நடைபாதி ஓரங்களில்
பிளாஸ்டிக் மரங்களை பயிரிடுவோம்
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள்
பிளாஸ்டிக் கதிர்களில்
பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்
பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடிகளில்
பிளாஸ்டிக் பாலருந்துவோம்.
தெலுங்குக் கவிஞர் நக்னமுனி எழுதிய கவிதை இது. ஏற்கனவே தீராத பக்கங்களில் அவரது கவிதைகள் சில குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சுற்றுப்புறச் சூழல் சீரழிவதை இந்தக் கவிதை சொல்கிறது. இந்திய விவசாயம் புறக்கணிக்கப்பட்டு உணவுப்பயிர்களுக்குப் பதில் வியாபாரப்பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை நையாண்டி செய்கிறது. ஆனால் 'பிளாஸ்டிக் பால்' என்னும் பதம் யோசிக்க வைக்கிறது. ஞானப்பால் என்ற வார்த்தையைப் போன்று இந்தப் பாலுக்கு இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அவசரயுகத்தில் மிக ஆழமான அர்த்தங்கள் இருப்பதாகவே படுகிறது. மனிதர்கள் நிஜமாகவே பிளாஸ்டிக் பாலருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
மிக்ஸி வந்த பிறகு அம்மிக்கொத்துகிறவர்கள் குரல் தெருவில் ஒலிப்பதேயில்லை. மின்சார விளக்கு வந்தபிறகு மண்ணெண்னெய் விளக்கு கரண்ட் போனால்தான். அதற்கும் கூட இருக்கவே இருக்கிறது மெழுகுவர்த்தி. இல்லையென்றால் இப்போது எமர்ஜென்சி விளக்கு. ரேடியோவில் சிலோன் பாட்டுக்களும், விவிதபாரதி தேன்கிண்ணமும் கேட்ட காலமெல்லாம் போய்ஈ இப்போது எத்தனை சேனல்களோடு தொலைக் காட்சிகள். கடிதம் எழுதி...அங்கிருந்து வரும் கடிதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. டெலிபோன் வசதி வந்திருக்கிறது. அதிலும் நினைத்தவுடன் பேசிக்கொள்ள செல்போன்கள். அது தாண்டி ஈமெயில்கள். எஸ்.எம்.எஸ்கள். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் எல்லாவற்றையும் மேலும் மேலும் எளிதாகவும், வசதியாகவும் ஆக்கிக்கொண்டே இருக்கின்றன. பழையகாலத்தின் வசீகரங்கள் இந்த அவசரகாலத்தில் தொலைந்திருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்மூலம் நாம் நம்மை புதுப்பித்துக் கொள்கிறோம். இவைகளைப் புறக்கணிக்கிற போது காலம் நம்மை புறக்கணித்துவிட்டு அதுபாட்டுக்கு சென்றுகொண்டேயிருக்கும். எல்லாம் சரிதான். ஆனால் பிளாஸ்டிக்கை இப்படியொரு தொழில்நுட்ப விஷயத்தோடு பார்க்க முடியவில்லை.
அப்போதெல்லாம் இங்க் பேனாதான். காலேஜ் படிக்கும்போது கூட ஒழுங்கா இங்க் ஊற்றத் தெரியாமல் தரையில், கைகளில் என்று ஊற்றிக்கொண்டு விழித்த காலங்கள் எல்லோருக்கும் நேர்ந்திருக்கும். சிலநேரங்களில் நிப்பு வளைந்து கொள்ளும். அப்புறம் தரையில் தேய்த்து அதை சரி பண்ணவேண்டும். முக்கியமான கட்டத்தில் மை வரவே வராது. இல்லையென்றால் திடுமென குபுக்கென்று பாயும். அவ்வப்போது வெந்நீரில் சுத்தமாக கழுவி, துடைத்து பராமரிக்க வேண்டும். சட்டைப்பைகள், விரல்கள் நீலம் பாரித்துப் போகும். இப்போது அதெல்லாம் இல்லை. ப்ளஸ் டூ படிக்கும் மகள் "அப்பா..கடைக்குப் போனால் ஒரு அட்-ஜெல் வாங்கிட்டு வாங்க.." என மிகச்சாதாரணமாக சொல்கிறாள். "போன வாரந்தானே.. வாங்கிக்கொடுத்தேன்...அதுக்குள்ள இன்னொரு பேனாவா?" என்று கேட்டால் "இங்க் முடியப்போது... தூக்கி எறிய வேண்டியதுதான்.." என குனிந்து பாடம் எழுதிக்கொண்டே பதில் தருகிறாள்.
