ஏழு ஆண்களும் ஒரு இளம்பெண்ணும்

women10

சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்படுவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் கூட இருக்கவில்லை. அந்த கம்பார்ட்மெண்ட்டில்  கல்யாணமான ஆண்கள் ஏழு பேர் இருந்த பகுதிக்குள் வெள்ளை பனியனோடும், நீல ஜீன்ஸோடும் அவள் பிரவேசித்தாள். “அப்படி போடு, போடு” என்று வந்த திரிஷா பற்றிய எஸ்.எம்.எஸ் ஜோக்கைச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தவர்கள் சட்டென அடங்கினார்கள். ஒரு ஓரமாய் அவள் அமர்ந்து கொண்டாள். வண்டி புறப்பட்டு மெல்ல பிளாட்பாரத்தை கடக்கும் வரை, அங்கு யாரும் பேசிக்கொள்ளவில்லை.

விமானப் பணிப்பெண் ஒருத்தி ரெயிலில் வருகிறாள் என்று அவர்கள் புரிந்து கொண்டனர். வாட்சைப் பார்த்தவள், மிக இயல்பாக அவர்கள் பக்கம் திரும்பி, “நீங்கள் எல்லோரும் டில்லியா செல்கிறீர்கள்” என்றாள் ஆங்கிலத்தில். “ஆமாம், ஆமாம்” என அவசரமாக இரண்டு மூன்று பேர் பதில் சொல்லினர். மற்ற நால்வருக்கும் உடனடியாக வாய் வராமலிருந்தது. இல்லையென்றால் அவர்களும் ஆமாம் போட்டிருப்பார்கள். “எனக்கு மிடில் பெர்த். அப்பர் பெர்த் எடுத்துக்கொள்ளவா” கேட்டாள். சரி, சரியென்றனர். அவள் மேலேறிக் கொண்டாள்.

கீழே மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தார்கள். அவ்வப்போது அவளது உடலைப் பார்த்துக் கொண்டார்கள். நயன்தாரா ஏன் சிம்புவோடு பேசுவதில்லை என்பது குறித்து ஒருவன் பெரும் ஆராய்ச்சி செய்து வைத்திருந்தான். சத்தமாகவே சொல்ல ஆரம்பித்தான். நாற்றமெடுக்கும் பகுதிக்குள் ரெயில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். மேலே அவள் இருக்கிறாள் என்பது போல ஓருவன் கண்ஜாடை செய்தான். இருக்கட்டுமே என்பது போல அவன் முகம் அசைத்து தன் பேச்சில் முக்கிய பகுதியை அடைந்தான். பெரும் சிரிப்புச் சத்தம் எழுந்தது. அவள் ஒரு புத்த்கத்தை எடுத்து படுத்துக் கொண்டாள்.

ஆண்களும் கொஞ்ச நேரம் இப்படியே பேசி, சிரித்து அடங்கினார்கள். தூங்கினார்கள். எழுந்தார்கள். வெளியே வேடிக்கை பார்த்தார்கள். திரும்ப பேச ஆரம்பித்தார்கள். கோரஸாய் பாடினார்கள். மேலும் பல ஆராய்ச்சி அறிக்கைகளை வாசித்தார்கள். சிரித்தார்கள். அவளது உடலையும் பார்த்துக் கொண்டார்கள். அவள் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. இடையில் இரண்டு முறை செல்போனில் பேசினாள். மொத்தமே நான்கு முறைதான் கீழே இறங்கினாள். சில வாழைப் பழங்களோடும், ரொட்டிப் பொட்டலங்களோடும் மேலே ஏறிக்கொண்டாள். மற்றபடி அந்த புத்தகம். தூக்கம்.

