ஏழரைச் சனி


ஆட்டின் முலையைக் கடித்தது
வெறிநாய் ஒன்று
பால்மடுக்களில் இரத்தம் ஒழுக
பரிதாபமாய் “ம்மே... ம்மே”வென
கதறி மண்ணில் புரண்டது ஆடு
கனவின் காட்சியில்
உடலெல்லாம் வெட்டி
உதறி எழுந்தான் அவன்

அருகில் தானிருக்க
படுத்திருந்த அவன்மீது
விழுந்து அணைத்து
முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்
யாரோ ஒருத்தி
“என்னங்க... என்னங்க...
எழுந்திருங்க..எழுந்திருங்க”
அலறியவளின் நாக்கை
அறுத்தெறிந்தான் அவன்
அலறி எழுந்தாள் அவள்

“நமக்கு நேரமே சரியில்ல..
ஏழரைச்சனிப் பிடிச்சு ஆட்டுது”
உள்ளம் வேர்த்து
உடல் விறுவிறுத்த இருவரும்
தப்பும் உன்மத்தம் கொண்டு
ஒருவருக்குள் ஒருவராய்
மாறி மாறி
மறைந்து நினைவிழந்தனர்

நாயும் குரைத்தது
கோழியும் கூவியது 

Comments

8 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. என்ன இது? பயங்கரமா இருக்கு.
    :-(

    ReplyDelete
  2. பாதிதாங்க புரிஞ்சது

    ReplyDelete
  3. நனவிலி வழியே தீர்க்கமானதொரு அனுபவத்தை தருகிறது இக்கவிதை

    ReplyDelete
  4. அருமையான கவிதை, இக்கவிதையிலிருக்கும உணர்வுத் தளம் அருமை.

    ReplyDelete
  5. தீபா!
    வெங்கிராஜா!
    சதீஷ்கண்ணன்!
    மங்களூர் சிவா!
    நந்தா!
    குப்பன் யாஹூ!
    நேசமிதரன்!
    சந்தனமுல்லை!
    யாத்ரா!
    அனைவருக்கும் நன்றி.
    இந்த சமூகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் விதித்திருக்கும் இடத்தையும், உலகத்தையும் சித்தரிக்க முயற்சிக்கிறது. அவை ஆணுக்கும், பெண்ணுக்கும் தரும் பிரத்யேக வலிகளை, கனவுகளை குறியீடாய் சொல்கிறது. லௌகீக வாழ்க்கையில் எப்படி அவை கரைந்து நாட்கள் நகர்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    ReplyDelete

You can comment here