"இந்த அரண்மனையை தூரத்தில் நின்று பார்த்திருக்கிறோம். இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை”.
“ஆனாலும் செத்துப் போன மனிதனின் படுக்கையறையில் ஒரு புதுமணத்தம்பதி எப்படி சந்தோஷமாக முதலிரவைக் கொண்டாட முடியும்”
“இந்த மண்ணை நேசித்த மகத்தான மனிதரை கேவலப்படுத்துகிற காரியத்தை அவர்கள் செய்கிறார்கள்”
ஈராக்கில் எதிரும் புதிருமான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பாக்தாத்தில் இருந்து அறுபது கி.மீ தொலைவில் இருக்கும் சதாமின் அரண்மனை இனி சுற்றுலாத்தலமாகவும், 180 டாலர்கள் செலுத்தி அவரது படுக்கையறையில் ஒருநாள் தேனிலவை கொண்டாடலாம் எனவும் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டிலிருக்கும் ஈராக் அரசு அறிவித்துள்ளது. குண்டுவெடிப்புகளும், மனித உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் “நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, புதிதாய் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு..” என்று தண்டோரா அறையப்பட்டுள்ளது. சதாம் உசேன் வெளியேறிய பிறகு, அமெரிக்க இராணுவத்தினரால் வருடக்கணக்கில் சிதைக்கப்பட்ட அரண்மனையை புதுப்பித்து இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
என்ன வகையான மனநிலைகளிலிருந்து இதுபோன்ற யோசனைகள் பிறந்திருக்கும்! அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று சொல்லப்படுவதை நம்புவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் கூட விசித்திரமான மனநிலை தேவைப்படுகிறது.
அந்தப் படுக்கையறை புனிதமானது என்றோ, அல்லது காமும் காதலும் புனிதமற்றதாகவோ கருதிடத் தேவையில்லைதான். வஞ்சகமும், சூழ்ச்சிகளும் நிரம்பிய அறைகளுக்குள் அன்பும், காதலும் காற்றாய் உலா வரவேண்டும் என நாம் ஆசைப்பட வேண்டும்தான். காற்றாய் என்று சொல்வதற்கு இயல்பாய், உரிமையாய் என்று நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. விலைகொடுத்து, கதவுகளைத் தாளிட்டு, வாடகையிலா?
ஒரு காரியம், அதன் நோக்கத்தினாலேயே அறியப்படும், சிறப்புறும். ஈராக் அரசின் நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஈராக்கில் சதாமை விரும்புகிற மக்களும் சரி, விரும்பாத மக்களும் சரி, அந்த அறையில் வந்து தங்கிவிட மாட்டார்கள். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் இரவுகளைக் கழிக்கும் இடமாக மட்டுமே அந்த படுக்கையறை இருக்கும். அவர்கள் தம்பதிகள், ஜோடிகள், காதலர்கள் மற்றும் வேறு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
கொடுங்கோலனாக சித்தரிக்கப்படும் தேசத்தில்தான் சதாம், அமெரிக்காவை மூச்சிருக்கும் வரை எதிர்த்த மாவீரனாகவும் நினைக்கப்படுகிறார். அவரைத் தூக்கிலிட்ட பின்பும் அமெரிக்காவுக்கு அவர் மீது இருக்கும் வெறியும், பழிவாங்கும் வேகமும்தான் இந்த அறிவிப்பில் வெளிப்படுகின்றன. முற்றிலும் ஒன்றை அழித்தொழிக்கும் பாசிச தாகமே தேனிலவுகளை இப்படியாய் அழைக்கின்றன.
சின்னஞ்சிறு நாடான நேபாளம் சொல்லும் செய்தியை ஈராக்கும், உலகமும் நின்று கவனித்தாக வேண்டும். மக்களுக்கு எதிரான மன்னனை எதிர்க்க யாரும் அமெரிக்காவின் உதவியை நாடவில்லை ஜனநாயகத்தைக் கொண்டு வர அவர்களே போராடினார்கள். மன்னனை அரண்மனையிலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றினார்கள். இப்போது அரண்மனை மக்கள் வந்து பார்வையிட திறந்துவிடப்பட்டு இருக்கிறது. அது மக்களின் சொத்து, உழைப்பின் மகிமை என்பதை புரிந்து கொண்டவர்கள் அங்கு இருக்கிறார்கள்.