இதுதான் உறுத்துகிறது. ஒவ்வொரு விஞ்ஞான மாற்றமும் தேவைகளிலிருந்தும், இன்றைய முதலாளித்துவ போட்டிகளிலிருந்தும் அவதாரமெடுத்துக் கொண்டே இருக்கின்றன. அவைகள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் சில குறிப்பிடத்தக்க விளைவுகளை வெளிப்படையாக ஏற்படுத்துகின்றன. ஆனால் கலாச்சார ரீதியாக ஏற்படுத்தும் விளைவுகள் பெரும் செல்வாக்கை சமூகத்தில் அமைதியாக..அதிவேகமாக பரப்புகின்றன. வாழ்வின் சகல பரிமாணங்களிலும் அவை எதிரொலிக்கின்றன. இன்னதென்று அறியவிடாமல், பழக்கவழக்கங்களில் கரைத்து நம் அறிவை அதன் வசமாக்கிவிடுகின்றன. எனவேதான் "தூக்கி எறிய வேண்டியதுதான்" என்கிற பதிலை எளிதாக கடந்து போக முடியவில்லை.
இந்த வார்த்தைகளுக்கு பொருத்தமான குறியீடாக பிளாஸ்டிக் இருக்கிறது. பால் பாயிண்ட் பேனாவை தூக்கி எறிந்துவிட்டு இன்னொரு பேனாவை வாங்குவதில் பிரச்சினை இல்லை. இந்த மனோபாவமே மனித சுபாவமாக மாறி வருவதுதான் அதிர்ச்சியாய் இருக்கிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கம இதில் முற்றிலும் மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சிக்கலையோ பிரச்சினையையோ சமாளித்து அதை சரிசெய்கிற தீவிரம் குறைந்துவிடுகிறது. ஒன்றைத் தூக்கி எறிந்துவிட்டு மிக வேகமாக வேறொரு மாற்றைத் தேடும் பலகீனம் நமக்குள் ஊறிவிட்டிருக்கிறது. போராடுகிற உயிரின் துடிப்பு மெல்ல மெல்ல மழுங்கடிக்கப்படுகிறது. எதையும் எளிதாக பெறுவதற்கு வெறி ஏற்படுகிறது. லஞ்சம் வாங்குவது...லாட்டரிச் சீட்டு வாங்குவது.. எல்லாமே இப்படி ஒரு மனோபாவத்தில் உருவாவதுதான். கடன்கள், வாழ்வின் தேவைகளுக்கு வருமானம் போதாமல் இருப்பது எல்லாவற்றையும் ஒரே நாளில் தீர்த்துவிட வேண்டுமென்கிற வேகம். தன் ஊதியத்தை உயர்த்துவதற்கு போராட வேண்டும் என்கிற நியாயமான வழிகளை தேர்ந்தெடுக்க தயக்கம். உடனடியாக முடியாது...சிரமப்படவேண்டுமே. இது ஒரு பக்கம்.
இன்னொன்று இன்னும் கொடுமையானது. உபயோகம் இல்லையென்றால் அவை எவ்வளவுதான் உன்னதம் என்றாலும் தூக்கி எறிய வேண்டியதுதான் என்கிற முடிவுக்கு வருவது. மனித உறவுகளில்கூட இது அதிகமாக பிரதிபலிக்க ஆரம்பித்துவிட்டது. பெற்ற தாய் தந்தையரே பெரும் சுமையாக கருதப்படுகிறார்கள. காதல், நட்பு எல்லாமே இந்த கோணத்தில் பார்க்கப்படுகிறது. முதலாளித்துவ அமைப்பு மனித சமூகத்துக்கு அளித்த மிகக்குரூரமான நோய் இது.
ஒருவருக்கு ஒருவர் உதவுவது என்பதுதான் வாழ்வின் தர்மமாகும். இதை மாற்றி ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்துவது அல்லது உறிஞ்சுவது என்பது இங்கே வாழ்க்கையின் தர்மமாகிவிட்டது. உபயோகப்படுத்துவது என்று வந்ததால்தான் தூக்கி எறிவது என்கிற அடுத்த சூதும் இங்கே அரங்கேறிவிட்டது.
