeleteஅட்டகாசம் ஐயா... ரசித்து ரசித்து 3 தடவை படித்தேன்...
ReplyDeleteஆஹா! கவிதைச் சாடல்
ReplyDeleteதற்போதைய இளைஞர்களின் மனப்போதையை காட்டுகின்றதே!!
(நானெல்லாம் அப்படி இல்லப்பா)
இது எனக்கொன்றை நியாவகப் படுத்துகின்றது என் கடை நண்பர் ஒருவருக்கு ரொம்ப நாட்கள் பென் பார்த்தார்கள் (அவர் வீட்டில்) நண்பர்
மேஜை ட்ராயரில் ஒரு நடிகையின் படத்தை வைத்துக் கொண்டு பார்த்து வந்ததை நாங்களெல்லாம் கேலி செய்தோம்!!
கவிதை அருமை , கலக்கிடிங்க.
ReplyDeleteயதார்த்தம் எப்ப்டோடுமே கசக்கத்தானே செய்யும் கற்பனைதான் என்றும் இனிப்பானது.
குப்பன்_யாஹூ
அக்குளுக்கே இப்படியா!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்
இன்னும் எம்புட்டு மிச்சம் இருக்கு!
அருமை - நையாண்டியை ரசித்தேன் ...
ReplyDeleteசாடல் கொண்ட அருமை பதிவு.
ReplyDeleteபித்தம் தெளியாது.
இந்த கவிதையில் பொருட்குற்றம் உள்ளது,
ReplyDeleteவாலிபடம் பார்க்கச் சொல்லுங்கள்
அதில் நிலவைக் கொண்டுவா.. பாடலைப் பார்க்கச் சொல்லுங்கள்
பிறகு மீண்டும் நடத்தச் சொல்லுங்கள்
அட்டகாசம். நச்சென்றிருக்கிறது
ReplyDeleteகுப்பன்_யாஹூ said...
ReplyDeleteகவிதை அருமை , கலக்கிடிங்க.
யதார்த்தம் எப்ப்டோடுமே கசக்கத்தானே செய்யும் கற்பனைதான் என்றும் இனிப்பானது.
குப்பன்_யாஹூ
vazhi mozhikiren
whats this....
ReplyDeleteits your article...
no chance.......
பழமைபேசி!
ReplyDeleteதமிழர்ஸ்!
மணிப்பாக்கம்!
முத்துராமலிங்கம்!
குப்பன் யாஹூ!
வால்பையன்!
நந்தா!
சந்தனமுல்லை!
வண்ணத்துப் பூச்சியார்!
சுரேஷ்!
முரளிக்கண்ணன்!
பாலா!
இலக்கியா!
அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
எவ்வளவு பிரக்ஞைபூர்வமாக இருந்தாலும், சினிமா ஏற்படுத்தும் பிம்பங்கள் நம்மையறியாமல் நமக்குள் நிலைகொண்டு விடுகின்றன. அவைகளே உண்மையெனும் தோற்றத்தை உருவாக்கும் வலிமை கொண்டவையாக இருக்கின்றன. அதைத்தான் குறியீடாக சொல்ல முயற்சித்து இருந்தேன். உணர்ந்து, ரசித்த உள்ளங்களுக்கு நன்றி.
இந்த மாதிரி கவிதையெல்லாம் ஆண் வர்க்கத்துக்குத் தான், பொம்பள ப்ளாகரைக் கவராது சாமி!
ReplyDeleteசுமஜ்லா!
ReplyDeleteவருகைக்கு நன்றி.
இது ஆண்களுக்குள் உருவேற்றப்பட்டு இருக்கும் பிம்பங்களை உடைப்பதற்காகத்தான் எழுதப்பட்டது. கூச்ச நாச்சமில்லாமல் சில விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைக்கும்போதுதான் துருப்பிடித்திருக்கும் பொதுப்புத்திக்கு உறைக்கும் என நினைக்கிறேன்.
//நாகரீகமானவன் அவன்
ReplyDeleteநாலும் தெரிந்தவன் அவன்.//
நிச்சயமாய் நாகரீகமானவன் தான்.
ஐந்து வருடம் காதலித்தப் பெண்ணை முதலிரவில் தான் முழுதாய் பார்தான் என்பதிலேயே தெரிகிறது, நாகரீகமானவன் தானென்று.
யோவ் அப்பாவி,
ReplyDeleteஉன்னை போய் இந்த உலகம் அப்பாவின்னு நம்புதேயா!
நன்றிக்கு நன்றி!
ReplyDeleteஎன் ஈ முகவரி: a.muthuramalingam5@gmail.com
மாதவராஜ் வெகு நிதர்சனமான கருத்துக்கள்.
ReplyDelete//இது ஆண்களுக்குள் உருவேற்றப்பட்டு இருக்கும் பிம்பங்களை உடைப்பதற்காகத்தான் எழுதப்பட்டது. கூச்ச நாச்சமில்லாமல் சில விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைக்கும்போதுதான் துருப்பிடித்திருக்கும் பொதுப்புத்திக்கு உறைக்கும் என நினைக்கிறேன்.//
இதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
அப்பாவி முரு..!
ReplyDeleteநன்றாக யோசிக்கிறீர்கள்...
வால்பையன்!
ஏன் இந்தக் கொலைவெறி....?
முத்துராமலிங்கம்!
மீண்டும் நன்றி. மெயிலில் தொடர்பு கொள்கிறேன்.
நந்தா!
முதலில் உங்கள் வருகைக்கு சந்தோஷம். ரொம்ப நாள் தங்கள் வலைப்பக்கத்தில் பதிவு எழுதவில்லையே....
அப்புறம்... புரிதலுக்கும், பகிர்வுக்கும் நன்றி.
/
ReplyDeleteநாகரீகமானவன் அவன்
நாலும் தெரிந்தவன் அவன்.
/
:))
@வால்
கலக்கறய்ய்யா
எளிய சொற்களில் ததும்பும் எள்ளல் கவிதையின் கனம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
//நாகரீகமானவன் அவன்
ReplyDeleteநாலும் தெரிந்தவன் அவன் //
மிக மிக அருமைங்க
உருவகித்துக் கொள்ளும் பிம்பங்களும் அதன் கலைதலும்,,,,, கவிதை இதை அழகாய் சொல்லியிருக்கிறது.அருமை.
ReplyDeleteமங்களூர் சிவா
ReplyDeleteநேசமித்ரன்!
இராவணன்!
யாத்ரா!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.