0000
ஈராக்கின் அறிவிப்பையொட்டி எனக்குத் தோன்றியதை இப்படி எழுதினேன். கவிதையா என்று தெரியாது.
அரண்மனைத் தேனிலவு
எல்லா நினைவுகளையும்,
அறை உறிஞ்சிக் கொண்டது.
அவனால் அவளைத் தொடமுடியவில்லை
அவளால் அவனைத் தொட முடியவில்லை
அவர்கள் தோற்றுப் போனார்கள்
பழிவாங்கும் மூர்க்கம் நிறைந்த
காலடி ஓசைகள் கேட்டு
படுக்கையின் அடியில் போய்
காமம் ஒளிந்து கொண்டது.
குண்டுகள் வெளியேறிய
துப்பாக்கியிலிருந்து
புகை கசிந்து கொண்டிருந்ததைப் போல
கண்களில் காதல் கொஞ்சமிருந்தது
தப்பித்து வெளியேற
திரைச்சீலை விலக்கிய வானில்
இரத்தம் சிந்திய நிலவு கிடந்தது.
*
///என்ன வகையான மனநிலைகளிலிருந்து இதுபோன்ற யோசனைகள் பிறந்திருக்கும்! அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று சொல்லப்படுவதை நம்புவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் கூட விசித்திரமான மனநிலை தேவைப்படுகிறது.//
பதிலளிநீக்குவெட்ககேடாகதான் இருக்கு..
கவிதையும் நல்லா இருக்கு...
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்கு“ஆனாலும் செத்துப் போன மனிதனின் படுக்கையறையில் ஒரு புதுமணத்தம்பதி எப்படி சந்தோஷமாக முதலிரவைக் கொண்டாட முடியும்”
//
இது சரியான கேள்வி...எனக்கும் சதாமை கொஞ்சம் கூட பிடிக்காது என்றாலும், இறந்து போன ஒரு மனிதனின் படுக்கையறையில், தெரிந்தே எப்படி தேனிலவு கொண்டாட முடியும் என்று தெரியவில்லை..
///என்ன வகையான மனநிலைகளிலிருந்து இதுபோன்ற யோசனைகள் பிறந்திருக்கும்! ///
பதிலளிநீக்குஉண்மைதான். இதுவும் ஒரு சேடிஸ்ட் மனோபாவம் தான்.
உங்க கவிதை ரொம்ப சூப்பர்
இந்தியாவில் இருக்கும் பல ஐந்து நட்சத்திர விடுதிகள் ஒரு காலத்தில் அரசர்களின் அரண்மனையாக இருந்தவைதானே
பதிலளிநீக்குஜெய்ப்பூர் அரண்மனையின் நிலை கூட இதுதான்
//ஆனாலும் செத்துப் போன மனிதனின் படுக்கையறையில் ஒரு புதுமணத்தம்பதி எப்படி சந்தோஷமாக முதலிரவைக் கொண்டாட முடியும்//
பதிலளிநீக்குஒரு இருபது வருடங்களுக்கு முன்னர், இன்று போல் தனிக்குடித்தனங்களும் அடுக்கு மாடி குடியிருப்புகளும் தோன்றுவதற்கு முன்னால், முதலிரவுகள் நடைபெற்ற வீட்டு அறைகளுக்கும் இது பொருந்தும் தானே :) :) :)
//ஒரு காரியம், அதன் நோக்கத்தினாலேயே அறியப்படும், சிறப்புறும். ஈராக் அரசின் நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஈராக்கில் சதாமை விரும்புகிற மக்களும் சரி, விரும்பாத மக்களும் சரி, அந்த அறையில் வந்து தங்கிவிட மாட்டார்கள். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் இரவுகளைக் கழிக்கும் இடமாக மட்டுமே அந்த படுக்கையறை இருக்கும். அவர்கள் தம்பதிகள், ஜோடிகள், காதலர்கள் மற்றும் வேறு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.//
பதிலளிநீக்குஇதுதான் அங்கு உண்மையாக இருக்கும்.
கவிதை அதை அழகாக வெளிபடுத்துகின்றது, மிக நன்று.
ருனோவின் கேள்வி மிக மிக அறிவார்ந்தது.
பதிலளிநீக்குஆனால் காதலும் காமமும் உணர்வுமயமானது.