வெளியே சென்று மகளுக்கு ‘அட்-ஜெல்' பேனா வாங்கிவரப் புறப்பட்டபோது போது தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகளும், பாட்டில்களும், டம்ளர்களும் தெருவெங்கும், நகரெங்கும் கிடந்தன. காற்றில் உருண்டு உருண்டு அவை அலைந்து கொண்டிருந்தன. மனிதர்கள் அவைகளை கவனிக்கவேயில்லை. அவர்களும் அலைந்து கொண்டிருந்தனர்.
*
அற்புதமான பதிவு...
ReplyDeleteசமகாலத்திற்கு தேவையான பதிவு.....
பகிர்விற்கு நன்றி...
என்னுடைய வலைப்பதிவுக்கு
வருகை தாருங்கள்...
எதாவது ஒரு ரெண்டு கருத்துன்னா வழி மொழியலாம்.
ReplyDeleteமுழு பதிவையும் வழி மொழிகிறேன்.
நல்ல அலசல்.
ReplyDelete/*ஆனால் கலாச்சார ரீதியாக ஏற்படுத்தும் விளைவுகள் பெரும் செல்வாக்கை சமூகத்தில் அமைதியாக..அதிவேகமாக பரப்புகின்றன. வாழ்வின் சகல பரிமாணங்களிலும் அவை எதிரொலிக்கின்றன. இன்னதென்று அறியவிடாமல், பழக்கவழக்கங்களில் கரைத்து நம் அறிவை அதன் வசமாக்கிவிடுகின்றன. எனவேதான் "தூக்கி எறிய வேண்டியதுதான்" என்கிற பதிலை எளிதாக கடந்து போக முடியவில்லை. */
உண்மை.
இந்த மனோபாவமே மனித சுபாவமாக மாறி வருவதுதான் அதிர்ச்சியாய் இருக்கிறது..///
ReplyDeleteஆபத்தானதும் கூட.
அருமையான பதிவு.
பகிர்விற்கு நன்றி.
ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய பதிவு. பிளாஸ்டிக் கேரிபேக் போன்ற எமனை அவரவர் தம்மால் முடிந்தவரை குறைந்த அளவு உபயோகிக்க வேண்டும்.
ReplyDeleteமிக முக்கியமான பதிவு.
ReplyDeleteநன்றி.
இன்றைய காலத்திற்கு அவசியமான பதிவு..
ReplyDeleteஅன்பு மாதவ்
ReplyDeleteபிளாஸ்டிக் பற்றி நிறைய எழுதப்பட்டு விட்டது. ஆனால் எழுதிக் கொண்டே இருக்கவேண்டிய அளவு பிளாஸ்டிக் குவியலுக்குள் நடந்து கொண்டிருக்கிறது அன்றாட வாழ்க்கை.
பயன்படுத்தித் தூர எறிந்துவிடுவதில் உறவுகளும் அடக்கம் என்பதை வேதனையோடு சொல்லியிருக்கிறீர்கள். முதலாளித்துவ உலகில் காசு எல்லா உறவுகளையும் žரழிப்பதை மார்க்ஸ் எவ்வளவோ எச்சரிக்கைப்படுத்தி விட்டே சென்றிருக்கிறார். அது எப்படி காதலர்களிடமிருந்து காதலையும், கலைஞர்களிடமிருந்து கலையையும் பறிக்கிறது என்றார் அவர். தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசப் பரப்பின்மீது அது எப்படி ஈவிரக்கமின்றி நடந்துபோகிறது என்றும் அடையாளப்படுத்தி இருந்தார்.
மறு சுழற்சிதான் இயற்கையின் தொழில் நுட்பம். தன்னையே தின்று தன்னையே மீண்டும் பிரசவித்துக் கொண்டு தன்னைத் தானே கொண்டாடிக் கொள்கிறது இயற்கை. அதன் மடியில் அமிலத்தை ஊற்றுவது லாபநோக்கத்திலான உற்பத்தி முறை. இயற்கையின் கவிதை மண் என்றால், அதன் மோசமான செயற்கை பிரதிபலிப்பு பிளாஸ்டிக்.
மனித நேயத்தைச் சிற்பமாக்கித் தரக் கேட்டால் அது கூட மலிவான ஒரு பிளாஸ்டிக் மோல்டிங்கில்தான் கிடைக்கும் போலிருக்கிறது, மாதவ்.....
