திரும்பவும்...
pain hand

கூண்டிற்குள் இருந்தாலும்
சிங்கத்தின் அருகிலும், புலியருகிலும்
யாரும் போவதில்லை.
குரங்குகள்தான் பாவம்.

முள் முள்ளாய் நீண்டிருக்கும்
கல்யாண முருங்கைக் கம்பு
செலுத்தப்படுகிறது கம்பிகளின் ஊடே.

அறியாத குரங்கு
நம்பிக்கையுடன் அதனைப் பிடிக்கிறது.
கம்பு இழுக்கப்படுகிறது.
கையெல்லாம் ரணமாக குரங்கு கத்துகிறது.
அங்குமிங்கும் கிடந்து புரள்கிறது.

திரும்பவும் கல்யாண முருங்கை
உள்ளே நீள்கிறது.
திரும்பவும் குரங்கு பிடிக்கிறது.
திரும்பவும் இழுக்கப்படுகிறது.
குரங்கின் கையில் இரத்தமும்,
கண்களில் அழுகையும் வடிகிறது..

திரும்பவும் கல்யாண முருங்கை நீள்கிறது...

எல்லாம் தெரிந்தும்
அதைப் பிடிக்க கைநீட்டுகிறேன்
திரும்பவும் நான்.

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. \\எல்லாம் தெரிந்தும்
  அதைப் பிடிக்க கைநீட்டுகிறேன்
  திரும்பவும் நான்.\\

  அருமை.

  பல நேரங்களில் இப்படித்தான் ஆகி விடுகின்றது.

  நாம் தெரிந்தும் செய்யவேண்டிய கட்டாயத்தில்...

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் சிபிஎம்-அதிமுக கூட்டணியை குறிப்பிடாமல் எழுதியிருந்தாலும்
  உள்ளர்த்தம் அதுதான் என்று புரிகிறது.
  உங்களுக்கு என் அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 3. WE ARE LIVING IN A VICIOUS CYCLE COMPRISES OF TROPHOCYTES AND CYSTS. IF WE DO ANY ACTION, WITHOUT ANY SERIOUS THINKING, DEFINETELY, WE NEED TO FACE THE REACTIONS...IF NOT WE HAVE TO REPEAT THE SAME ACTION IN A DIFFERENT METHOD, WHICH AGAIN WILL LEAD US TO THE SAME PATH "VICIOUS CYCLE.

  பதிலளிநீக்கு
 4. கம்பு இழுக்கப்படுகிறது.
  by?

  பதிலளிநீக்கு
 5. ஜமால்!

  தெரிந்தும் வலியோடு நாம் செய்து கொள்ள வேன்டிய சமரசங்கள் இருக்கின்றன. ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேன்டும் போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. வாங்க பெரியார் விமர்சகரே!

  ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திப்பதில் சந்தோஷம்.

  விரிந்த பொருளில் சொன்னதை அவரவர்க்கு உகந்த பொருளில் கற்பிதம் செய்து கொள்வார்க‌ள் என்ப‌து என‌க்குத் தெரியும். நான் என்ப‌து நான் அல்ல. அல்லது நான் மட்டும் அல்ல‌.

  ச‌மீப‌த்திய‌ நிக‌ழ்வுக‌ளை த‌ங்க‌ளுக்கு சாத‌கமாக்கிக் கொன்டு, ம‌க்க‌ளிட‌ம் க‌ல்யாண‌ முருங்கைக் கம்பை இந்துத்துவா ச‌க்திக‌ள் நீட்டுகின்ற‌ன‌ என்றும் பொருள் கொள்ள‌லாம்.

  பதிலளிநீக்கு
 7. ராம‌சுப்பிர‌ம‌ணிய‌ ஷ‌ர்மா!

  ச‌ரிதான். ஆனால் நாம் வ‌ட்ட‌த்துக்குள் வாழ‌வில்லை என‌ நினைக்கிறேன். ஒரு ஸ்பிரிங் போன்ற‌ கூம்பு வ‌டிவ‌ம் கொண்ட‌ வளைய‌ங்க‌ள். கீழ் உள்ள‌தைக் காட்டிலும் மேல் உள்ள‌ வ‌ளைய‌ம் முன்னேற்ற‌ம் கொண்ட‌து.

  பதிலளிநீக்கு
 8. ருத்ரன் சார்!

  ஏமாற்றுபவர்களே கம்பை இழுக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 9. அருமையான வரிகள் கூடிய கவிதை.. :))

  பதிலளிநீக்கு
 10. சென்ஷி!

  வண‌க்கம்.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. 'எல்லாம் தெரிந்தும்
  அதைப் பிடிக்க கைநீட்டுகிறேன்
  திரும்பவும் நான்'

  இடதுசாரிகளின் இயல்பே இதுதானோ :).எதற்கோ ஆசைப்பட்டு,
  எதையோ செய்ய நினைத்து, அது
  வேறு எப்படியாகவோ முடிவதை
  அனுபவத்தில் கண்டபின்னும்
  பழைய தவறையையே இடதுசாரிகள் செய்வது புதிதா?இல்லை.

  பதிலளிநீக்கு
 12. HaaahaaHa--Every body imgine according to their thinging. What ''Anonymous''want to say ?The cpi-m worked out their political tactis well and succeeded.CPI-M announced that they will not support a party which supports either congress or bjp.By this announcemnt they cleverly sided DMK with congress.Now DMK CANNOT GO WITH BJP.
  They allied with ADMK AND stoped AIDMK to go with BJP. By this tactis the big parties in Tamilnadu DMK AND ADMK have been checked to ally with BJP..
  The real winner is CPI-..The heavy loser is BJP.However the communal forces have been stoped and isolated in TAMIL NADU..Till the left forces get strengh or third alternative dawn the situation may be continued.
  vimalavidya@gmail.com

  பதிலளிநீக்கு
 13. bjp is a political non-entity in tamil nadu.that is why admk is not keen to join hands with it.post polls admk may support any party
  including congress.but by aligning with admk the left has foreclosed other options.admk gains and left loses credibility.

  பதிலளிநீக்கு
 14. left has an attitude- i will lose one eye if that makes bjp lose two eyes.in reality left loses one eye while bjp loses nothing.

  பதிலளிநீக்கு
 15. மிஸ்டர் Anonymous!

  //எதற்கோ ஆசைப்பட்டு,
  எதையோ செய்ய நினைத்து, அது
  வேறு எப்படியாகவோ முடிவதை
  அனுபவத்தில் கண்டபின்னும்
  பழைய தவறையையே இடதுசாரிகள் செய்வது புதிதா?இல்லை.//

  இடதுசாரிகள் எதற்கோ ஆசைப்படுகிறவர்கள் இல்லை.
  வஞ்சிக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்காகவும், மக்களின் ஒற்றுமைக்காகவும் ஆசைப்படுகிறவர்கள்.
  இதற்கு எதிராக இருப்பவர்களை மக்களிடம் தனிமைப்படுத்தும் காரியங்களை செய்ய நினைப்பவர்கள்.
  அப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டிய சக்திகளில் முதலாவதாக பி.ஜேபியும், இரண்டாவதாக காங்கிரஸும் இருக்கின்றன.
  முதலில் மோசமானவைகளை, எதிர்க்க இடதுசாரிக் கட்சிகள் முனைகின்றன.
  அந்தக் காரியத்தில், வலிகளையும், சில அவமானங்களையும் கூட தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!