டைகிரிஸ் அமைதியாக ஓடவில்லை

 

 

 19140218804947a103c4f96970762999_MidCol

 

 

 

 

 

 

 

 

 

 

கைகால்கள் கட்டப்பட்ட புறாவின் மீது
மதயானைகளைக் கொண்டு யுத்தம் தொடுக்கச் சென்றான் அவன்.

 

மண்ணில் தன் அலகுகளால் கீறி
அடிபணியமறுத்த அந்த எளிய பறவைதான்
உலகையே அழித்துவிடப் போவதாக அச்சுறுத்தினான்.

 

வெடித்துச் சிதறிய குழந்தைகளின் ஈனக்குரல்களும்,
நெஞ்சிலடித்துக் கதறிய தாய்களின் வானம் நோக்கிய கேவல்களும்,
குருதி சிந்திய அப்பாவி மனிதர்களின் இதயத் துடிப்புகளும்
அந்தப் புறாவின் தொண்டையில் கடைசியாய் அசைந்து கொண்டிருந்தன.

 

கழுத்தை நெறித்துக் கொன்ற புறாவை
புதைத்த இடத்தில் தனது ஷூக்களை வைத்து விட்டு
இதோ இங்கே ஜனநாயகம் பூத்துவிட்டது என மார்தட்டினான்
வண்ணத்துப் பூச்சிகளை வாயில் கவ்விய
பூனையின் கண்களை கொண்டிருந்த அவன்.

 

புறாவின் இறகொன்று
காற்றில் அலைந்து சென்று விழுந்த
நதியின் நீரைப் பருகிய ஒருவர்
கைகளில் இரண்டு ஷூக்களோடு எழுந்து வந்தார்.

 

மீதமிருக்கும் இறகுகள் மண்ணிலிருந்து
நதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

 

 

 

 

பி.கு:

1.இதை எழுதி ஐந்து நாட்களாகிவிட்டன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டிற்காக நான்கு நாட்கள் சென்னை சென்றுவிட்டதால் இன்றுதான் இங்கே பதிவு செய்ய முடிந்திருக்கிறது.

2.புஷ்ஷின் மீது செருப்பை எறிந்தவர் எங்கு இருக்கிறார் என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள். எனக்குத் தெரிகிறது. உலகையும், உலகத்து மக்களையும் நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருக்கிறார் என்பது.

3.செருப்பு வீசியவரின் கிராமத்தில் மக்கள் சேகுவேராவின் படத்தை ஏந்தியபடி, உணர்ச்சி பொங்க கொண்டாடினார்கள் என்ற செய்தி இன்னும் உற்சாகமளிக்கிறது.

 

 

இதுவரை எழுதிய பக்கங்கள் - வாருங்கள்

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இந்நிகழ்ச்சி நடந்த தினமே உங்கள் வலைப்பக்கத்தை ஆவலோடு திறந்தேன். இது பற்றீய உங்கள் பதிவுக்காக.
  புறாவின் இறகுகள் என உருவகப்படுத்தியிருப்பது அருமை.

  பதிலளிநீக்கு
 2. ''Democracy''>>>having more meanings, can be annihilated at any place,anytime and anybody..Using "democracy" became a fashion and conveniant word to hide their mistakes sometime..Dont you witness such a "annihilation"of democracy on 21 st evening December at Chennai?

  "Inqulab Democracy"
  -vimalavidya@gmail.com

  பதிலளிநீக்கு
 3. தீபா!


  டைகிரிஸ் தாலாட்டிய பாக்தாத்தின் வீழ்ச்சி நமது காலத்தின் சோகம் நிறைந்த பக்கமாகும்.

  ஆதியில் கடவுள் பூமியை படைத்தபோது, நதியின் நீர்த்திவலைகளின் மீது கடவுளின் ஆவி அசைந்து கொண்டிருந்ததாம். கடவுளின் ஆவியைவிட சுதந்திரத்தின் தாகம் என்பது உன்னதமானது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. விமலாவித்யா அவர்களுக்கு!

  புரட்சியென்னும் வார்த்தை இங்கு எப்படியெல்லாம் இழிவு படுத்தப்படுகிறதோ, அதே கதிதான் ஜனநாயகத்திற்கும் நேர்கிறது. நாம் அவைகளை இன்னும் அழுத்தமாக ஒங்கி ஒலிக்கத்தான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. //மீதமிருக்கும் இறகுகள் மண்ணிலிருந்து நதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன//

  அருமையான வரிகள் வலியை ஏற்படுத்தும் வரிகள், கண்டிப்பாக விரைவில் மீதமுள்ள இறகுகள் நதியை அடையும்..

  தோழமையுடன் தம்பி

  முகமது பாருக்

  பதிலளிநீக்கு
 6. ///வெடித்துச் சிதறிய குழந்தைகளின் ஈனக்குரல்களும்,
  நெஞ்சிலடித்துக் கதறிய தாய்களின் வானம் நோக்கிய கேவல்களும்,
  குருதி சிந்திய அப்பாவி மனிதர்களின் இதயத் துடிப்புகளும்////

  வலிநிறைந்த வரிகள்...

  இந்நிகழ்ச்சி ஏலவே தீர்மானிக்கப் பட்டதாய் இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.இத்தனை கொடூரத்தின் பின்னரும் ஏகாதிபத்தியத்துக்கே உரிய கர்வத்தோடு அவர் ஆற்றிய உரை எந்த பண்பட்ட மனிதரையும் ஆவேசம் கொள்ளச்செய்திருக்கும்....

  ///மீதமிருக்கும் இறகுகள் மண்ணிலிருந்து
  நதியை நோக்கி மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கின்றன. ///

  நம்பிக்கை தருகிறது...

  நல்லதொரு படைப்பு

  பதிலளிநீக்கு
 7. அன்புத் தம்பி முகமது பாருக்!

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. தங்கராசா ஜீவராஜ்!

  //இத்தனை கொடூரத்தின் பின்னரும் ஏகாதிபத்தியத்துக்கே உரிய கர்வத்தோடு அவர் ஆற்றிய உரை எந்த பண்பட்ட மனிதரையும் ஆவேசம் கொள்ளச்செய்திருக்கும்....//

  நிச்சயமாய்...

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!