இரண்டாம் நாள் அதிகாலையில் பஹர்கஞ்ச்சிற்குள் ரெயில் நுழைந்தது. எல்லோரும் தங்கள் சுமைகளோடு இறங்குவதற்கு தயாரானார்கள். அதில் ஒருவன் “ஸீ யூ மேடம்” சொன்னான் பவ்யமாக. அவள் புன்னகைத்தாள். எல்லோரும் சொல்லினர். புன்னகைத்தாள். புன்னகைத்தனர். இப்படியொருத்தியை இனி எப்போது பார்க்கப் போகிறோம் என  ரகசிய வருத்தம் அவர்களை வாட்டியது. கூடவே, அவளுக்குள் எங்கோ தாங்கள் இருப்பது போல ஒரு உணர்வும், சிறு திருப்தியும் இருக்கத்தான் செய்தது. எவ்வளவு பேசியிருக்கிறார்கள்.

பிளாட்பாரத்தில் இறங்கி நடக்கும் போதுதான் கவனித்தார்கள். ரெயில் ஏறும்போது அவள் கொண்டு வந்த கருப்பு பையோடு, சின்னதாய் ஒரு பிளாஸ்டிக் பையும் இப்போது வைத்திருந்தாள். சாப்பிட்ட வாழைப்பழத்தின் தோல்கள், பொட்டலக் காகிதங்கள் அதற்குள் இருந்தன. பிளாட்பாரத்தில் அங்கங்கு இருந்த குப்பைத் தொட்டிகள் ஒன்றில் அதை கவனமாகப் போட்டாள். கூடவே, தாங்கள் அவளுக்குள் செலுத்திய வார்த்தைகளும் விழுந்ததைப் பார்த்து ஏழு ஆண்கள் ஏமாற்றமடைந்தனர். பதினான்கு கண்களும் விழுந்ததை பார்த்து அவள் சிரித்துக்கொண்டாள்.

 

*

கருத்துகள்

56 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. \\தாங்கள் அவளுக்குள் செலுத்திய வார்த்தைகளும் விழுந்ததைப் பார்த்து ஏழு ஆண்கள் ஏமாற்றமடைந்தனர். பதினான்கு கண்களும் விழுந்ததை பார்த்து அவள் சிரித்துக்கொண்டாள்\\

  அருமையா சொல்லி இருக்கீங்க...

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப நல்லா இருக்கு சார்!

  ஒரு பெரிய மேலாண்மைத் தத்துவத்தையே சர்வசாதாரணமா சொல்லியிருக்கு இந்தக்கதை!

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப அருமையா முடிச்சிருக்கீங்க,.

  அனுபவம்...சொல்லும் விதத்தில் பிரமாதம்

  பதிலளிநீக்கு
 4. அருமை. ஆழ்ந்த கவனிப்பும் அவதானிப்பும்

  பதிலளிநீக்கு
 5. எல்லோரும் தான் பல விஷயஙக்ளை பார்க்கிறார்கள் .. ஆனால் ஒவ்வொருவருடய பர்ஷப்ஷன் வித்யாசப்படும்.. உங்களுடயது சூப்பர்.

  பதிலளிநீக்கு
 6. நல்ல எழுத்தாளுமை ஸார்...

  பதிலளிநீக்கு
 7. உங்கள் எழுத்துக்கள் அனைத்துமே அற்புதம். விசிறி ஆகி விட்டேன் என கூட சொல்லலாம்

  பதிலளிநீக்கு
 8. "கூடவே, தாங்கள் அவளுக்குள் செலுத்திய வார்த்தைகளும் விழுந்ததைப் பார்த்து ஏழு ஆண்கள் ஏமாற்றமடைந்தனர். "
  மிகவும் இலகுவாக மனநிலையை விளக்கி விட்டீர்கள்....

  பதிலளிநீக்கு
 9. //அவளுக்குள் எங்கோ தாங்கள் இருப்பது போல ஒரு உணர்வும், சிறு திருப்தியும் இருக்கத்தான் செய்தது//


  //கூடவே, தாங்கள் அவளுக்குள் செலுத்திய வார்த்தைகளும் விழுந்ததைப் பார்த்து ஏழு ஆண்கள் ஏமாற்றமடைந்தனர்.//

  அசத்தல்!