நானும் எனது தோழனும் பேசிக்
கொண்டிருக்கையில் ஒன்று ஊடாகக்கடந்துபோனது.
காதலுக்கும் காமத்துக்கும் சூழல் முக்கியம்.
அப்படியிருக்கும்போது தேனிலவுக்கு ?.
யானைகளும் பூனைகளும் கூட
ஆளரவமற்ற இடம் தேடும். மனிதர்கள் ?.
தோழா கவிதை உரைநடையைத்தின்று விட்டது.
எவ்வளவு கொடுத்தலும் தகும்.
அப்படியனால் வாஞ்சி மணியாச்சி, கயத்தாறு புளியமரம்,
பதிலளிநீக்குபகத்சிங் தூக்கிலிட்ட இடமமெல்லாம் படுக்கை அறை
கட்டி விளம்பரங்கள் கொடுக்கலாமா ?. எல்லா நினைவிடங்களூம்,
வழிபாட்டுத் தலங்களூம் இந்த நியதிக்குள்ளே தான் அடங்கும்.
கூட்டுக்குடும்பம் என்பது மூதாதையர்களின் நினவு சுமக்கிற
வீடு. அந்த வீடுகளில் கூட, கெட்டது நடந்து ஒரு வருடம்
வரை நல்லது நடக்க அணுமதிப்பதில்லை.
அமெரிக்காவும், பிரிட்டிஷும் தாங்கள் கொன்று குவித்த உயிர்களின்
கல்லறைகளைக்கூட நிர்மூலமாக்கியது கூட்டுக்குடும்பக் கோட்பாடு
இல்லை நண்பரே அது சுவடுகள் அழிக்கிற கோட்பாடு.
வேண்டாம் விதண்டா வாதம்.
என்ன ஒரு குரூர மனோபாவம், தங்களின் உரை பல கோணங்களில் அலசியிருக்கிறது, இருந்தாலும் இது குரூரம் மட்டுமே என்பது மனதில் நிலைக்கிறது, தங்களின் கவிதையில் இது துல்லியமாக பதிவாகியிருக்கிறது.
பதிலளிநீக்குகொஞ்சம் கூட கூச்சமோ சுரணையோ இல்லாம உங்க கட்சி ஜெயலலிதாவோட கூட்டணி வைக்கவில்லையா? அப்படித்தான் இதுவும்!
பதிலளிநீக்குமாதவராஜ், இந்தியாவுல எல்லாரும் உங்கள மாதிரி பேங்குல வேல பாத்துகிட்டு சொந்த வாழ்க்கையில செட்டில் ஆகி, சொத்து வாங்கி, ஆளுக்கொரு ரூமில தங்கி கற்பனையில புரட்சி/முற்போக்கு கவிதை எழுதராங்களா என்ன?
பதிலளிநீக்குஒரு குடிச அதுலையும் மறைவோ ஒன்னும் கிடையாது அதுக்குள்ளதான் எல்லாமே! பிணமும் இருக்கும் பிறந்த குழந்தையும் இருக்கும். உங்க உணர்ச்சி நடுத்தர வர்க்கத்தின் டிரேட்மார்க் அற்பவாதங்கிளில் ஒன்று. தமிழ்மணம் செய்த பாவங்களில் இது போன்று மொக்கைகளை திரட்டுவது! தலையெழுத்து!!
கவிதை அருமை.. அரசின் மனநிலையை விட இங்கு அமெரிக்கர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விதான் முன்னெழுகிறது..
பதிலளிநீக்குநேபாள உதாரணம் சிறப்பு :-)
ஞானசேகரன்!
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி. கவிதையாக அங்கீகரித்ததற்கும் மிக்க நன்றி.
அதுசரி!
பதிலளிநீக்குவருகைக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.
தீப்பெட்டி!
நீங்களும் கவிதை என்று சொல்லிவிட்டீர்களா...! தைரியம் வருது.
புருனோ!
பதிலளிநீக்கு////ஆனாலும் செத்துப் போன மனிதனின் படுக்கையறையில் ஒரு புதுமணத்தம்பதி எப்படி சந்தோஷமாக முதலிரவைக் கொண்டாட முடியும்//
இதை நான் சொல்லவில்லை. ஈராக் மக்களின் சிலருடைய கருத்து.