பின்குறிப்பு: அற்புதமான உங்கள் சொல்லோவியத்தின் நுழைவாயிலில் இருக்கும் நக்னமுனியோடு அலாக்காக பிரதியெடுத்து Bank Workers Unity பத்திரிகைக்குக் கொடுத்திருக்கிறேன் மாதவ் ஜூலை இதழில் பதிவு செய்ய, உங்கள் அனுமதியோடு!
எஸ் வி வேணுகோபாலன்
//பாயிண்ட் பேனாவை தூக்கி எறிந்துவிட்டு இன்னொரு பேனாவை வாங்குவதில் பிரச்சினை இல்லை. இந்த மனோபாவமே மனித சுபாவமாக மாறி வருவதுதான் அதிர்ச்சியாய் இருக்கிறது//
ReplyDeleteஉண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
என்னுடைய அப்பா ஒரு சைக்கிளை முப்பது வருடமாக வத்திருந்தார். ஆனால் நான்...
----------------
ReplyDeleteஒருவருக்கு ஒருவர் உதவுவது என்பதுதான் வாழ்வின் தர்மமாகும். இதை மாற்றி
ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்துவது அல்லது உறிஞ்சுவது என்பது இங்கே
வாழ்க்கையின் தர்மமாகிவிட்டது. உபயோகப்படுத்துவது என்று வந்ததால்தான்
தூக்கி எறிவது என்கிற அடுத்த சூதும் இங்கே அரங்கேறிவிட்டது.
--------------
உங்கள் இடுகைகளை நிறைய வாசிக்கிறேன். முதன் முறையாக மறுமொழி இடுகிறேன். அந்த அளவுக்கு இந்த இடுகை என்னை ஈர்த்தது. நன்றி
அன்புடன் புகாரி
"வெளியே சென்று மகளுக்கு ‘அட்-ஜெல்' பேனா வாங்கிவரப் புறப்பட்டபோது போது தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகளும், பாட்டில்களும், டம்ளர்களும் தெருவெங்கும், நகரெங்கும் கிடந்தன. காற்றில் உருண்டு உருண்டு அவை அலைந்து கொண்டிருந்தன. மனிதர்கள் அவைகளை கவனிக்கவேயில்லை. அவர்களும் அலைந்து கொண்டிருந்தனர்"
ReplyDeleteவணக்கம் ஐயா, இந்த வரிகள் என்னவோ செய்கிறது. இந்த வரிகளை படிக்கும்போது நான் ரொம்பவே disturb ஆகிவிட்டேன்.
very good article.
ReplyDeleteஉபயோகமான பதிவு!
ReplyDeleteதேவையான பதிவுதான்.
ReplyDeleteவிழிப்புணர்வு இருந்தால் மட்டும் போதாது.நம்மளவில் அதை செயல்படுத்தவும் நாம் என்று தயாராகிரோமோ அன்று நாம் ஏதோ ஒரு வகையில் பூமித்தாய்க்கு ஒரு வகையில் நன்றி செலுத்துகிறோம்.
அற்புதமான பதிவு...
ReplyDeleteதங்கள் சேவை மென்மேலும் தொடர கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி!
Very true and thought provoking article, as usual.
ReplyDeleteBut it is only people who care keep caring always, those who dont , do not!. Even our neighbourhood is not kept out of plastic. How to make this awareness spread?
I found one blog here which gives some more thoughts on this topic.
May be you have seen already, just in case you haven't..
http://www.thebetterindia.com/772/less-plastic-more-life/
கதிர்!
ReplyDeleteநன்றி. உங்கள் வலைப்பக்கம் வந்தேன். கருத்தையும் தெரிவித்து இருக்கிறேன்.
தராசு!
நன்றி.
அமுதா!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
வண்ணத்துப்பூச்சியார்!
மிக்க நன்றி.
மங்களூர் சிவா!
நன்றிங்க.
தீபா!
ReplyDeleteநன்றி.
தீப்பெட்டி!
நன்றி.
எஸ்.வி.வி!
//மறு சுழற்சிதான் இயற்கையின் தொழில் நுட்பம். தன்னையே தின்று தன்னையே மீண்டும் பிரசவித்துக் கொண்டு தன்னைத் தானே கொண்டாடிக் கொள்கிறது இயற்கை. அதன் மடியில் அமிலத்தை ஊற்றுவது லாபநோக்கத்திலான உற்பத்தி முறை.//
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அப்பாவி முரு!