  பதிலளிநீக்கு
 10. அருமை.. சட்டென்று முகத்தில் அடித்த ஒரு முடிவு..

  பதிலளிநீக்கு
 11. மிக அழகான பிரதிபலிப்பு. “அடிக்கடி அவள் உடலை பார்த்துக் கொண்டார்கள்” - “அவளுள் ’செலுத்திய’ வார்த்தைகள்” - இரண்டும் செக்ஸ் கலந்திருந்த ஆண்களின் பார்வையை புரியவைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப நல்லாயிருக்கு..ஒரு சிறு சம்பவம்...அதனை நல்ல கதையாக்கியிருக்கும் விதம் அசத்தல்!

  பதிலளிநீக்கு
 13. கடைசி இரண்டு வரிகளால்...மொத்த கதையையும் சுவாரசியப்படுத்திட்டீங்க.

  பதிலளிநீக்கு
 14. நட்புடன் ஜமால்!

  வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. சுரேகா!

  தங்கள் புரிதல் உற்சாகமளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 16. ஆதவா!

  செல்வநாயகி!

  முரளிக்கண்ணன்!

  பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. கேபிள் சங்கர்!

  உங்கள் புரிதலும், கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றாக எழுத வேண்டும் என பொறுப்பையும் தருகிறது கூடவே.

  பதிலளிநீக்கு
 18. எட்வின்!

  ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 19. கிருத்திகா!

  தீபா!

  இருவரின் புரிதலுக்கும் நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 20. வண்ணத்துப் பூச்சியார்!

  லோஷன்!
  (உங்கள் முதல் மறுமொழி என நினைக்கிறேன்)

  நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 21. ஒரு சின்ன சம்பவம். பெரும்பாலருக்கு இச்சம்பவத்தில் அத்தனை கவனம் இருக்கப்போவது இல்லை. மனித உறவுகளில், செயல்பாடுகளில் இருக்கும் நுணுக்கமான அர்த்தங்களை நயமாய் சொற்களில் பதித்தது உங்கள் எழுத்தாளுமைக்கு நற்சான்று. உங்கள் தொடர் Bank workers unity யில் வரத்தொடங்கிய சமயத்திலே கவனித்து வருகிறேன். தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 22. சத்தியமூர்த்தி!

  சரியான புரிதல். சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 23. ராஜேஸ்வரி!

  ரொம்ப நன்றிங்க.

  விமலாவித்யா!

  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 24. சந்தனமுல்லை!

  ராஜ்!

  வருகைக்கும், புரிதலுக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 25. ஒரு சின்ன விஷயத்தை ரொம்ப அழகா கதையா உருவாக்கம் செய்திருக்கீங்க.

  முடிவில் இடப்பட்ட வார்த்தைகள் க்ளாஸ்.

  பதிலளிநீக்கு
 26. மிக மிக நல்ல கதை
  சொன்ன மெச்ஜ் மிக அருமையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 27. \\கூடவே, தாங்கள் அவளுக்குள் செலுத்திய வார்த்தைகளும் விழுந்ததைப் பார்த்து ஏழு ஆண்கள் ஏமாற்றமடைந்தனர்\\

  ஆழமான கருத்து பொதிந்த வரிகள், அருமை

  பதிலளிநீக்கு
 28. அந்த இளைஞர்களுக்கு நிகழ்வு!
  உங்களுக்கு அனுபவம்!
  படிக்கும் எங்களுக்கு பாடம்!

  நல்ல பகிர்வு நண்பரே!

  பதிலளிநீக்கு
 29. எளிய சம்பவம்..உங்கள் எழுத்தில் என்னைப் போன்றவர்களை ஆழமான பார்வையாக சுயவிமர்சனம் செய்யத்தூண்டுகிறது...நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 30. ரொம்ப நல்லா இருக்கு சார்!!

