பயந்தாங்கொள்ளி

fear

 

முன்னால்
ஒரு அடி கூட
எடுத்து வைக்கவில்லை
காலருகே தேள்
கொஞ்சம் தள்ளி
கட்டு விரியன்
நெளு நெளுவென்று
பூரான்கள்
அதுவே உசிதம் என
அசையாமல்
அப்படியே நின்றிருந்தான்
பின்னால்
ஒரு மதயானை
முன்னங்காலை தூக்கியபடி!

 

*

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. என்னதிது இப்படிப் பயமுறுத்துறீங்க?

  பதிலளிநீக்கு
 2. இரண்டு பக்கமும் பிரச்சனையா??? ஏதாவதத ஒண்ணை தேர்ந்தெடுத்துதானன ஆகணும்....

  கவிதையில ஏதோ ஒண்ணு குறையறாப்ல இருக்கு... ஒரரவேளை நமக்கு படிக்கத் தெரியலையோ????

  பதிலளிநீக்கு
 3. யானை காலைத் துக்கிக் காட்டுற வரைக்கும் புழுக்களின் மத்தியிலும் பூரான்க‌ளின் மத்தியிலும் கூடப் படுத்துத் தூங்கும் சோம்பேறிகள் .. யார் அது?

  பதிலளிநீக்கு
 4. ஒருவித இயலாமை உணர்ச்சியை ஏற்படுத்துகிறது உங்கள் கவிதை

  பதிலளிநீக்கு
 5. ஆதவா!

  கவிதையில் குறைவாக்கூட இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 6. தீபா!
  //யானை காலைத் துக்கிக் காட்டுற வரைக்கும் புழுக்களின் மத்தியிலும் பூரான்க‌ளின் மத்தியிலும் கூடப் படுத்துத் தூங்கும் சோம்பேறிகள் .. யார் அது?//


  வாழ்வில் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கும் பெரிதாய் அலட்டிக் கொள்கிறவர்கள்...

  பதிலளிநீக்கு
 7. அமிர்தவர்ஷிணி அம்மா!

  தங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. முரளிக்கண்ணன்!

  ஐயோ... அதிலிருந்து விடுபடணும்னுதான் இந்தக் கவிதை...

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. ////ஆதவா!

  கவிதையில் குறைவாக்கூட இருக்கலாம்.////


  ஹா ஹஹஆ,,,, சார்,,, உங்க பதில் சூப்பர்.... எனக்கு புரியலைங்கறத திமிரா சொன்னேன்.. நீங்க அதை அப்படியே மாத்தி எனக்கு ஆப்பு வெச்சுட்டீங்க..... :D :D

  தீபாவின் உங்கள் பதில்.... கொஞ்சம் புரிய வைத்ட்தது...

  பதிலளிநீக்கு
 11. என்னை நான் காத்துக்கொள்ள எனக்குள் ஒரு வேகம் வந்தே ஆகவேண்டும்.பயந்து அதிலேயே நின்றுகொண்டிருந்தால் ஆபத்து எனக்குத்தான்.உந்து....முன்னேறு!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!