//என்னுடைய அப்பா ஒரு சைக்கிளை முப்பது வருடமாக வத்திருந்தார். ஆனால் நான்..//
இது உங்கள் தவறு இல்லை. அப்போது குவாலிட்டிக்கு மதிப்பு. இப்போது வசதி இருக்கும் ஆயுள் இருக்காது. எந்தப் பொருளையும் தாங்கள் மிக விரைவில் மீண்டும் வாங்க வேண்டும். அப்படியொரு உற்பத்தி ரகசியம் இருக்கிறது.
அன்புடன் புகாரி!
ReplyDeleteமிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.... தங்கள் வருகையும், பகிர்வும்.
முரளிகுமார்!
நுட்பமான மனிதராய் தாங்கள் இருக்கிறீர்கள்.
சாம்!
மிக்க நன்றி.
அன்புடன் அருணா!
ReplyDeleteவருஅகைக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.
பட்டாம்பூச்சி!
நீங்கள் சொல்வது உண்மை. இந்த உணர்வு அனைவருக்கும் வரவேண்டும்.
பிரவின்குமார்!
ரொம்ப நன்றி.
வெற்றிமகள்!
நன்றி. நிச்சயம் தாங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பதிவைப் படிப்பேன்.
அன்பின் மாதவ்,
ReplyDeleteபதிவு படித்தபின் என்ன சொல்வதென தெரியாமல் திகைத்து நின்றுவிட்டேன்.கண்கள் கலங்குகின்றன.ப்ளாஸ்டிக்கை நினைத்து மட்டுமல்ல. தொலைந்து போன, கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துகொண்டிருக்கிற மனிதநேயத்தையும், மனித உறவுகள் சிக்கலாகிக்கொண்டிருப்பதையும், உங்களின் பாசாங்கற்ற வார்த்தைகள் தெளிவாக முன்வைக்கின்றன.
அறிவியல் கண்டுபிடிப்புக்களால் கிடைக்க கூடிய மனித வாழ்வின் அத்தனை வசதி வாய்ப்புக்களையும் காசாக்கிக்கொள்ளும் உத்வேகத்துடன் முதலாளித்துவம் தன்னை எப்படி வேண்டுமானாலும் உருமாற்றிக்கொண்டு நாடுகளில், நகரங்களில்,கிராமங்களில், தெருக்களில், கடைசியாக மக்கள் மனங்களில் விஷ விருட்சமாக வளர்ந்து தன்னையறியாமலேயே மக்களை பலியிட வைத்துக்கொண்டிருக்கின்றன.
இதில் கலாச்சாரமோ அல்லது பாரம்பரிய பழக்கவழக்கங்களோ அல்லது இயற்கை சார்ந்து வாழ்ந்த பண்டைய வாழ்க்கை முறையோ எது குறித்தும் கவலைப்படாமல் புறந்தள்ளிவிட்டு,இப்போது இருக்கின்ற அத்தனை சுகங்களையும் வெகு வேகமாக அடைந்துவிடும் வண்ணம் முதலாளித்துவமே அத்தனை வசதிகளையும் செய்துகொடுத்து மனித மனங்களை நோய் பிடித்தாட்டும் வெறி கொண்ட மனநிலைக்கு மாற்றிவிட்டிருக்கின்றது.
காலம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரபோவது போல தெரியவில்லை.இப்போதை விடவும் மோசமான சூழ்நிலைக்கு நம்மை தயார்படுத்திக்கொள்வதை தவிர வேறு வழியிருப்பதாகவும் தோன்றவில்லை.
உறவுகள் கூட பிளாஸ்டிக் மயமாகித்தான் ஆகிப்போனது...
ReplyDeleteகும்க்கி!
ReplyDeleteமிக ஆழமாக கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பதிவுக்கு மேலும் அர்த்தங்களையும், அழுத்தத்தையும் தந்திருக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கடைசி வரிதான் நம்பிக்கையற்று ஒலிப்பதாக இருக்கிறது.
//இப்போதை விடவும் மோசமான சூழ்நிலைக்கு நம்மை தயார்படுத்திக்கொள்வதை தவிர வேறு வழியிருப்பதாகவும் தோன்றவில்லை.//
இவைகளுக்கு எதிராக சிந்திப்பதும், நாலு பேரிடம் பகிர்ந்து கொள்வதும் நிச்சயம் சில எதிர்வினைகளாற்ற உதவும். அதையாவது நாம் செய்வோம். ஒருநாள் நிச்சயம் தீப்பற்றும்.
கிருத்திகா!
ReplyDeleteதங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.