44வது மீட்பர்கழுதையின் மீது அமர்ந்து
இவர் வெற்றிக் களிப்போடு
தன் ராஜ்ஜியத்திற்குள் நுழைகிறார்.


வழியை ஆயத்தமாக்கி
பாதையை செம்மையாக்கியவர்கள்
விண்ணரசு சமீபத்துவிட்டதாய் பறைசாற்றுகிறார்கள்.


வானத்திலிருந்தும், மலையிலிருந்தும்
தேவன் இறங்கி வருவார் என
காலங்கள் தோறும் காத்துக் கிடந்தவர்கள்
இப்போதும் ஆர்ப்பரிக்கிறார்கள்.


நாற்பத்து மூன்று முறை ஏமாந்த பின்னரும்
காற்றையும், கடலையும்
இவர் அடக்கிவிடுவார் என
கண்மூடி நம்புகிறார்கள்.


தலைக்கு மேலே கடந்து செல்லும்
வானத்துப் பறவைகளை பாவிகள் யாரும்
பார்ப்பதுமில்லை; படிப்பதுமில்லை.

முன்பக்கம்

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. பறவைகளை பாராட்டுறிங்களா
  இல்லை யாரையாவது திட்டுரிங்களா

  அவங்க திருந்தவே மாட்டாங்கன்றது தெரிஞ்ச விசயம் தானே

  பதிலளிநீக்கு
 2. sorry mathav,
  you sound too simplistic, but in your dense poetic style! this won't drive home your reading of the whole situation. Your verses are on old school of philosophical lines with a traditional dose of irritation registered. You can do better on the same topic under the same well thought out caption. Hope you would try......


  s v venugopalan

  பதிலளிநீக்கு
 3. வேணு!

  ஒப்புக்கொள்கிறேன்.
  நேற்று காலையில் தினகரன், தினமலர் பத்திரிக்கைகளைப் பார்த்ததும்
  தோன்றியதுதான் இது.
  ஒபாமாவின் கட்சி சின்னம் கழுதை என்றும்,
  புஷ்ஷின் கட்சி சின்னம் யானை என்றும்,
  கழுதை யானையை ஜெயித்தது என்றும் வெளியான செய்தியிலிருந்துதான் துவங்கினேன்.
  ஏசு ஜெருசலேத்துக்குள் கழுதையில் அமர்ந்து நுழைந்ததும்,
  அப்போது விண்ணரசு சமீபத்தில் இருக்கிறது என்று முழங்கப்பட்டதும்
  புதிய ஏற்பாட்டில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது.
  அமெரிக்காவில் ஒபாமா வெற்றிக்கு கடைசி இரண்டு பக்கங்கள் முழுவதும்
  கலர் கலராய் போட்டோக்களும், செய்திகளும் போட்டு நம்ம ஊர் தினமலர் கொண்டாடியதில்
  வந்த எரிச்சல்தான் இந்தக் கவிதை.
  நீங்கள் சொன்னது போல, இதே கவிதையை இன்னும் நிதானமாகவும், ஆழமாகவும் எழுதலாம்.

  பதிலளிநீக்கு
 4. வால்பையன்!

  பறவையாய் நாம் வாழ வேண்டும் எனச் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அருமை

  வேணு அவர்களுக்கு நீங்கள் அளித்த பதிலில் இருந்துதான் கவிதையின் பொருள் புரிந்தது

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. பிரபு!

  நன்றி.

  கவிதை என்று குறிப்பிட்டதற்கு
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. கவீஷ்!


  வேணு அவர்களுக்கு எழுதிய என்னுடைய பதில் கமெண்ட்டைப் படித்துவிட்டு கவிதை(?)யைப் படித்துப் பார். அதற்கப்புறமும் புரியவில்லையென்றால் விட்டுவிடு. பாதகமில்லை.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!