ஒரு மனிதர் நம்மோடு எப்ப்டி சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்பதைப் பொறுத்தே இந்த கருத்துக்கள் வருகின்றன. நமது கிராமங்களில் நமது தாத்தாக்கள், பாட்டிகள் படுத்த கட்டில்களில் முதலிரவு நடக்கவில்லையா? வழிவழியா வந்தது என்றும், குலம் தழைக்கும் என்றும் முன்னோர்களின் பொருட்கலை உபயோகிக்கும் வழக்கம் இருக்கிறதே...
ஜெய்ப்பூர் அரண்மனைக்கும், இந்த அரண்மனைக்கும் பல வித்தியாசங்கள் வரலாற்று ரீதியாக இருக்கின்றன. இந்தியாவில் இன்னமும் பல அரண்மனைகள் அரசுக்குச் சொந்தமானவையல்ல. அரச குடும்பத்துக்கு சொந்தமானவையகவும் இருக்கின்றன.
ஆ.முத்துராமலிங்கம்!
பதிலளிநீக்குதங்கள் புரிதலுக்கு நன்றி.
காமராஜ்!
பதிலளிநீக்குகவிதை உரைநடையை தின்றுவிட்டதா!
இதுவே கவிதையாக இருக்கிறதே!
யாத்ரா!
பதிலளிநீக்குபுரிதலுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
சென்ஷி!
பதிலளிநீக்குநீங்களே கவிதை நன்று என்று சொல்லிவிட்டீர்களா!!!!
நன்றி.
ஒரு நல்ல பார்வையில் எழுதியிருக்கிறீர்கள். கவிதையும் பதிவும்!!
பதிலளிநீக்குஉங்களின் ஒட்டுமொத்த எண்ணத்தையும் அடக்கியவாறு இருக்கிறது கவிதை!!
உங்கள் எண்ணமே நம்மதும்!!!! அதை அட்லீஸ்ட் ஒரு காட்சிப் பொருளாக்குங்கள்... இப்படி தேநிலவுக்கு விட்டு அசிங்கப்படுத்தாதீர்கள்!!!
நன்றிங்க.
//சின்னஞ்சிறு நாடான நேபாளம் சொல்லும் செய்தியை ஈராக்கும், உலகமும் நின்று கவனித்தாக வேண்டும். மக்களுக்கு எதிரான மன்னனை எதிர்க்க யாரும் அமெரிக்காவின் உதவியை நாடவில்லை ஜனநாயகத்தைக் கொண்டு வர அவர்களே போராடினார்கள். மன்னனை அரண்மனையிலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றினார்கள். இப்போது அரண்மனை மக்கள் வந்து பார்வையிட திறந்துவிடப்பட்டு இருக்கிறது. அது மக்களின் சொத்து, உழைப்பின் மகிமை என்பதை புரிந்து கொண்டவர்கள் அங்கு இருக்கிறார்கள/
பதிலளிநீக்குஇந்த வரிகளை வாசிக்கும் போது நேபாளத்தையும்...நேபாளிகளையும் நினைத்து பெருமிதமாகத் தான் இருக்கிறது,
மாதவராஜ் அவர்களுக்கு,
பதிலளிநீக்கு"மலம்" ( மானஸ்தன் )என்று தெரிந்தப் பின்பும் ....
அதற்கு ஏன்?
தாங்கள் "மணம்" கொண்டு வர முயற்சி செய்கிறீர்கள்....
வேண்டாம்!!! வேண்டாம்!!!
குரைத்துக் கொண்டு இருப்பவர்களை குறைவாக கூட மதிக்க வேண்டாம்!
பதிலளிநீக்குசிறுமைகளை ச்சீ...ச்சீ.. என்று ஒதுக்கிவிடுங்கள்!!
ஆதவா!
பதிலளிநீக்குபகிர்வுக்கும், வருகைக்கும் நன்றி.
மிஸஸ் தேவ்!
ஆமாம். நிச்சயம் பெருமைப்படலாம்.
ஆதவா!
பதிலளிநீக்குபகிர்வுக்கும், வருகைக்கும் நன்றி.
மிஸஸ் தேவ்!
ஆமாம். நிச்சயம் அவர்கள் பெருமைப்படலாம்.
பொன்ராஜ்!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான். ’அது’பாட்டுக்கு ’மணக்கட்டும்’. நாம் நம் வேலையைப் பார்ப்போம்.
ஜாஸ்!
சரிங்க. ஒதுங்கிக் கொள்கிறேன்.