  பதிலளிநீக்கு
 31. சான்சே இல்ல ....சாதரண விசயத்த சூப்பரா சொல்லி இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 32. அமிர்தவர்ஷினி அம்மா!

  சாய்!

  யாத்ரா!

  தங்கள் பாராட்டுக்கள் உற்சாகமளிக்கின்றன. நன்றி

  பதிலளிநீக்கு
 33. ஷீ-நிசி!

  எர்னெஸ்டோ!

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 34. தாமஸ்!

  பிரதீப்!

  இது தங்கள் முதல் மறுமொழி என நினைக்கிறேன். நன்றி. சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 35. இதுல இன்னுமொரு சிக்கலும் இருக்கு,அது அந்த எட்டாவது நபருக்கு..

  பதிலளிநீக்கு
 36. இராம் கோபால்!
  //மனித உறவுகளில், செயல்பாடுகளில் இருக்கும் நுணுக்கமான அர்த்தங்களை நயமாய் சொற்களில் பதித்தது உங்கள் எழுத்தாளுமைக்கு நற்சான்று.//

  ரொம்ப நன்றி.

  //உங்கள் தொடர் Bank workers unity யில் வரத்தொடங்கிய சமயத்திலே கவனித்து வருகிறேன். //

  நீங்க வங்கி ஊழியரா....!

  பதிலளிநீக்கு
 37. தமிழன் க்றூப்பி!

  நசரேயன்!

  மங்களூர் சிவா!

  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 38. //கூடவே, தாங்கள் அவளுக்குள் செலுத்திய வார்த்தைகளும் விழுந்ததைப் பார்த்து ஏழு ஆண்கள் ஏமாற்றமடைந்தனர்.//

  அருமை.

  பதிலளிநீக்கு
 39. நந்தா!

  பட்டாம்பூச்சி!

  தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 40. எப்படித்தான் முடியுமோன்னு ஆர்வமாக இருந்தது.. குறைவில்லாம அட்டகாசமாக முடிச்சிட்டீங்க...

  பதிலளிநீக்கு
 41. கதையாய் ஆரம்பிச்சு கவிதையாய் முடிச்சிட்டீங்க. அருமை சார்.

  பதிலளிநீக்கு
 42. தாங்கள் அவளுக்குள் செலுத்திய வார்த்தைகளும் விழுந்ததைப் பார்த்து ஏழு ஆண்கள் ஏமாற்றமடைந்தனர். பதினான்கு கண்களும் விழுந்ததை பார்த்து அவள் சிரித்துக்கொண்டாள்
  really superb

  பதிலளிநீக்கு
 43. /அவளுக்குள் எங்கோ தாங்கள் இருப்பது போல ஒரு உணர்வும், சிறு திருப்தியும் இருக்கத்தான் செய்தது/

  செம சைக்காலஜி. நல்ல கருத்துக்களை,அழகாக
  இருவரும் முன்வைத்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 44. முத்துலட்சுமி-கயல்விழி
  பாண்டியன் புதல்வி!
  ஷக்தி!
  ச.முத்துவேல்!

  அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 45. குமுதத்தின் ஒரு பக்க கதைகளைப் போல் இருந்தது.ஸ்டீரியோடைப்
  கதை.

  பதிலளிநீக்கு
 46. //கூடவே, தாங்கள் அவளுக்குள் செலுத்திய வார்த்தைகளும் விழுந்ததைப் பார்த்து ஏழு ஆண்கள் ஏமாற்றமடைந்தனர். பதினான்கு கண்களும் விழுந்ததை பார்த்து அவள் சிரித்துக்கொண்டாள்.//

  இறுதிவரிகள் கதையை அற்புதமாக்கியிருக்கிறது. மிக அழகு !

  பதிலளிநீக்கு
 47. அனானி!
  சரிங்க!

  ரிஷான் ஷெரிப்!
  நன்றிங்க.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!