ஆட்டத்தின் முக்கியத் தருணம் வந்தது.
யானைகள் அங்குமிங்கும் நிற்க, குதிரையை நகர்த்திவிட்டு அவன் சொன்னான் “செக்”.
ராஜாவுக்கு இப்போது இரண்டே வழிகள்தான் இருந்தன.
ஒன்று தோல்வியை ஒப்புக் கொள்வது.
இன்னொன்று ஒரு அடி முன்னோ, பின்னோ நகர்ந்து வெட்டுப்பட்டுச் சாய்வது.
வெளியே இருந்து குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தன.
“குதிரையை முதலிலேயே கொண்டு போய் இழந்திருக்கக் கூடாது”
“அந்தக் காயை முன்னுக்கு நகர்த்தியதால்தான் இப்போது யானை இங்கு வந்து விட்டது”
“பக்கத்தில் சப்போர்ட்டுக்கு எதுவுமில்லாமல் இருந்திருக்கக் கூடாது”
“பார்.. பிஷப் தேவையில்லாமல் அங்கே போய் நிற்கிறது”
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்தான் இவன்.
வெட்டுப்பட்ட தன காய்களை பார்த்தான்.
ஆரம்பத்திலிருந்து இந்த விளையாட்டை தனக்குள் ஒடவிட்டு யோசித்தான்.
“ம்...” ஆடு என்றான் அவன்.
இவனோ இன்னொரு ராஜாவோடு
அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டு இருந்தான்.
அந்த ஆட்டம் இவ்வளவு வேகமாகவும், சீக்கிரமாகவும் முடிந்து விடாது.
*
வித்தியாசமான சிந்தனை சார் உங்களுக்கு!!!
பதிலளிநீக்குஆனால், பதிவு அர்த்தம் பொதிந்தது!!!
தோல்விக்கு பின் நாம் செய்யெவேண்டியது.
பதிலளிநீக்குஇன்றைய நிகழ்வுகளுக்கு பொருந்தும், பல அர்த்தங்கள் நிறைந்த பதிவு.. அருமை...
பதிலளிநீக்கு/ “ம்...” ஆடு என்றான் அவன்.
பதிலளிநீக்குஇவனோ இன்னொரு ராஜாவோடு
அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டு இருந்தான்.
அந்த ஆட்டம் இவ்வளவு வேகமாகவும், சீக்கிரமாகவும் முடிந்து விடாது. /
முழுவதுமே அசத்தல் தான். கடைசியில் மனதைத் தொட்டுவிட்டீர்கள்.
திரும்பத் திரும்ப வாசித்தேன். கண்கள் கலங்கின. உள்ளம் நெகிழ்ந்தது.
அன்புடன்
மதி
ரொம்ப அருமையா இருக்குங்க... இது ஒருவகையான படைப்பிலக்கியமா?? கதையா கவிதையா....
பதிலளிநீக்குராஜா சிந்தனை வித்தியாசமானது!!! உங்களது சிந்தனையைப் போன்றே
//அந்த ஆட்டம் இவ்வளவு வேகமாகவும், சீக்கிரமாகவும் முடிந்து விடாது//
பதிலளிநீக்குமிகவும் அருமை.
mmm
பதிலளிநீக்குpaawam antha raja.....
நரேஷ்!
பதிலளிநீக்குசைக்கோ!
செந்தில்வேலன்!
அனானி!
ஆதவா!
யாத்ரா!
luthfi!
அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
இன்னும் இந்த சொற்சித்திரம் சரியாகச் சொல்லப்படவில்லையென்பது என கருத்து.
ஆட்டத்தின் ராஜா உண்மையில் ராஜா இல்லை. பகடைக்காய்தான்.
மக்கள்தான் ஆடவேண்டும் என்னும் தொனி சரியாகச் சொல்லப்படவில்லை.
பழைய தவறுகளிலிருந்து, திருத்தி அடுத்த ஆட்டம் துவங்குகிறது என்பதும் அழுத்தமாக வெளிப்படவில்லை.
அச்சுக்கு வரும்போது சரி செய்ய வேண்டும்.
இருப்பினும் உள்ளார்ந்த அர்த்தம் உணர்ந்து, பாராட்டிய உள்ளங்களுக்கு என் நன்றிகள் மீண்டும்.