அவனும் அவளும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
முடிந்து போன பற்பசையிலிருந்து, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என நிறைய சேகரித்து, வீட்டிற்கு வெளியே, முன்பக்க ஜன்னல் ஓரம் சமையலறை ஒன்றை அமைத்திருந்தார்கள். இரண்டு நாளைக்கு முன்னால், கடிகாரத்திலிருந்து தூக்கிப் போட்ட பேட்டரிகள் அங்கு சிலிண்டர்களாகவும், டார்டாயிஸ் வைக்கிற தட்டு அதன் மேல் கேஸ் ஸ்டவ்வாகவும் உருமாறியிருந்தன.
அரிசி முடிந்துவிட்டதென்று சொல்லி சமையல் சாமான்கள் வாங்க அவள் லிஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவன் சீட்டுக்கட்டு ஒன்றை பையிலிருந்து எடுத்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான். லிஸ்ட் வாங்கியதும், சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு குழாயிலிருந்து செடிக்குத் தண்ணீர் ஊற்றும் டியுபிலிருந்து வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டான்.
கொஞ்சதூரம் போனவன் திரும்பி வந்து அவளிடம், “ஒனக்கு ரோஸ் கலர்ல ஒரு சுடிதாரும் வாங்கி வர்றேன்” என்றான்.
*
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே!
பதிலளிநீக்குஇஃகிஃகி!
பதிலளிநீக்குகுழந்தைகள் உலகம் அற்புதமானது
பதிலளிநீக்குநம் எல்லோருடைய அடிமனதிலும்
நாம் திரும்பவும் பால்யத்திற்கே சென்று விடுவோமா என்ற ஏக்கம் படிந்திருக்கும். கறைபடதா காகிதத்தை போல காற்றின் திசைகளில் பயணித்துத் திரும்பும் பருவம். அதன் விளையாட்டு இப்படிதான் பொய்யானவைகளை கொண்டு உண்மையாக இருக்கும்
அதை உன்றி இரசித்தால் நாம் உண்மையானவற்றில் பொய்யாக வாழ்வதை உணரமுடியும்.
அப்படி அதன் அசலான சிறு விளையாட்டொன்றை அவ்வளவு இயல்பு நடையில மிக அழகாக எழுதியதற்கு மிக்க நன்றி மாதவராஜ் சார்.
இது நம் போலி முகங்களை கிழிப்பதாகவே உள்ளது.
குழந்தைகள் ஆட்டம் பார்க்க பார்க்க தீராத ஆட்டம்
பதிலளிநீக்குஎங்கோ படித்த வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது...
பதிலளிநீக்குகுழந்தைகளின் கேள்விகளும், விளையாட்டுத்தனமும் குழந்தைத்தனமாகவே இருப்பதில்லை....
மெல்லிய புன்னகையை தோற்றுவிக்கிறது பதிவு...
இனிமையான பதிவு. கவிதைதான் இது.
பதிலளிநீக்குபெரியவங்க குழந்தைகளாகணும்னு ஆசைப்படுறாங்க. குழந்தைங்க, பெரியவங்களாக ஆசப்படுறாங்க.முத்துராமலிங்கம் நிறைய, நன்றாக சொல்லிவிட்டார்.
என் குழந்தை பருவத்தின் மீதும்,குழந்தைகள் மீதும் எனக்கு மிக அலாதி பிரியம்..இந்த பதிவு ரொம்ப அழகாக கடந்து போன குழந்தை பருவத்தின் வாசல் வரை இட்டு சென்று பயணிக்க வைக்கிறது ..மிக்க நன்றி நீங்கள் தந்து கொண்டு இருக்கும் அழுத்தமான பதிவுகளுக்கு ..
பதிலளிநீக்குநீங்க எங்கயோ போய்ட்டீங்கண்ணா...
பதிலளிநீக்குபுன்னகை வருகிறது
பதிலளிநீக்குஅய்யோ கொள்ளை அழகு!
பதிலளிநீக்குகுழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துப் பெரியவர்கள் கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு என்பதை வெகு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்
அப்புறம், நிகிலைப் பத்திரமாப் பாத்துக்குங்க அங்கிள். ஓவர் ஸ்பீடாப் போறான்! :-))
I love this! I remember my childhood days at my grandma's house. I still have my choppu saamans. :)
பதிலளிநீக்கு//அப்புறம், நிகிலைப் பத்திரமாப் பாத்துக்குங்க அங்கிள். ஓவர் ஸ்பீடாப் போறான்! :-))//
பதிலளிநீக்குபோட்டுக்குடேய்...
பழைய நினைவுகள் எல்லாம் கிளறப்படுகின்றன. குழந்தைகளுலகம் சொர்க்கம்!!!
பதிலளிநீக்கு\\ ச.முத்துவேல் said...
பதிலளிநீக்குஇனிமையான பதிவு. கவிதைதான் இது.
பெரியவங்க குழந்தைகளாகணும்னு ஆசைப்படுறாங்க. குழந்தைங்க, பெரியவங்களாக ஆசப்படுறாங்க//
வழிமொழிகிறேன்.
சார் என்னை பால்யத்திற்கு அழைத்துச்சென்று விட்டது இக்கதை, நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குகுழந்தைகளின் ஆட்டத்தைக் கண்டு ரசிட்த்ஹவர்களுக்கும், தங்கள் பால்யக்கால நினவுகளை மீட்டெடுத்தவர்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவால் பையன்!
உங்கள் பின்னூட்டம் இந்தப் பதிவிற்கு இன்னுமொரு பரிமானத்தைத் தந்திருக்கிறது.
ஆ.முத்துராமலிங்கம்!
புரிதல் மிகச்சரி.
முத்துவேல்!
கவிதை போல் சொல்லிட்டீங்க.
சுரேஷ்!
எங்கயும் போகலை. உங்கக் கூடதான் இருக்கேன்.
தீபா!
நாம் ஒண்ணும் ஸ்பீட் பிரேக்கராக வேண்டாம்னு நினைக்கிறேன்.
யாத்ரா!
அது ஒரு சுகம்!